
C – Four நிறுவனம் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் SLIM பதக்க விருதை வென்று சாதனை
நுளம்பு வலை உற்பத்தியில் இலங்கையின் முதன்மையானதும் மக்கள் நனமதிப்பை பெற்றதுமான நாமமாக தடம் பதித்துள்ள C – Four நிறுவனம் தமது அசுர வளர்ச்சியை மீண்டுமொரு தடவை நிரூபிக்கும் வகையில் SLIM SMEDA 2025 விருது விழாவில் ஜவுளி, ஆடைகள் மற்றும் வடிவமைப்பு பிரிவின் தங்கப் பதக்க விருதை வென்றுள்ளது. கொழும்பு கிராண்ட் மொனாஷ் ஹோட்டலில் நடைபெற்ற மேற்படி விருது விழா இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகத்தினால் (SLIM) வருடாந்தம் நடாத்தப்படுகிறது. C – Four நிறுவனம் மேற்படி தங்கப் பதக்க விருதை 2022 ஆம் ஆண்டிலும் வென்ற நிலையில் இந்த ஆண்டும் வென்றுள்ளமை அந் நிறுவனத்துக்கு கிடைத்த மிகச் சிறந்த வெற்றியாகும். அந்த வகையில் தொடர்ச்சியாக தேசிய அங்கீகாரத்தை பெற்று வரும் நிறுவனமாக C – Four நிறுவனம் மாறியுள்ளது.
இலங்கையர்களுக்கு அச்சமின்றி நிம்மதியான, ஆரோக்கியமான தூக்கத்தை பெற்றுத் தரும் உயர் தரத்திலான நுளம்பு வலையை நியாயமான விலையில் வழங்கும் நோக்கத்துடன் 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட C – Four நிறுவனம் (www.cfour.lk) தற்பொழுது NOVA, SUPER FIT, BUTTERFLY, BOXER மற்றும் பௌத்த பிக்குகளுக்கான வணக்கத்துக்குரிய புனித வலைகள் உள்ளிட்ட பரந்துபட்ட வகையிலான நுளம்பு வலைகளை உற்பத்தி செய்யும் பெரும் தொழில்முயற்சியாக வளர்ச்சி அடைந்துள்ளது. நாடெங்கிலும் 300,000 இற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களையும் 1,500 இற்கும் மேற்பட்ட விற்பனை முகவர் வலையமைப்பையும் C – Four நிறுவனம் கொண்டுள்ளது. உயர் தரத்திலான மூலப்பொருட்கள் பாவனை, நீண்ட கால உழைப்பு, அழகிய பொதியிடல் செயன்முறைகள், கடும் தரக் கட்டுப்பாட்டு முறைமைகள் மற்றும் ஆக்கத்திறன்மிக்க புத்தாக்கங்கள் காரணமாக நம்பகரமான வர்த்தகநாமமாக C – Four நிறுவனம் புகழ் பெற்றுள்ளது. 2019, 2020, 2022 ஆம் ஆண்டுகளில் சப்பிரகமுவ மாகாணத்தின் சிறந்த தொழில்முயற்சியாளருக்கான வெள்ளிப் பதக்க விருதுகளையும் வென்றுள்ளது. இன்றளவில் C – Four வர்த்தகநாமத்தை சர்வதேச வர்த்தகநாமமாக மாற்றுவதற்கு பரந்துபட்ட நடவடிக்கைகளுக்கு நிறுவனம் தயாராகி வருகிறது. “நாம் உற்பத்தி செய்யும் நுளம்பு வலைகள் வெறும் நுளம்பு வலைகள் மாத்திரமல்ல. மாறாக சொகுசான, அச்சமில்லா, ஆரோக்கியமான, மேலான தூக்கம் தொடர்பான எமது அன்பான வாடிக்கையாளர்களைகளின் நம்பிக்கையையே நாம் உருவாக்குகிறோம்.” என C – Four நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு சிந்தக்க சில்வா தெரிவித்தார்.