September 8, 2024
Vcare Skin Clinicமற்றும் அதன் ஸ்தாபகர் டாக்டர் பிரமிளா ரணசிங்கவுக்கு BWIOமற்றும் Asia Miracle விருதுகள்
செய்தி

Vcare Skin Clinicமற்றும் அதன் ஸ்தாபகர் டாக்டர் பிரமிளா ரணசிங்கவுக்கு BWIOமற்றும் Asia Miracle விருதுகள்

Jul 21, 2024

இலங்கையின் முன்னணி அழகு கலை சிகிச்சையகமான Vcare Skin Clinic மற்றும் அதன் ஸ்தாபகரும் தலைமை நிறைவேற்று அதிகாரியுமான டாக்டர் திருமதி பிரமிளா ரணசிங்கவுக்கு  Business World International Organization ஏற்பாடு செய்த BWIO விருது விழாவில் சுகாதாரம் மற்றும் அது சார்ந்த சேவைகள் பிரிவின் சிறந்த தொழில் வல்லுநருக்கான விருதும் Vcare Skin Clinic ஆண்டின் சிறந்த அழகு கலை சிகிச்சையகத்துக்கு ஆண்டின் சிறந்த தொழில்முயற்சிக்கான பிளெடினம் விருதும் வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அவர்களின் தலைமையில் கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற மேற்படி விருது விழாவில் அமைச்சர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் கலைஞர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். MUGP International அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட Asia Miracle 2024 விருது விழாவிலும் ஆண்டின் சிறந்த அழகு கலை சிகிச்சையக வர்த்தகநாமம் என்ற விருதை Vcare Skin Clinic வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆண் பெண் இருபாலாரினதும் சருமம், தலை முடி மற்றும் மேனிக்கு நவீன தொழில்நுட்பத்தின் துணையுடன் மருத்துவ மற்றும் அழகு கலை சிகிச்சைகளை வழங்கும்  Vcare Skin Clinic தற்பொழுது இத் துறையில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. அந்த சகல சிகிச்சைகளும் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தர நியமங்களுக்கமைய மேற்கொள்ளப்படுவதால் அவர்களால் மிகக் குறுகிய காலப்பகுதியில் வாடிக்கையாளர்களின் நம்பிகையை வெல்லவும் துரித வளர்ச்சியை அடையவும் முடிந்துள்ளது. MBBS மற்றும் BAMS பட்டதாரி மருத்துவர்களை கொண்ட Vcare Skin Clinic இல் சேவையாற்றும் இயன் மருத்துவர்கள் உள்ளிட்ட சகல தொழில் வல்லுநர்களும் ஆகச் சிறந்த தொழில் மற்றும் கல்வித் தகைமைகளை பூர்த்தி செய்தவர்களாவர். Vcare Skin Clinic இன் தனித்துவமான வெற்றிக்கு ஏதுவான காரணி டாக்டர் திருமதி பிரமிளா ரணசிங்கவின் சிறப்பான தலைமைத்துவமாகும்.  சிறந்த பெறுபேறுகளை அடைவதற்கு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அவர் Vcare Skin Clinic வழங்கும் சிகிச்சைகளின் தரத்தை சர்வதேச மட்டத்தில் பேணி வருகிறார். இந்நிறுவனத்துக்கு வருகைத் தரும் சகலருக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் திருப்திகரமான அனுபவத்தை உறுதிப்படுத்தி அந்தந்த வாடிக்கையாளரின் தனித்தனி தேவைகளுக்கேற்ப சேவைகளை வழங்குவதற்கு Vcare Skin Clinic நடவடிக்கை எடுத்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *