September 12, 2025
Asian African Pacific Powerlifting Championship 2025 வெற்றி வீரருக்கு அனுசரணை வழங்கியுள்ள Melwa நிறுவனம்
செய்தி

Asian African Pacific Powerlifting Championship 2025 வெற்றி வீரருக்கு அனுசரணை வழங்கியுள்ள Melwa நிறுவனம்

Aug 20, 2025

இலங்கையின் உறுக்குக் கம்பி உற்பத்தியில் முன்னணியில் திகழும் Melwa நிறுவனம் தமது சமூகக் கடமையை சிறப்பாக முன்னெடுத்து நாட்டின் விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு செய்து வரும் பங்களிப்பில் பெரும் தடம் பதிக்கும் வகையில் Asian African Pacific Powerlifting Championship 2025 போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை தரைப்படையைச் சேர்ந்த பிரதீப் எஸ். சுமுது எனும் விளையாட்டு வீரருக்கு அனுசரணை வழங்கியுள்ளது.

ஜப்பான் நாட்டின் ஹிமெஜி நகரில் நடைபெற்ற இப் போட்டித் தொடரில் ஆசிய, ஆபிரிக்க.மற்றும் பசுபிக் பிராந்தியங்களைச் சேர்ந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். இப் போட்டித் தொடர் முழுவதும் பிரகாசித்த பிரதீப் எஸ் சுமுது இலங்கைக்கு பெரும் புகழை ஈட்டித் தரும் வகையில் 59 கிலோ கிறாம் எடை பிரிவின் Squat 220 kg வெள்ளிப் பதக்கத்தையும் (இது இலங்கையின் சாதனையாகும்), Bench Press 135 kg வெங்கலப் பதக்கத்தையும் Deadlift 250 kg வெங்கலப் பதக்கத்தையும், Overall  605 kg வெள்ளிப் பதக்கத்தையும் (இது இலங்கையின் சாதனையாகும்) வென்று சாதனை படைத்துள்ளார். உலக தரப்படுத்தலில் ஐந்தாவது இடத்தை அடைந்து அவர் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். மோட்டார் சைக்கிள் பந்தயம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டு வரும் இலங்கை வீரர், வீராங்கனைகளுக்கு தேவையான வசதிகளையும் ஆதரவையும் வழங்கி நாட்டின் விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் Melwa நிறுவனம் எதிர்காலத்தில் விளையாட்டுத் துறைக்கு அளித்து வரும் ஆதரவை மேலும் விரிவுபடுத்தவுள்ளது. ஆரோக்கியமானதும், வலுவானதும், ஒழுக்கமிக்கதுமான சமூகமொன்றை உருவாக்குவதில் விளையாட்டுத் துறையின் வளர்ச்சி பெரும் உந்துசக்தியாக அமையுமென Melwa நிறுவனம் திடமாக நம்புகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close