TikTok மூலம் கொழும்பு இனிப்புப் பிரியர்களின் மனதை வென்ற Caramello
மழையோ வெயிலோ, கொழும்பிலுள்ள இனிப்புப் பிரியர்களின் ஆசைக்கு எதுவும் தடையாக இருப்பதில்லை. குறிப்பாக, கெரமல் புடிங் (Caramel Pudding) சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்படும்போது, நகரவாசிகளைத் தன்பால் ஈர்க்கும் ஒரு விசேட இனிப்பு வண்டியே ‘கெரமெல்லோ’ (Caramello). ஒரு சாதாரண இனிப்புப் பண்டத்தை கொழும்பு முழுவதும் உள்ள இனிப்புப் பிரியர்கள் விரும்பும் ஒரு பிரபலமான வர்த்தக நாமமாக மாற்றியதில் TikTok தளம் பெரும் பங்கு வகித்துள்ளது.
உள்நாட்டு வணிகங்களை ஊக்குவிக்கும் #ShopLocalWithTikTok முன்னெடுப்பின் ஊடாக, இலங்கையில் தமக்கென ஒரு முத்திரையைப் பதித்து வரும் இத்தகைய உள்ளூர் முயற்சிகள் வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்படுகின்றன. ஒரு சிறிய உள்ளூர் சுவை எவ்வாறு பரவலான அங்கீகாரத்தைப் பெற்ற வர்த்தக நாமமாக மாற முடியும் என்பதற்கு, கெரமல்லோவின் இனிமையான பயணம் ஒரு சிறந்த சான்றாகும்.
சமூக வலைத்தளங்களில் ஏற்படும் ஒரு சாதாரண ட்ரெண்ட், சரியான சிந்தனையும் முயற்சியும் இணையும்போது ஒரு வெற்றிகரமான வணிகமாக உருவெடுக்கும் என்பதற்கு மொஹமட் ஆரம்பித்த ‘கெரமெல்லோ’ சிறந்த உதாரணமாகும். TikTok தளத்தில் கெரமல் புடிங் காணொளிகள் வைரலாகப் பரவத் தொடங்கியபோது, மொஹமட் அதனை வெறும் இணையத்தில் வைரலாகும் வீடியோவாக மட்டும் பார்க்காமல், ஒரு சிறந்த வர்த்தக வாய்ப்பாகக் கருதினார். தனது உறவினர் ஒருவரின் ஆதரவுடன் ‘கெரமெல்லோ’ வணிகத்தை ஆரம்பித்த அவர், கொழும்பு மக்களிடமிருந்து இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கவில்லை. ‘எவ்வித அதீத எதிர்பார்ப்புமின்றி மிக எளிமையான அளவிலேயே நாங்கள் இதனை ஆரம்பித்தோம். ஆனால், முதல் நாளிலிருந்தே கொழும்பு வாடிக்கையாளர்களிடமிருந்து எமது எதிர்பார்ப்பையும் தாண்டிய மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது’ என மொஹமட் தெரிவித்தார்.
இருப்பினும், தற்காலிகப் பிரபலத்தை மட்டுமே நம்பியிருக்காமல், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு நிலையான வர்த்தக நாமமாக கெரமல்லோவைக் கட்டியெழுப்ப மொஹமட் விரும்பினார். கெரமல்லோ என்பது வெறுமனே டிரெண்டிங்கில் இருக்கும் ஒரு பொருளை விற்பனை செய்வது மட்டுமல்ல. கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, எமது தயாரிப்புகளை விரும்பும் விசுவாசமான வாடிக்கையாளர் சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்’ என அவர் குறிப்பிடுகிறார்.
கெரமெல்லோவைப் பொறுத்தவரை, TikTok தளத்தின் தாக்கம் வெறும் பார்வைகளுடன் நின்றுவிடாமல் நேரடி விற்பனையாகவும் மாறியுள்ளது. மக்கள் உண்மையிலேயே ரசித்துப் பார்க்கக்கூடிய சுவாரசியமான காணொளிகளை உருவாக்க வேண்டும் என்பதில் மொஹமட் கவனம் செலுத்தினார். ‘எமது காணொளிகளுக்கு வைரலாகும் ஆற்றல் இருப்பதாக நான் நம்பினேன். எனவே, கெரமெல்லோவை விளம்பரப்படுத்துவது மட்டுமன்றி, மக்கள் விரும்பிப் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த காணொளிகளை உருவாக்குவதே எனது நோக்கமாக இருந்தது’ என அவர் கூறினார். இன்று, வாடிக்கையாளர்கள் கெரமெல்லோ வண்டி இருக்கும் இடத்தைக் கண்டறியவும், திறந்திருக்கும் நேரங்களைத் தெரிந்துகொள்ளவும், ஓடர்கள் குறித்து விசாரிக்கவும் TikTok தளத்தையே பயன்படுத்துகின்றனர். இது இணையத்தில் காணொளியைப் பார்ப்பதிலிருந்து நேரடியாக கெரமல் புடிங்கை வாங்கிச் சுவைப்பது வரையிலான பயணத்தை மிக எளிதாக்கியுள்ளது.
