Embilipitiya Stores Tool & Ceramic Manufacturing Private Limited தனியார் நிறுவனத்துக்கு ISO 9001:2015 தரச்சான்றிதழ்
Embilipitiya Stores Tool & Ceramic Manufacturing Private Limited தனியார் நிறுவனம், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ISO 9001:2015 தர முகாமைத்துவக் கட்டமைமைப்பு இணக்கச் சான்றிதழை வென்று இலங்கையின் கட்டிடப் பொருட்கள் மற்றும் உற்பத்தித் துறையில் தனது தலைமைத்துவத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. Eagle Group குழுமத்தின் இணை நிறுவனமான இந் நிறுவனத்துக்கு, உலகின் முன்னணி சோதனை, ஆய்வு, தர உறுதி மற்றும் சான்றளிப்பு நிறுவனமான SGS குழுமத்தின் துணை நிறுவனமான SGS Lanka Pvt Ltd நடத்திய கணக்காய்வுச் செயல்முறையைத் தொடர்ந்தே இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது..
1960-களில் திரு. சீமன் பெரேராவால் எம்பிலிப்பிட்டியவைத் தளமாகக் கொண்டு நிறுவப்பட்ட இந்த நிறுவனம், 65 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையின் கட்டிட மற்றும் கட்டுமானத் துறையில் நம்பகமான உள்நாட்டு உற்பத்தி பிராண்டாக உருவெடுத்துள்ளது. தற்போதைய நிர்வாக இயக்குநர் திரு. உதயநாத் பெரேராவின் தலைமையில், இந்நிறுவனம் தற்போது ஒரு பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. “Eagle” பிராண்டின் கீழ் ஆணிகள், முள் கம்பி, Binding Wire, J Hook, L Hook, U Hook, Welding Rod, Skim Coat, Tile Mortar, டோலமைட் உரம் மற்றும் செரமிக் துப்புரவேற்பாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட பொருட்களை உள்நாட்டு சந்தைக்கு வழங்கும் இந்நிறுவனம், உள்நாட்டில் உற்பத்திச் செய்யப்பட்ட செராமிக் பொருட்களுக்கு 25 ஆண்டு உத்தரவாதத்தை வழங்குகிறது. இந்நிறுவனம், துப்புரவேற்பாட்டு பொருள் வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல், Skim Coat மற்றும் Tile Mortar உற்பத்தி, மற்றும் கம்பி தொடர்பான பொருட்கள் மற்றும் Oxygen Welding Rod உற்பத்தி ஆகியவற்றிற்காக ISO 9001:2015 தரநிலைக்கு இணங்குவதாகச் சான்றளிக்கப்பட்டுள்ளது. இந்த சர்வதேச தரச் சான்றிதழின் மூலம், தமது உற்பத்திகளின் தரம் மற்றும் தரப் பண்புகளை மேலும் மேம்படுத்தவும், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் Eagle பிராண்டை மேலும் வலுப்படுத்தவும் நோக்கமாகக் கொண்டிருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

