May 2, 2026
Cap Snap Lanka தனியார் நிறுவனம், ISO-FSSC 22000 உள்ளிட்ட சர்வதேச அங்கீகாரம் பெற்ற 6 சான்றிதழ்களை வென்று சாதனை
செய்தி

Cap Snap Lanka தனியார் நிறுவனம், ISO-FSSC 22000 உள்ளிட்ட சர்வதேச அங்கீகாரம் பெற்ற 6 சான்றிதழ்களை வென்று சாதனை

May 2, 2026

CSL குழுமத்துக்குச் சொந்தமான Cap Snap Lanka தனியார் நிறுவனம், ISO-FSSC 22000 உள்ளிட்ட சர்வதேச அங்கீகாரம் பெற்ற 6 சான்றிதழ்களைப் பெற்றுள்ளது. இந்நிறுவனம் இந்த அனைத்து சான்றிதழ்களையும் வெறும் ஆறு மாத காலத்திற்குள் பெற்றுள்ளமை தனித்துவமானதொரு சாதனை ஆகும். இது தரம், பாதுகாப்பு மற்றும் உயர் சிறப்புக்கு Cap Snap Lanka கொண்டுள்ள வலுவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது. Bureau Veritas Sri Lanka இன் இலங்கைக்கான பொது முகாமையாளர் திரு ஷான் நாணாயக்கார மற்றும் அவரது குழுவினரால் Cap Snap Lanka நிறுவனத்துக்கு மேற்படி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், நிறுவனத்தின் வரலாறு மற்றும் செயல்பாடுகள் குறித்த விரிவான விளக்கக்காட்சி அளிக்கப்பட்டதுடன், ப்ளாஸ்டிக் மற்றும் திடப் பொதியிடல் துறையில் நிறுவனத்தின் 20 ஆண்டுகாலப் பயணத்தைக் காட்டும் காணொளியும் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில், தலைமை நிறைவேற்று அதிகாரி திரு. ரிஸ்வான் ஜலீலும் கலந்துகொண்டார். நிறுவனத்தின் தலைவர் திரு. அனுரா குமாரசிங்க, முகாமைத்துவப் பணிப்பாளர் திரு எம்.எச்.எம் ஃபஸால், பணிப்பாளரும் தலைமை நிறைவேற்று அதிகாரியுமான திரு ஃபாரிஹ் பஸால் மற்றும் பணிப்பாளரும் ஆலோசகருமான  திரு. ஹியூ இந்திரஜித் ஆகியோருக்கு இந்த சான்றிதழ்கள் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டன.

இந்நிறுவனம் பெற்ற சான்றிதழ்களில் ISO 9001:2015 (Quality Management), ISO 14001:2015 (Environmental Management), Good Manufacturing Practices (GMP), Hazard Analysis and Critical Control Points (HACCP), ISO 22000:2018 (Food Safety Management) மற்றும் GFSI  தரத்துக்குட்பட்ட FSSC 22000 Version 6 அடங்கும். இந்தச் சான்றிதழ்களைப் பெறும் செயல்முறைக்குப் பங்களித்த IM Production, SBM Production, Stores, Warehouse and Logistics, Maintenance, Engineering Workshop, Sales and Marketing, Commercial, Finance, Human Resources, Factory Administration, Quality Assurance, Quality Compliance மற்றும் Digital Marketing ஆகிய 14 துறைகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும்,  ISO-FSSC இணக்கத்திற்கான சான்றளிக்கப்பட்ட உள்ளக கணக்காய்வாளராக தனித்துவமான பங்களிப்பை வழங்கிய பணியாட்டொகுதி அங்கத்தவர்களுக்கு உள்ளகக் காணக்காய்வு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை பணிப்பாளர் திரு. ஃபயாஸ் ஃபஸால், திரு. அசிதா குமாரசிங்க, திருமதி. ஆஷா குமாரசிங்க மற்றும் நிறுவனச் செயலாளர் திரு. ஃபிரோஸ் சமீர் ஆகியோர் வழங்கினர்.

CSL குழுமத்திற்கும் Bureau Veritas Sri Lanka இற்கும் இடையிலான உத்தியோகப்பூர்வ கூட்டாண்மையைக் குறிக்கும் வகையில் திரு. ஷான் நாணாயக்காரவுக்கு நினைவுப் படிகமொன்று வழங்கப்பட்டது. அதே நேரத்தில், Halcyon Lanka உடனான கூட்டாண்மைக்காக திரு. ரசித நிரோஷண மற்றும் அவரது குழுவினருக்கும் நினைவுப் படிகமொன்று வழங்கப்பட்டது. ஜூன் 2003-ல் நிறுவப்பட்ட Cap Snap Lanka நிறுவனம் ப்ளாஸ்டிக் பொதியிடல் தீர்வுகளை வழங்கும் முன்னணி உற்பத்தி நிறுவனமாகும். இந்நிறுவனம் PET பாட்டில்கள் மற்றும் கொள்கலன்கள், பாலிபுரோப்பிலீன் மற்றும் பாலிகார்பனேட் பாட்டில்கள், மூடிகள், மூடல்கள் மற்றும் PET ப்ரீஃபார்ம்களை உற்பத்தி செய்கிறது. அதன் சகோதர நிறுவனங்களின் ஒன்றான American Polymers இனால் பெயிண்ட், மருந்து, பால் உற்பத்திகள், பானம் மற்றும் சலவைத் தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு திடமான பொதியிடல் தீர்வுகளை வழங்குகிறது. ஹோமாகம மற்றும் ஆட்டிகலவில் அமைந்துள்ள 500,000 சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவை கொண்ட இரண்டு தொழிற்சாலைகளை மையப்படுத்தி இயங்கி வரும் Cap Snap Lanka 1,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ளதோடு இலங்கை முழுவதும் 250-க்கும் மேற்பட்ட பிராண்டுகளுக்கு ஆதரவளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close