
Healthguard Distribution, இலங்கையில் Cipla நிறுவனத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்த Breathe Free Lanka உடன் கைகோர்த்துள்ளது
Sunshine Holdings PLC இன் மருந்து விநியோகப் பிரிவான Healthguard Distribution, முன்னணி உலகளாவிய மருந்து நிறுவனமான Cipla லிமிடெட்டின் முழுமையான அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான Breathe Free Lanka (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்துடன் சமீபத்தில் கைகோர்த்துள்ளது. Cipla இலங்கையின் மூன்றாவது பெரிய மருந்து நிறுவனமாகும், மேலும் இந்த கூட்டு முயற்சி Ciplaவின் தயாரிப்புகளை நுகர்வோருக்கு மேலும் அணுகலாகவும் பரவலாகவும் கிடைக்கச் செய்வதற்கான ஒரு முக்கியமான படியாக கருதப்படுகிறது. மேலும், இந்த கூட்டு முயற்சி நாடு முழுவதும் உயர்தர சுகாதார சேவை தீர்வுகளை வழங்குவதற்கான Healthguard Distribution இன் அர்ப்பணிப்பையும் வலுப்படுத்துகிறது.
இந்த கூட்டு முயற்சி குறித்து கருத்து தெரிவிக்கையில், Healthguard Distributionஇன் பிரதம நிறைவேற்று அதிகாரியும் நிறைவேற்று பணிப்பாளருமான ஷான் பண்டார, “நாடு முழுவதும் Ciplaவின் தயாரிப்புகளுக்கு பரவலான அணுகலை வழங்குவதற்காக Breathe Free Lanka உடன் இணைந்து செயல்படும் வாய்ப்பைப் பெறுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். மேலும், அனைத்து இலங்கையர்களுக்கும் உயர்தர மருந்துகளைப் பெறுவதற்கான பரவலான அணுகலை வழங்குவதற்கான ஒற்றை நோக்கத்துடன் செயல்படுவதற்கு, மருந்து துறையில் அதிக அனுபவம் மற்றும் நுகர்வோரின் நம்பிக்கையைப் பெற்ற இரண்டு வர்த்தக நாமங்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான தருணமாக இதைக் குறிப்பிடலாம். மருந்துகள் தொடர்பான பொறுப்பு மிகவும் கடுமையானது என்பதை உணர்ந்துகொண்ட Healthguard Distribution, நாடு முழுவதும் பரவியுள்ள வலுவான விநியோக அமைப்பு மற்றும் மருந்துகளை சரியான வெப்பநிலையில் வைத்திருக்க சிறப்பு களஞ்சியசாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், அரசாங்கத்தின் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி, மருந்துகள் மற்றும் சுகாதார சேவை தயாரிப்புகளை பாதுகாப்பாக மருந்தகங்களுக்கு விநியோகிப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். இலங்கையில் மருந்து விநியோகம் மற்றும் சுகாதார சேவை சிறப்பு பற்றிய புதிய தரங்களை நிர்ணயிப்பதே இந்த கூட்டு முயற்சியின் நோக்கமாகும்.” என தெரிவித்தார்.