August 15, 2025
இலங்கையின் ஆதன வர்த்தகத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைக்கும் வகையில் Westbury Residencies திறந்து வைப்பு
செய்தி

இலங்கையின் ஆதன வர்த்தகத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைக்கும் வகையில் Westbury Residencies திறந்து வைப்பு

Jul 23, 2025

நாட்டின் வீடமைப்புத் திட்டங்களில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள Westbury Residencies அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு, வீட்டு அலகுகள் சமீபத்தில் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 36 வீட்டு அலகுகளை கொண்ட இத் திட்டம் நாட்டின் ரியல் எஸ்டேட் துறையில் ஒரு தனித்துவமான மைல்கல்லாகும். இந்த வீடமைப்புத் திட்டத்தின கட்டுமானப் பணிகள் 2017 ஆம் ஆண்டு மற்றொரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் தொடங்கப்பட்டன. எதிர்பாராத சூழ்நிலை காரணமாக அதன்  கட்டுமானப் பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்ட நிலையில் வீடுகள் வாங்குவதற்கு முதலீடு செய்திருந்த சுமார் 17 பேர் கடும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அவ்வாறு நிறுத்தப்பட்ட கருத்திட்டத்தை மீள தொடங்குவதற்கு இலங்கையில் பிறந்து ஐக்கிய இராச்சியத்தில் வசித்த ரியல் எஸ்டேட் துறையை சேர்ந்த திரு முஹேஷ் முசம்மில் 2023 ஆம் ஆண்டில் தீர்மானித்ததால் அதில் முதலீடு செய்தவர்கள் நிம்மதி அடைந்தனர். தான் ஈடுபட்டுள்ள துறைக்கு ஆற்ற வேண்டிய பொறுப்பை செவ்வனே புரிந்து கொண்ட அவர் Westbury Residencies வீடமைப்புத் திட்டத்தை மீள ஆரம்பிக்கும் நோக்கத்துடனேயே இலங்கையில் நிரந்தரமாக குடியேறியமை குறிப்பிடத்தக்கது. அதிலிருந்து இரண்டு ஆண்டுகளில் அத் திட்டத்தை நிறைவு செய்த அவர் அதனை நகரச் சூழலில் அமைந்துள்ள நிலைபேறான மற்றும் ரம்மியமான வீடமைப்புத் திட்டமாக மாற்றியுள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம்  பொறியாளர்கள், கட்டடக் கலைஞர்கள், தொழில்நுட்ப மற்றும் துணை ஊழியர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வேலைவாய்ப்பை பெற்றார்கள். திட்டம் இடைநிறுத்தப்பட்டதால் அவர்கள் வேலை இழந்தனர். இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் திரு முஹேஷ் அவர்களின் தலைமைத்துவம் பெரும் உந்துசக்தியாக விளங்கியது. “முதலில், திட்டமிடப்பட்ட திட்டத்தின் அடையாளத்தை பாதுகாக்க நாங்கள் உழைத்தோம். இதுபோன்றதொரு திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதையிட்டு நான் பெருமிதம் கொள்கிறேன்.” என திரு முஹேஷ் தெரிவித்தார். அமைதியும் சொகுசு வசதிகளையும் ஒன்றிணைத்த Westbury Residencies இலங்கையின் நகர வாழ்க்கையின் எதிர்காலத்தை பிரதிபலிக்கிறது. Bloombird Real Estate நிறுவனத்தின் தாய் நிறுவனத்தின் புதிய கருத்திட்டம் Westbury UrbanSide தற்பொழுது களுபோவிலவில் தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close