December 2, 2024
Romantic, Charmimg மற்றும் Alluring பெயர்களில் புதிதாக மூன்று வகை சவர்க்காரங்களை அறிமுகப்படுத்தும் Enchanteur நிறுவனம்
செய்தி

Romantic, Charmimg மற்றும் Alluring பெயர்களில் புதிதாக மூன்று வகை சவர்க்காரங்களை அறிமுகப்படுத்தும் Enchanteur நிறுவனம்

Jan 19, 2024

உற்பத்தி துறையில் முன்னோடியான Enchanteur நிறுவனம் Romantic, Charmimg மற்றும் Alluring ஆகிய பெயர்களில் புதிதாக மூன்று சவர்க்கார வகைகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. நியாயமான விலையில் நீண்ட நேரம் நறுமணம் வீசக்கூடிய மேற்படி சவர்க்கார வகைகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தும் விழா அண்மையில் நடைபெற்றதோடு அதில் Wipro Consumer Care மற்றும் UTN நிறுவன வலையமைப்பைச் சேர்ந்த பல உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

சவர்க்கார உற்பத்தி துறைக்கு புதிய வடிவம் கொடுத்து வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை கொடுக்கும் வகையில் மேற்படி புதிய வகை சவர்க்காரங்கள் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை சந்தைக்கு தனித்துவமான மூன்று வகை சவர்க்காரங்களை அறிமுகப்படுத்த முடிந்துள்ளமை தொடர்பாக கருத்து தெரிவித்த UTN நிறுவன வலையமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு உதய நிஸ்சங்க “எமது இந்த புதிய வகை சவர்க்காரங்கள் மேனியை சுத்தப்படுத்துவதற்கு மேலதிகமாக நீண்ட நேரமாக நறுமணத்தை தக்க வைக்கும் வகையிலான புதிய உணர்வை தரக்கூடியது. குளிக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் இனிமையான தருணங்களாக்குவதற்கு வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதே எமது நோக்கமாகும்.” என குறிப்பிட்டார். இங்கு கருத்து தெரிவித்த Wipro Unza Overseas நிறுவனத்தின் வர்த்தக பிரிவு பிரதானி திரு அணில் கௌதம் Enchanteur இலங்கை சந்தைக்கு தனி முக்கியத்துவம் கொடுப்பதாகவும், பல தசாப்தங்களாக பல்வேறு உற்பத்திகளுடன் நீண்ட காலம் தக்க வைக்கும் நறுமணத்தின் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.”அப் பணியின் தொடர்ச்சியாக நியாயமான விலையில் மேற்படி புது வகை சவர்க்காரங்களை சந்தைக்கு அறிமுகப்படுத்த முடிந்துள்ளமையிட்டு நாம் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறோம்,” என அவர் மேலும் குறிப்பிட்டார். இப் புதிய வகை சவர்க்காரங்களை இப்பொழுது நாடெங்கிலுமுள்ள வர்த்தக நிலையங்களில் கொள்வனவு செய்ய முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *