
2025 முதல் அரையாண்டில் 18.7 பில்லியன் ரூபா GWP உடன், 29% வளர்ச்சியைப் பதிவு செய்து Softlogic Life சாதனை
Softlogic Life2025 முதல் அரையாண்டில் சிறப்பான செயல்திறனை வெளியிட்டுள்ளது. 2025 ஜூன் 30 ஆம் திகதி முடிவடைந்த ஆறு மாத காலத்திற்கு 18.7 பில்லியன் ரூபா மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணத்தை (GWP) பதிவு செய்து, முந்தைய ஆண்டை விட 29% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது தொழில்துறையில் அதிகபட்சமான 4.2 பில்லியன் ரூபா மொத்த எழுதப்பட்ட கட்டுப்பண வளர்ச்சியாகும். நிறுவனத்தின் வரிக்குப் பின் இலாபம் 1.2 பில்லியன் ரூபாவாகும். 20% பங்கு மூலதன வருமானத்துடன், 18% சந்தை பங்கைக் கொண்டுள்ளது. Softlogic Life10 ஆண்டு மொத்த எழுதப்பட்ட கட்டுப்பண வளர்ச்சி 26% ஆக உள்ளது. இது தொழில்துறையின் 15% வளர்ச்சியை விட அதிகமாகும்.
Softlogic Life இன் நிதிநிலை அறிக்கையில் மொத்த சொத்துக்கள் 58.1 பில்லியன் ரூபா மற்றும் மொத்த பங்கு மூலதனம் 11.9 பில்லியன் ரூபா என பதிவாகியுள்ளது. நிதி முதலீடுகள் 48.7 பில்லியன் ரூபாவாக உள்ளன. இது மொத்த சொத்துக்களில் 84 சதவீதமாகும். இந்த சாதனையை அங்கீகரிக்கும் விதமாக, நிறுவனம் ஒரு பங்குக்கு ரூபாய் 4.50 இடைக்கால இலாபப்பங்கை அறிவித்துள்ளது. இது மொத்தமாக 1,424 மில்லியன் ரூபா தொகை வழங்கலாகும். 2024 டிசம்பர் நிலவரப்படி, Softlogic Lifeஆரோக்கியமான 38.2% பங்கு மூலதன வருமானம் (CAR) மற்றும் 298% மூலதன போதுமை விகிதத்தை (ROE) பராமரித்து வருகிறது. இது ஒழுங்குமுறை தேவையான 120% ஐ விட மிகவும் அதிகமாகும்.
சந்தையின் மிகப்பெரிய சுகாதார காப்புறுதி நிறுவனமாக, Softlogic Life டெங்கு, சிக்குன்குனியா, காய்ச்சல், மற்றும் பிற வைரஸ் போன்ற அதிகரித்து வரும் சுகாதார ஆபத்துக்களை எதிர்கொள்வதில் முன்னணியில் உள்ளது. நிறுவனம் முதல் அரையாண்டில் மொத்தம் 9.4 பில்லியன் ரூபா உரிமைக் கோரிக்கைகள் மற்றும் நன்மைகளை செலுத்தியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 30% அதிகமாகும். இதில் 6.3 பில்லியன் ரூபா, முதிர்வு மற்றும் ஒப்படைப்புகளைத் தவிர்த்து, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு காப்புகளுக்காக செலுத்தப்பட்டது. இந்த தொடர்ச்சியான செலுத்துதல் ஆயுள் காப்புறுதி தாரர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதிலும், எல்லா சூழ்நிலைகளிலும் துணை நிற்பதிலும் Softlogic Lifeஇன் உறுதியான கடப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.