கொழும்பு மக்களின் இனிப்பு ஆர்வத்தை அடையாளம் கண்ட மொஹமட், பெரியளவிலான விளம்பரச் செலவுகள் இன்றிப் பரந்த வாடிக்கையாளர்களைச் சென்றடைய TikTok தளத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். ‘எங்களைப் போன்ற சிறிய வர்த்தகங்களுக்குப் பாரிய விளம்பர நிதி இல்லாமலேயே மிகப்பெரிய வாடிக்கையாளர் கூட்டத்தைச் சென்றடைய TikTok உண்மையிலேயே சிறந்த வாய்ப்பை வழங்குகிறது’ என அவர் பாராட்டுகிறார். காணொளிகளுக்குப் பார்வைகள் அதிகரிக்க அதிகரிக்க, கெரமெல்லோ வண்டியைத் தேடி வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
ஒரு வணிகம் மக்களின் கவனத்தை ஈர்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அந்த நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்வதும் அவசியமானது. வாடிக்கையாளர்கள் தமது அனுபவங்களைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, மற்றவர்களுக்கும் கெரமல்லோவைப் பரிந்துரைப்பது தமக்குப் பெரும் ஊக்கமளிப்பதாக மொஹமட் தெரிவிக்கிறார். ஒரு காணொளி வாடிக்கையாளரை முதல்முறை ஈர்க்கலாம். ஆனால், உணவின் தரமும் சுகாதாரமுமே அவர்களை மீண்டும் வரவழைக்கும். இதனை உணர்ந்து, அன்றாடச் செயற்பாடுகளில் மொஹமட் நேரடியாக ஈடுபட்டு, தரத்தையும் நேர்த்தியையும் தொடர்ச்சியாக மேம்படுத்தி வருகிறார்.
TikTok தளம் வெறும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் நின்றுவிடாமல், மக்களிடையே ஒரு வலுவான பிணைப்பையும் உருவாக்குகிறது. வாடிக்கையாளர்கள் தமது அனுபவங்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்வதும், விமர்சனங்களைப் பதிவிடுவதும், மற்றவர்களுக்குப் பரிந்துரைப்பதும் இந்த வணிகம் மேலும் வளரத் துணைபுரிகிறது. ‘வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கும் அன்பும் ஆதரவுமே நான் மிகவும் மதிக்கும் விடயமாகும். மக்கள் சமூக வலைத்தளங்களில் தமது அனுபவங்களைப் பகிர்ந்து, எமது கெரமல் புடிங்கை மற்றவர்களுக்குப் பரிந்துரைப்பதைப் பார்க்கும்போது, இதனை இன்னும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற உத்வேகம் எனக்குக் கிடைக்கிறது’ என மொஹமட் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
இணையத்தில் கிடைக்கும் புகழைத் தக்கவைத்துக் கொள்ள வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவது அவசியம் என்பதை உணர்ந்துள்ள மொஹமட், சுகாதாரம் மற்றும் தயாரிப்பின் தரத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கிறார். அன்றாடச் செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபடும் அவர், தரத்தை மேம்படுத்துவதில் எப்போதும் கவனம் செலுத்துகிறார். ஒரு வைரல் காணொளி ஒருவரை ஒருமுறை சுவைத்துப் பார்க்கத் தூண்டலாம். ஆனால், அந்த உணவின் தரமும் அனுபவமுமே அவர்களை மீண்டும் வரவழைக்கும்.
எதிர்காலத்தில் கெரமெல்லோவை இன்னும் அதிகமான மக்களிடம் கொண்டு செல்ல மொஹமட் திட்டமிட்டுள்ளார். மேலதிக கிளைகள், கூடுதல் செயற்பாட்டு நாட்கள் மற்றும் நீண்ட நேர சேவைகளை வாடிக்கையாளர்கள் கோரி வரும் நிலையில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் வணிகத்தை விரிவுபடுத்துவது குறித்துக் குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர். அதேவேளை, வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்து இணைந்திருக்கவும், தமது வணிகப் பயணத்தைப் பகிர்ந்து கொள்ளவும் TikTok உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைத் தொடர்ந்து பயன்படுத்தவுள்ளதாக மொஹமட் தெரிவிக்கிறார். சரியான தளம் அமையும்போது, ஒரு சாதாரண உள்ளூர் முயற்சியும் எவ்வாறு மக்களின் மனதை வென்ற வெற்றிகரமான வர்த்தக நாமமாக மாறும் என்பதற்கு கெரமெல்லோவின் பயணம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

