June 2, 2026
DB Automation நிறுவனம் Zebra Technologies நிறுவனத்தின்Partner of the Year விருதை வென்றுள்ளது
செய்தி

DB Automation நிறுவனம் Zebra Technologies நிறுவனத்தின்Partner of the Year விருதை வென்றுள்ளது

Jun 2, 2026

இலங்கையில் மிகப் பெரிய அளவில் இயங்கும் Zebra Technologies நிறுவனத்தின் இணை நிறுவனமான  DB Automation நிறுவனம் “Partner of the Year” ‘ விருதைப் பெற்றுள்ளது. இது, வணிகத் தொழில்நுட்பம், தானியக்கம் மற்றும் டிஜிட்டல் உருமாற்றத் துறைகளில் அந்நிறுவனம் கொண்டுள்ள முதன்மை இடத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது. இந்த விருதானது, புத்தாக்கம், தொழில்முறைச் சிறப்பு மற்றும் வாடிக்கையாளர் மையச் சேவை வழங்கல் ஆகியவற்றில் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும், Zebra Technologies உடனான அதன் வலுவான வணிகக் கூட்டாண்மையையும் பிரதிபலிப்பதாக உள்ளது. வணிக நுண்ணறிவு மற்றும் நிறுவனச் சொத்து நுண்ணறிவுத் தீர்வுகளை வழங்கும் ஒரு முன்னணி உலகளாவிய நிறுவனமான Zebra Technologies உடனான இந்தக் கூட்டாண்மை மூலம் DB Automation இலங்கையில் உள்ள பல நிறுவனங்களுக்கு அதிநவீன தொழில்நுட்பத் தீர்வுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

DB Automation நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள தானியங்கு மற்றும் அறிவார்ந்த வணிகத் தீர்வுகள் Supply Chain Visibility, Inventory Accuracy, Workforce Productivity மற்றும் Data Capture Systems போன்ற துறைகளில் பல்வேறு உள்ளூர் வணிகங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைய உதவியுள்ளன. Retail, Logistics, Manufacturing, Warehousing, Healthcare மற்றும் Distribution ஆகிய துறைகளில் செயற்படுகின்ற நிறுவனங்களுக்கு நவீன Mobility, Tracking மற்றும் Automation தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் DB Automation இலங்கையின் Enterprise Technology துறையில் ஒரு நம்பகமான நாமமாக உருவெடுத்துள்ளது. இந்தச் சாதனை குறித்து கருத்து தெரிவித்த DB Automation நிர்வாகம், தங்களது வாடிக்கையாளர்களுக்கு உயர்தர சேவையை வழங்குவதில் தங்களது குழுவின் அர்ப்பணிப்பு, தொழில்முறை மற்றும் தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவே இந்த விருது என தெரிவித்துள்ளது. மேலும், . Zebra Technologies உடனான தனது வலுவான கூட்டாண்மை மூலம், புதுமையின் அடிப்படையில் எதிர்காலத்தை நோக்கிய தொழில்நுட்பத் தீர்வுகளைச் சந்தையில் அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வணிகங்கள் டிஜிட்டல் மாற்றம் மற்றும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்களை நோக்கி அதிகளவில் திரும்பும் இந்தக் காலகட்டத்தில், நிறுவனங்களின் வினைத்திறன், உற்பத்தித்திறன் மற்றும் நீண்டகால வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, மதிப்பு அடிப்படையிலான நவீன தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்குவதில் DB Automation தொடர்ந்து உறுதியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close