Great Place to Work ® மூலம் 2024 இல் ஆசியாவின் பெரும் வணிகப் பிரிவில் சிறந்த பணியிடமாக அங்கீகரிக்கப்பட்ட சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
சன்ஷைன் ஹோல்டிங்ஸ், இலங்கையின் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் குழுமமான, 2024 ஆம் ஆண்டில் ஆசியாவின் பெரும் வணிகப் பிரிவில் சிறந்த பணியிடமாக Great Place to Work® ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இது நேர்மறையான, உள்ளடக்கிய பணியிட கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது. இந்த அங்கீகாரம் அதன் அனைத்து உறுப்பினர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரு முழுமையான பணியிடத்தை உருவாக்குவதற்கும் ஆதரிப்பதற்கும் சன்ஷைனின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது.
ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 2.7 மில்லியனுக்கும் அதிகமான பணியாளர்களை ஒரு சிறந்த பணியிடத்தை உருவாக்குவது குறித்து ஆய்வு செய்வதன் மூலம் Great Place to Work, ஆசியாவின் சிறந்த பணியிடங்களைத் தேர்ந்தெடுக்கிறது. Great Place to Work பிராந்தியத்தின் 6.9 மில்லியன் ஊழியர்களைப் பாதிக்கும் பணியிடத் திட்டங்களையும் பகுப்பாய்வு செய்கிறது. இங்கு, சன்ஷைன் ஹோல்டிங்ஸ் ஆசியாவின் பெரும் வணிகப் பிரிவில் முதல் 70இல் 57வது இடத்தைப் பிடித்தது.
இந்த விருது குறித்து சன்ஷைன் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. ஷியாம் சதாசிவம் கருத்துத் தெரிவிக்கையில், “Great Place to Work ஆசியாவின் சிறந்த பணியிடங்களில் ஒன்றாக மீண்டும் அங்கீகாரம் பெற்றிருப்பது ஒரு பெரிய கௌரவமாகும். இலங்கையில் சிறந்த பணியிடமாக நாங்கள் பெற்ற அங்கீகாரத்தைத் தொடர்ந்து, இந்த விருது மீண்டும் எங்களை ஆசியாவின் மிகவும் மரியாதைக்குரிய நிறுவனங்களில் ஒன்றாக இணைத்துள்ளதுடன், ஊழியர்களின் தொழில் வாழ்க்கையை அடைவதற்கும் பங்குதாரர்களின் எதிர்பார்ப்புகளை எட்டுவதற்கும் உதவும் திறந்த, பாதுகாப்பான மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த பணியிடத்தை உருவாக்குவதற்கான எங்கள் வலுவான அர்ப்பணிப்புக்குக் கிடைத்த ஒரு பெரிய சான்றாகும்.” என தெரிவித்தார்.
Great Place to Work நடத்திய 2023 கணக்கெடுப்பில், சன்ஷைன் ஹோல்டிங்ஸ் இலங்கையின் சிறந்த பணியிடங்களில் ஒன்றாகத் தரப்படுத்தப்பட்டது மற்றும் நிறுவனம் ஆசிய அளவில் அங்கீகாரத்தைப் பெற்றது. Great Place to Work® நடத்திய அநாமதேய கருத்துக்கணிப்பில் சன்ஷைனின் பணியாளர்கள் வழங்கிய மிக உயர்ந்த மதிப்பீடுகளின் அடிப்படையில் நிறுவனம் இந்தச் சான்றிதழைப் பெற்றது. இந்தச் சான்றிதழை Sunshine Holdings PLC வழங்கியது, அதன் துணை நிறுவனங்களான Healthguard Pharmacy Ltd., Sunshine Consumer Lanka Ltd., Sunshine Healthcare Lanka Ltd. மற்றும் Sunshine Tea (Pvt) Ltd. விண்ணப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆசியாவின் சராசரி பணியிடத்துடன் ஒப்பிடுகையில் பட்டியலில் உள்ள நிறுவனங்களின் ஊழியர்கள் அதிக பணியாளர் திருப்தியைக் கொண்டுள்ளனர் என்பது இந்த ஆண்டு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களிடம் வலுவான நம்பிக்கையை உருவாக்கும்போது, மேம்பட்ட AI தொழில்நுட்பம் போன்ற மாற்றங்களுக்கு ஏற்ப சிறப்பாக செயல்பட முடியும். Best Workplace™ கணக்கெடுப்பில், 89% ஊழியர்கள் தங்கள் நிறுவனங்கள் புதிய அணுகுமுறைகளை முயற்சிப்பவர்களுக்கு ஆதரவளிப்பதாகக் கூறியுள்ளனர்.