இலங்கையின் புத்தாக்கத்திற்குத் தலைமை தாங்கும் Twinery 100 காப்புரிமைகளைப் பெற்று சாதனை
இலங்கை பாரம்பரியமாக விவசாயம் மற்றும் சுற்றுலா துறைகளில் அங்கீகரிக்கப்பட்டாலும், தொழில்நுட்ப புத்தாக்கத்தின் மையமாக அங்கீகரிக்கப்படவில்லை. உலகளாவிய ஆடை தொழில்நுட்பத் தலைவரான MAS Holdings இன் புத்தாக்கப் பிரிவான Twinery, தனது 100வது பயன்பாட்டு காப்புரிமையை வழங்கியதாக பெருமையுடன் அறிவிப்பதன் மூலம் இந்த கதையை மறுவரையறை செய்கிறது.
இலங்கையின் முன்னணி புத்தாக்க சக்தியாக, Twinery ஆனது ஆய்வாளர்கள், பொறியியளாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோரை ஒன்றிணைத்து Human-Textile இடைமுகத்தை மாற்றியமைக்கிறது. புதிய சிந்தனை மற்றும் ஒத்துழைப்பின் மூலம், Twinery புரட்சிகரமான யோசனைகளை உறுதியான தீர்வுகளாக மாற்றியுள்ளது. பொருள் அறிவியல், வேதியியல், எலக்ட்ரானிக்ஸ், வெப்ப இயக்கவியல் மற்றும் ஆடை பொறியியல் ஆகிய துறைகளில் 23 புரட்சிகர தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது – இது நவநாகரீகத்தின் எதிர்காலத்தை மறுவடிவமைத்துள்ளது.
2011 இல் எமது முதல் சர்வதேச காப்புரிமையை தாக்கல் செய்ததிலிருந்து, வெறும் 13 ஆண்டுகளில் 100 காப்புரிமைகளைப் பெற்றது என்பது எங்களுக்கு மிகவும் பெருமை அளிக்கிறது என்று MAS Holdings இன் தலைமை புத்தாக்க அதிகாரி மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ரணில் வித்தான தெரிவித்தார். “இந்த சாதனை எங்கள் குழுவின் உத்வேகம், கடுமையான உழைப்பு மற்றும் உலகளாவிய ஆடை புத்தாக்கத்தின் முன்னணியில் எங்களை முன்னோக்கி கொண்டுசென்ற எண்ணற்ற மணிநேர ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பின் சான்றாகும்.”
Twinery இன் பயணம் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களை உருவாக்கி இலங்கையை தொழில்நுட்பம், ஆடை மற்றும் அறிவியல் துறைகளில் உயரும் சக்தியாக நிலைநிறுத்துவதற்கான உள்ளூர் திறமையின் சாத்தியத்தை நிரூபிக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் இந்தியா உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் வழங்கப்பட்ட 23 அசல் புத்தாக்கங்களை உள்ளடக்கிய இந்த காப்புரிமைகள் தொழில்நுட்ப சாதனைகளை விட அதிகமானவற்றைக் குறிக்கின்றன. அவை பொருளாதார வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் இலங்கையை உலகளாவிய புத்தாக்கத் தலைமைத்துவத்திற்கு உயர்த்துவதற்கான பாதையை குறிக்கின்றன.
“MAS இலங்கையை உலகளாவிய தொழில்நுட்ப புத்தாக்கத்தின் முன்னணியில் கொண்டு வருகிறது, மேலும் இந்த சாதனை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பின்பற்ற ஒரு புதிய தலைமுறையை ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம்.” என தேசிய புத்தாக்க நிறுவனத்தின் தலைமை புத்தாக்க அதிகாரி பேராசிரியர் அஜித் டி அல்விஸ் கூறினார்.
Twineryஇன் புத்தாக்கத்திற்கான அர்ப்பணிப்பு அதன் தடைகளைத் தாண்டி நீண்டுள்ளது. MAS நிபுணர்களால் பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் விரிவான பயிற்சி திட்டங்கள், பயிற்சிகள், உலகளாவிய ஒத்துழைப்புகள் மற்றும் அறிவு பகிர்வு அமர்வுகள் மூலம், Twinery புதிய தலைமுறை புத்தாக்க வல்லுநர்களை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ளது. இந்த முயற்சியானது மாணவர்களை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அசுர வேகத்தில் முன்னேறும் உலகில் பயணிக்க தேவையான திறன்கள் மற்றும் புரிதல்களை விளக்கும் நோக்கம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
100 காப்புரிமைகளைப் பெறுவது என்பது வெறும் நிறுவன சாதனை அல்ல – இது இலங்கையின் புத்திசாலித்தனம், படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத்திற்கு சான்றாகும். Twinery ஆடை தொழில்நுட்பமானது தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதால், உள்ளூர் திறமைசாலிகளை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ளதோடு ஆர்வமுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை புத்தாக்கத்தின் இந்த பயணத்தில் இணையுமாறு அழைக்கிறது.