September 12, 2025
செனாரோ மோட்டார் நிறுவனத்துக்கு உயர் தேசிய தொழில்முயற்சிகள் விருது
செய்தி

செனாரோ மோட்டார் நிறுவனத்துக்கு உயர் தேசிய தொழில்முயற்சிகள் விருது

Sep 2, 2025

செனாரோ மோட்டார் நிறுவனம் தேசிய வணிகச் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட உயர் தேசிய  தொழில்முயற்சிகள் விருது விழாவில் உற்பத்திப் பிரிவின் சிறந்த தொழில்முயற்சிக்கான விருதை வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் “Made in Sri Lanka” மோட்டார் சைக்கிள் உற்பத்தித் துறையில் காணப்படும் சவால்களை சிறப்பாக வெற்றி காண்பதற்கு செனாரோ மோட்டார் கம்பனி கொண்டுள்ள அர்ப்பணிப்பு மேலும் உறுதியாகியுள்ளது. தேசிய வணிகச் சபை (National Chamber of Commerce) என்பது இலங்கையில் வர்த்தகத் துறையிலும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்ற மேலான அங்கீகாரத்தை கொண்டதொரு நிறுவனமாகும். ஆண்டு தோறும் அந் நிறுவனம் நடாத்தும் உயர் தேசிய தொழில்முயற்சிகள் விருது விழாவின் 20 ஆவது ஆண்டு பூர்த்தியுடனே இம்முறை விருது விழா நடைபெற்றது. இலங்கையின் வணிகத் துறையில் உச்சம் தொட்ட நிறுவனங்கள் மத்தியில் தெரிவு செய்யப்பட்ட ஆகச் சிறந்த நிறுவனங்களுக்கு இதன் போது விருதுகள் வழங்கப்பட்டன.

2003 ஆம் ஆண்டில் மோட்டார் சைக்கிள் இறக்குமதியின் ஊடாக தமது வணிக நடவடிக்கைகளை ஆரம்பித்த செனாரோ மோட்டார் நிறுவனம் தற்பொழுது உள்நாட்டில் மோட்டார் சைக்கிள் பொருத்துதல் (Assembling) மற்றும் உற்பத்தி வரை தமது வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளது. உற்பத்தி மற்றும் பொருத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் உரிமப்பத்திரத்தையும் இந் நிறுவனம் பெற்றுள்ளமையானது பெரும் வெற்றியாகும். இன்றளவில் அந் நிறுவனம் கைத்தொழில் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ள உரிய நியமங்களுக்கேற்ப மோட்டார் சைக்கிள் உற்பத்தி மற்றும் பொருத்துதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. செனாரோ நிறுவனம் உள்நாட்டில் பொருத்திய முதலாவது மோட்டார் சைக்கிள் ரகமான Senaro GN 125 மிகக் குறுகிய காலத்திலேயே பெருமளவில் பிரபல்யமடைந்து உள்நாட்டுச் சந்தையில் அதிகளவில் விற்பனையாகும் மோட்டார் சைக்கிள் வகை எனும் மகுடத்தை தனதாக்கிக் கொண்டுள்ளது. 100% இலங்கை வர்த்தகநாமமான செனாரோ சர்வதேச வர்த்தகநாமங்களுடன் போட்டியிட்டு மிக துரித விற்பனைச் சாதனையை பதிவு செய்துள்ளது. அண்மையில் சந்தைக்கு அறிமுகப்படுத்திய இந் நிறுவனத்தின் புதிய உற்பத்தியான  Click 150  ஸ்கூட்டருக்கும் சந்தையில் பெரும் கிராக்கி நிலவுகிறது. குறைந்தபட்சம் 30% உள்நாட்டு பெறுமதி சேர்க்கையுடன் பொருத்துதல் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற செனாரோ மோட்டார் நிறுவனம் தற்பொழுது ஏராளமான நேரடி மற்றும் மறைமுக தொழில்வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதன் மூலம் இந் நிறுவனம் உள்நாட்டுப் பொருளாதாரத்தையும் தொழிற்படையினையும் வலுப்படுத்துவதற்கு கனிசமான பங்களிப்பை வழங்கி வருகிறது. கொழும்பில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட  Senaro Experience Lounge இற்கு வருகின்ற வாடிக்கையாளர்களுக்கு செனாரோ வர்த்தக நாமத்துக்குரிய சகல மோட்டார் சைக்கிள்கள் தொடர்பான பரந்துபட்ட புரிதலை பெற முடியும். கடந்த காலங்களில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகள் பலவற்றை வென்றுள்ள அந் நிறுவனம் சர்வதேச சந்தையில் கால்பதிப்பதற்கு தயாராகி வருகிறது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்துவதே இந் நிறுவனத்தின் அடுத்த இலக்காகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close