
2024 ஆம் ஆண்டுக்கான உயர் தேசிய கைத்தொழில் விருதை வென்றுள்ள சன்ரச நிறுவனம்
இலங்கையின் முன்னணி நொறுக்குத் தீனி மற்றும் இனிப்புப் பண்டங்கள் உற்பத்தியாளர்களான சன்ரச இன்டர்நேஷனல் தனியார் நிறுவனம், 2024 ஆம் ஆண்டுக்கான உயர் தேசிய கைத்தொழில் விருது விழாவில் சிறப்பு விருதுகள் பிரிவில் (சிறியளவிலான) நடுவர்களின் சிறப்பு விருதை வென்றுள்ளது. கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் கைத்தொழில் அபிவிருத்திச் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி விருது விழா அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. சன்ரச நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு ஆர். சிவகுமார் குறித்த விருதை பெற்றுக்கொண்டார்.
1999 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சன்ரச நிறுவனம் , அதன் பரந்தளவிலான நொறுக்குத் தீனிகள் மற்றும் இனிப்புப் பண்டங்களின் உற்பத்திகளுக்கு சிறந்த தரமான மூலப்பொருட்களை மாத்திரமே பயன்படுத்துகிறது. பாரம்பரிய சிற்றுண்டிகளை உற்பத்தி செய்வதில் பல தசாப்த கால அனுபவமுள்ள நிபுணர்களை கொண்ட அர்ப்பணிப்புள்ள குழுவின் துணையுடன், நிறுவனம் ஒவ்வொரு உற்பத்தியும் உயர் தரத்திற்கு ஏற்றதாகவும், உண்மையான சுவை கொண்டதாகவும் இருப்பதை உறுதி செய்கிறது. அவர்களின் பிரபலமான உற்பத்திகளின் வரிசையில் மிக்சர், பூண்டு பைட்ஸ், முறுக்கு, சர்க்கரை எள், பச்சை கடலை, வேர்க்கடலை பைட்ஸ், ரிங் முறுக்கு, மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ், இனிப்பு முறுக்கு, மஞ்சள் கடலை மற்றும் பெட்டி பைட்ஸ் ஆகியவை அடங்கும். சில்லறையாகவும் மொத்தமாகவும் கொள்வனவு செய்வோரின் வசதி கருதி இவை 100 கிறாம், 1 கிலோ, 3 கிலோ மற்றும் 5 கிலோ பக்கெட்டுகளில் கிடைக்கின்றன. சன்ரச உற்பத்திகள் உள்நாட்டு சந்தையில் மாத்திரமின்றி சர்வதேச சந்தைகளிலும் கிடைக்கின்றன. சுவையான நொறுக்குத் தீனி மற்றும் இனிப்புப் பண்டங்களை உற்பத்தி செய்வதைத் தாண்டி, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் சன்ரச நிறுவனம் மகத்தான பங்கை வகிப்பதோடு, உள்ளூர் சமூகங்களுக்கு நூற்றுக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. கைத்தொழில்துறை சவால்களை எதிர்கொண்ட போதிலும், உயர் தொழில்நுட்ப இயந்திரங்கள் மற்றும் அதிநவீன உற்பத்தி நுட்பங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் நிறுவனம் உள்ளூர் மற்றும் உலகளாவிய சந்தைகளில் தனது நிலையை நிலைநிறுத்தியுள்ளது. உற்பத்தி மற்றும் பொதியிடல் செயன்முறை முழுவதும், சன்ரச நிறுவனம் கடுமையான தரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பேணுகிறது. அவர்களின் மிகவும் திறமையான வல்லுநர்கள் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் மனித உழைப்பு ஆகியவற்றின் கலவையுடன் உற்பத்தியை மேற்பார்வை செய்வதோடு, ஒவ்வொரு உற்பத்தியும் மிக உயர்ந்த தரத்துடன் இருப்பதை உறுதி செய்கிறார்கள். நிறுவனம் கடந்த காலங்களில் பல உள்நாட்டு மற்றும் சர்வதேச தரச் சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 Comments
Puraburn Pretty! This has been a really wonderful post. Many thanks for providing these details.
Hello i think that i saw you visited my weblog so i came to Return the favore Im trying to find things to improve my web siteI suppose its ok to use some of your ideas
Really enjoyed this! Your perspective is refreshing and thought-provoking. Keep it up!
Your perspective is refreshing and thought-provoking. Keep it up!