December 22, 2024
சிறந்த ஏற்றுமதியாளருக்கான தங்கப் பதக்க விருதை வென்றுள்ள Beauty Gems
செய்தி

சிறந்த ஏற்றுமதியாளருக்கான தங்கப் பதக்க விருதை வென்றுள்ள Beauty Gems

Dec 27, 2023

இலங்கையின் முன்னணி இரத்தினக்கல் உற்பத்தி நிறுவனமான Beauty Gems நிறுவனம், தேசிய ஏற்றுமதி சபையினால் (NCE) ஏற்பாடு செய்யப்பட்ட உயர் தேசிய ஏற்றுமதி – 2023 விருது விழாவில் மத்திய அளவிலான பிரிவின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணப் பிரிவின் தங்கப் பதக்க விருதை வென்றுள்ளது.  மேற்படி விருது விழா அண்மையில் கொழும்பு ஷெங்ரீலா ஹோட்டலில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

2003 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட Beauty Gems நிறுவனத்தின் காட்சியறை பம்பலபிடியவிலும் கொள்வனவு நிலையம் பேருவளையிலும் அமைந்துள்ளது. சர்வதேச சந்தைக்கு இலங்கையின் Cat’s Eye மற்றும் Star Sapphire ஆகிய இரத்தினக்கல் வகைகளை வழங்கும் மிகப் பெரிய வழங்குநரான Beauty Gems நிறுவனத்திடம் பரந்தளவிலான இரத்தினக் கல் வகை தொகுதியொன்று உள்ளது. மேற்படி நிறுவனம் Rubies, Alexandrite, Padmardhacha, Tsavorite மற்றும் Spinel போன்ற ஏனைய வகை இரத்தினக்கற்களையும் விற்பனை செய்வதோடு, வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் பேரில் கொண்டுள்ள நம்பிக்கையினை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் விற்பனை செய்யும் சகல இரத்தினக்கற்களுக்கும் சான்றிதழொன்றையும் வழங்குகின்றது. Beauty Gems விற்பனை செய்யும் அனைத்து இரத்தினக்கற்களிலும் உள்நாட்டு மற்றம் சர்வதேச தர நியமங்களுக்கமைய உத்தரவாத முத்திரை குத்தப்பட்டுள்ளது. Beauty Gems நிறுவனம் தொடர்ச்சியாக ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற முன்னணி இரத்தினக்கல் கொள்வனவாளர்கள் உள்ள பல்வேறு நாடுகளுக்கு இரத்தினக்கற்களை ஏற்றுமதி செய்து வருகின்றது. சீனச் சந்தைக்கு இரத்தினக்கற்களை முதன் முதலில் வழங்கிய ஒரு சில நிறுவனங்களில் Beauty Gems நிறுவனம் முதன்மையானது. உலகெங்கும் நடைபெறும் பல்வேறு முன்னணி இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண கண்காட்சிகளுக்கு இரத்தினக் கற்கள் மற்றும் அது சார்ந்த உற்பத்திகளை வழங்கி வரும் Beauty Gems 2018 ஆம் ஆண்டில் சிறந்த இளம் தொழில்முனைவோருக்கான விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், ISO 9001:2015 தரச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு தரச் சான்றிதழ்களையும் வென்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *