November 22, 2024
இரண்டு தேசிய உயர் தொழில்முயற்சி விருதுகளை வென்றுள்ள BIMT Campus
செய்தி

இரண்டு தேசிய உயர் தொழில்முயற்சி விருதுகளை வென்றுள்ள BIMT Campus

Aug 1, 2024

இலங்கையின் முன்னணி தனியார் உயர்கல்வி நிறுவனமான British Institute of Management and Technology (BIMT) நிறுவனம் தேசிய வணிகச் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய உயர் தொழில்முயற்சிகள் விருது விழாவில் கல்விச் சேவைகள் மற்றும் சிறிய தொழில்முயற்சிகள் என இரு பிரிவுகளிலும் இரண்டு விருதைகளை வென்று சாதனை படைத்துள்ளது. BIMT நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஏ.ஜே.பர்ஹான், உப தலைவர் கலாநிதி சேத்தனா தாபரே மற்றும் நிதி பணிப்பாளர் வத்சலா சத்துரங்கி ஆகியோர் மேற்படி விருது விழாவில் கலந்து கொண்டனர். WSO2 உள்ளிட்ட பல்வேறு முன்னணி தொழில்முயற்சிகளின் ஸ்தாபகரும் தலைமை நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி சஞ்சீவ வீரவர்ண அவர்களின் தலைமையில் விருது விழா நடைபெற்றது. தர முகாமைத்துவம் தொடர்பான ஐரோப்பா சங்கம் (EFQM) வடிவமைத்துள்ள அமெரிக்காவின் Malcolm Baldrige விருதுகளுக்கு அடிப்படையாக கொள்ளும் பிரமாணங்களை அடிப்படையாக கொண்டு இதன் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

BIMT Campus நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி பர்ஹான் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், அர்ப்பணிப்புடன் உழைத்து வரும் BIMT குழுவினர் இந்த வெற்றியின் பிரதான பங்களாளர்கள் எனக் குறிப்பிட்டார். 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் மிகக் குறுகிய காலத்திலேயே துரித வளர்ச்சியை அடைந்திருக்கின்றது. சர்வதேச தர நியமங்களுக்கமைய புத்தாக்க கற்பித்தல் செயன்முறைகளை பின்பற்றும் மேற்படி நிறுவனம் டிப்ளோமா, முதல் பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு மற்றும் முனைவர் பட்டப்படிப்பு என பரந்துபட்ட கல்வி தகைமைகளை வழங்குகிறது.  சர்வதேச அளவில் தொடர்ச்சியாக இடம்பெறும் மாற்றங்களுக்கேற்ற வகையில் மேற்படி பட்டப்படிப்பு பாடநெறிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ISO சர்வதேச தரச் சான்றிதழை வென்றுள்ள BIMT Campus இலங்கை மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழில் கல்வி ஆணைக்குழுவின் அங்கீகாரத்தை பெற்றதொரு நிறுவனமாகும். அவர்கள் சர்வதேச ரீதியாக எட்டியுள்ள வலுவான ஒத்துழைப்பு ஊடாக அங்கு கல்வி கற்கும் மாணவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற கல்வித் தகைமைகளை பெறவும், சர்வதேச மட்டத்திலான தொழில் வாய்ப்புகளை பெறவும் முடியும். உயர் தரத்திலான கல்வித் தகைமைகளை பெறுவதற்கு எதிர்பார்க்கும், குறித்த வயதெல்லையை பூர்த்தி செய்த அனைவருக்கும் BIMT Campus நிறுவனத்துடன் இணைய முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *