July 19, 2026
BWIO விருது விழாவில் கலாநிதி கே், புத்திமா இந்து அபேகுணவர்தனவுக்கு Women Icon of the Year விருது
செய்தி

BWIO விருது விழாவில் கலாநிதி கே், புத்திமா இந்து அபேகுணவர்தனவுக்கு Women Icon of the Year விருது

Jul 19, 2026

இலங்கை ஆடைத்தொழில் துறைக்கு அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பு, செயல்பாட்டுச் சிறப்பு, புத்தாக்கம் மற்றும் பெருநிறுவனத் தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக, Business World International Organization அமைப்பு ஏற்பாடு செய்து, மவுண்ட் லவினியா ஹோட்டலில் நடைபெற்ற BWIO 2026  2026 விருது வழங்கும் விழாவில், கலாநிதி கே.ஏ. புத்திமா இந்து அபேகுணவர்தனவுக்கு ‘ஆண்டின் சிறந்த பெண் ஆளுமை 2026’ எனும் விருது வழங்கப்பட்டது. ஆடைக் கைத்தொழில் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள கலாநிதி அபேகுணவர்தன, சரக்கு முகாமைத்துவம், மூலப்பொருள் கொள்முதல் முகாமைத்துவம், செயல்பாடுகள், விநியோகச் சங்கிலி முகாமைத்துவம், Lean Enterprise, செயல்முறைச் சிறப்பு, Customer Interface மற்றும் வணிக மாற்றம் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். அவர் தற்போது ஒரு முன்னணி ஆடை நிறுவனமொன்றில் Consultant – Process Excellence, Customer Interface ஆக பணியாற்றி வருகிறார். மேலும், இவர் இரண்டு ஆண்டுகளாக AIA Sri Lanka இன் District Wealth Planner (MDRT International) அங்கீகாரத்தை பெற்றுள்ளதோடு நிலையான வணிகக் கருத்துக்களை ஊக்குவிக்கும் Blues of Nature அமைப்பின் இணை நிறுவனராகவும் விளங்குகிறார்.

Diploma in Childcare and Psychology பாடநெறியை சிறப்புத் தேர்ச்சியுடன் பூர்த்தி செய்துள்ள இவர், அதற்கு மேலதிகமாக அமெரிக்காவின் Abraham Lincoln University இல் வணிக நிர்வாகப் பிரிவில் கௌரவ முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.  Sri Lanka Institute of Apparel and Textile Technology (SLITA) இல் டிப்ளோமா பாடநெறியையும் Edith Cowan University இடமிருந்து MBA (International) பட்டப்படிப்பையும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து வணிக நிர்வாகத்தில் இளங்கலை அறிவியல் பட்டத்தையும், Chartered Institute of Marketing (CIM–UK)  நிறுவனத்திடமிருந்து பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவையும்  பெற்றுள்ளார். மேலும், அவர் ஒரு Chartered Marketer சந்தைப்படுத்துநருமாவார். அத்துடன், Lean Enterprise, Supply Chain Management மற்றும் Quality Improvement  ஆகிய பல்வேறு தொழில்முறை சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். இவருடைய தொழில் வாழ்க்கையில் MAS Game Changer Innovation Award, Kaizen Awards, National Gold Awards for Quality and Productivity மற்றும் MDRT சர்வதேச அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார். BWIO Women Icon of the Year 2026 விருது இவருடைய ஆகச் சிறந்த தொழில் வாழ்க்கையின் தனித்துவமானதொரு மைல்கல் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close