Dyvesta நிறுவனத்துக்கு சிறந்த வணிகத்துக்கான உயர் தேசிய விருது
விலங்குகள் நலன் மற்றும் ஊட்டச்சத்துத் துறையில் முன்னணியில் திகழும் Farmchemie மற்றும் Feedchemie நிறுவனங்களின் தாய் நிறுவனமான Dyvesta, 2026 ஆம் ஆண்டுக்கான உயர் தேசிய வர்த்தக சிறப்பு விருது விழாவில், கால்நடைத் துறையில் தனித்துவமான தடத்தை பதிக்கும் வகையில், சிறந்த வணிகத்துக்கான அதன் உயர் சிறப்பு விருதை வென்றுள்ளது. மேலும், உள்நாட்டுச் சந்தை அணுகலில் சிறந்து விளங்குவதற்கான இரண்டாம் இடத்தைப் பெற்றதன் மூலம், இந்நிறுவனம் இத்துறையில் தனது தலைமைத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கை தேசிய வணிகச் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது வழங்கும் விழா, கொழும்பு ஷங்ரி-லா ஹோட்டலில் நடைபெற்றது. விலங்குகள் நலன் துறையில் ஒரு வலுவான வர்த்தகக் குழுவாக நிறுவப்பட்டுள்ள Dyvesta குழுமமானது, Farmchemie (Pvt) Ltd, Farmchemie Manufacturers (Pvt) Ltd மற்றும் Feedchemie (Pvt) Ltd ஆகிய நிறுவனங்களை கொண்டுள்ளது. இந்த நிறுவனங்கள் புதுமை, நிலைத்தன்மை மற்றும் உலகளாவிய போட்டித்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகள் இரண்டிலும் ஒரு வலுவான நற்பெயரை உருவாக்கியுள்ளன. 24 ஆண்டுகால வெற்றிகரமான வரலாற்றைக் கொண்ட Farmchemie, இலங்கையின் விலங்குகள் நலன் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளதுடன், தனது வர்த்தகத்தை சர்வதேச சந்தைக்கும் விரிவுபடுத்தியுள்ளது. இந்நிறுவனம் கால்நடை சுகாதாரப் பொருட்கள், கால்நடை மருந்துகள் மற்றும் கால்நடை தீவனச் சேர்க்கைப் பொருட்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துகிறது, மேலும் தனது முதன்மை பிராண்டான Farmstar பெயரில் பொருட்களை விற்பனை செய்கிறது.
2018 முதல், Farmchemie தனது உற்பத்திகளை இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், குவைத், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், லெபனான், ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, தாய்லாந்து, வியட்நாம், மலேசியா, மொங்கோலியா, கம்போடியா, உகாண்டா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. 2025-ல், இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் முதல் ஐந்து நிறுவனங்களில் ஒன்றாக இந்நிறுவனம் இணைந்தது. ஒரு காலத்தில் இறக்குமதியை முழுமையாகச் சார்ந்திருந்த ஒரு துறையில் சந்தைத் தலைமைத்துவத்தை அடைவது என்பது ஒரு வணிகச் சாதனை மட்டுமல்ல, நாட்டின் பொருளாதார சுதந்திரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லும் ஆகும் என Dyvesta குழுமத்தின் தலைவர் உதித வனிகசிங்க தெரிவித்தார். சர்வதேசத் தரநிலைகளுக்கு இணங்க உள்நாட்டில் உற்பத்தி செய்வதன் மூலம், Farmchemie இலங்கையின் கால்நடை சுகாதாரத் துறையைத் தன்னிறைவு அடையச் செய்துள்ளது என்றும், அதன் மூலம் விவசாயிகளுக்கு மலிவு விலையில் தரச் சான்றளிக்கப்பட்ட தீர்வுகளை வழங்கி, இறக்குமதிக்காகச் செலவிடப்படும் அந்நியச் செலாவணியைக் குறைத்து தேசியப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்குப் பங்களித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். உள்ளூர் சந்தையில் ஒரு வலுவான அடித்தளத்துடன், நிறுவனம் உலகளாவிய போட்டித்தன்மைக்கான அடித்தளத்தை அமைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். FAMI-QS (Feed Additives and Pre-mixture Quality System) சான்றிதழைப் பெற்ற இலங்கையின் முதலாவது கால்நடை சுகாதார நிறுவனம் Farmchemie ஆகும். இந்த சர்வதேச சான்றிதழ், ஐரோப்பா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா போன்ற முக்கிய சந்தைகளில் நுழைவதற்கான வாய்ப்புகளை நிறுவனத்திற்குத் திறந்துவிட்டுள்ளது. Farmchemie, SGS நிறுவனத்தால் ISO 9001:2015, கால்நடை மருந்துகளுக்கான WHO-GMP மற்றும் Good Animal Feeding Practices களுக்கான GMP சான்றிதழ்களைப் பெற்றுள்ளது. நிலையான கால்நடை சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து தீர்வுகளை உலகெங்கிலும் உள்ள சந்தையில் அறிமுகப்படுத்துவதன் மூலம் தனது உலகளாவிய சந்தை வரம்பை மேலும் விரிவுபடுத்துவற்கு Dyvesta உறுதிபூண்டுள்ளது.

