பீம் ஹெல ஒசு லங்கா தனியார் நிறுவனத்துக்கு சிறந்த ஆயுர்வேத உற்பத்தியாளருக்கான Golden Inmediens வெள்ளி பதக்க விருது
இலங்கையின் முன்னணி ஆயுர்வேத மருந்து உற்பத்தியாளரான பீம் ஹெல ஒசு லங்கா தனியார் நிறுவனம் Golden Inmediens 2023 விருது விழாவில் ஆண்டின் சிறந்த ஆயுர்வேத உற்பத்தியாளருக்கான வெள்ளி பதக்க விருதை வென்றுள்ளது. சுதேச மருத்துவ தொழில்முயற்சிகளை அபிவிருத்தி செய்து ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி விருது விழா பிரதமர் தினேஷ் குணவர்த்தன, சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி மற்றும் மேலும் பல அமைச்சரவை அமைச்சர்களினதும் இராஜாங்க அமைச்சர்களினதும் தலைமையில் பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் அண்மையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
மக்களுக்கு உயர் தரத்திலான மூலிகை சார்ந்த மருந்து உற்பத்திகளை வழங்குவதை தமது தலையாய பணியாக கருதி செயற்படும் பீம் ஹெல ஒசு லங்கா நிறுவனம் 1994 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந் நிறுவனத்தினால் சந்தைக்கு விநியோகிக்கப்படும் அதிக கேள்வியை கொண்டுள்ள உற்பத்திகளில் சிறுவர்களுக்கு வழங்கப்படும் உயிர் சிரப் மற்றும் கற்பூரவல்லி பாணி, மூலிகைச் சாறு வகையினை சேர்ந்த பீம் சுவ தரணி மற்றும் பல்வேறு சுவையிலான தேயிலை வகைகள், மூலிகைச் சார்ந்த அழகூட்டும் கிறீம் வகைகளை சேர்ந்த பீம் பாம் மற்றும் கற்பூர கிறீம், மூலிகையிலான ஆரோக்கியத்தை கூட்டும் உற்பத்திகளான அஸ்வகந்த மாத்திரைகள் மற்றும் விளக்கெண்ணெய், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் சுதர்ஷன மாத்திரைகள் மற்றும் சுவோதா பேயா போன்றவை முதன்மையானவை ஆகும். தமது உற்பத்தியினதும் சேவையினதும் தரத்தை உறுதிப்படுத்தி நுகர்வோர்களை திருப்திபடுத்துவதில் பீம் ஹெல ஒசு லங்கா நிறுவனம் எப்பொழுதும் கூடுதல் அக்கறையை கொண்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தின் துணையுடன் தமது உற்பத்திகளின் இயற்கை மூலிகை மற்றும் மருத்துவ குணத்தை தக்க வைத்துக்கொள்வதற்கு நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்துகிறது. ISO 22000:2018 போன்ற தரச் சான்றிதழ்கள் பலவற்றை வென்றுள்ள பீம் ஹெல ஒசு லங்கா உற்பத்திகளை நாடெங்கிலுமுள்ள பார்மசிகள், சூப்பர் மார்க்கெட்டுகள், ஆயுர்வேத மருந்தகங்கள் மற்றும் நாடெங்கிலுமுள்ள தகைமை பெற்ற ஆயுர்வேத மருத்துவர்களிடமிருந்து கொள்வனவு செய்ய முடியும்.