இதுதொடர்பில் Softlogic Lifeஇன் தலைவர் அசோக் பத்திரகே கருத்து தெரிவிக்கையில், “முதல் அரையாண்டில் எங்களது சிறப்பான செயல்திறன், தெளிவான கவனம், ஒழுங்குபடுத்தப்பட்ட செயலாக்கம், மற்றும் எமது வாடிக்கையாளர்களுக்கு துணையாக நிற்பதற்கான இடைவிடாத அர்ப்பணிப்பின் வலிமையை வெளிப்படுத்துகிறது. எங்களது உத்திசார் விநியோக முறை, டிஜிட்டல்-முதல் அணுகுமுறை மற்றும் புத்தாக்க திட்டங்களின் உதவியுடன், நாங்கள் தொடர்ந்து நிலையான வளர்ச்சியை மேம்படுத்தி, ஆயுள் மற்றும் ஆரோக்கிய காப்புறுதித் துறையில் எங்களது நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறோம்.” என அவர் கூறினார்.
Softlogic Life770,749 செயற்பாட்டில் உள்ள காப்புறுதி திட்டங்கள் மூலம் 1.3 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது. இது நாடு முழுவதும் நிதிப் பாதுகாப்பின் முக்கிய அங்கமாக திகழ்கிறது. நிறுவனத்தின் முதல் அரையாண்டு சிறந்த செயல்திறன் புத்தாக்கம், வாடிக்கையாளர் கவனம் மற்றும் செயல்பாட்டு சிறப்புக்கான அதன் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. அதேசமயம், அதன் உறுதித்தன்மையை வலுப்படுத்தி பங்குதாரர்களுக்கான மதிப்பை உயர்த்துகிறது.
இந்த முன்னேற்றத்தை மேலும் வளர்த்து, ஜூலை 11ஆம் திகதி Softlogic Life Insurance PLC, இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறை ஆணையத்தின் (IRCSL) ஒப்புதலுடன், அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிடெட்டின் 100% பங்குகளை வெற்றிகரமாக கையகப்படுத்தியது. 2025 மார்ச் 26ஆம் திகதி அறிவிக்கப்பட்ட இந்த விசேட பரிவர்த்தனை Softlogic Life இன் வளர்ச்சிப் பாதையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. இது இலங்கை முழுவதும் உள்ள ஆயுள் காப்புறுதி தாரர்களுக்கு மேம்பட்ட சேவையை வழங்கும் திறனை விரிவுபடுத்துகிறது. இலங்கை காப்புறுதித் துறையில் ஒரு ஆயுள் காப்புறுதி நிறுவனம் மற்றொரு ஆயுள் காப்புறுதி நிறுவனத்தை கையகப்படுத்திய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
Softlogic Lifeஇன் முகாமைத்துவப் பணிப்பாளர் இஃப்திகார் அஹமட் கருத்து தெரிவிக்கையில், “இலங்கையில் ஆயுள் மற்றும் சுகாதார காப்புறுதிக்கான வாய்ப்புகள் குறித்து நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஆண்டின் முதல் பாதியில் எமது முடிவுகள், உயிர்களைப் பாதுகாக்கும் எங்களின் முக்கிய நோக்கத்தை நிறைவேற்றும் அதே வேளையில், நிலையான வணிக செயல்திறனை மேம்படுத்துவதில் எங்களின் செயல்முனைப்பான சிந்தனை மற்றும் எங்கள் குழுவின் உறுதித்தன்மைக்கு சான்றாக விளங்குகிறது. சமீபத்தில் கையகப்படுத்தப்பட்ட அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிடெட், தற்போது Softlogic Life Insurance PLC-இன் துணை நிறுவனமாக உள்ளது. இது எதிர்காலத்தில் மேலும் பல இலங்கையர்களுக்கு எங்கள் பாதுகாப்பை விரிவுபடுத்த உதவும் அந்த நோக்கத்தின் ஒரு பகுதியாகும். நாம் ஒன்றாக முன்னேறும் போது, இலங்கையர்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை உருவாக்க தொழில்துறை விதிமுறைகளை புதுமைப்படுத்தவும் சவால் விடவும் தொடர்ந்து செயல்படுவோம்.” என தெரிவித்தார்.
Softlogic Lifeசெயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தொழில்நுட்பத்தில் நம்பிக்கை கொண்டு இலங்கையின் எதிர்காலத்திற்கு தயாரான நிறுவனங்களிடையே சிறப்பாகத் திகழ்கிறது. தொழில்துறை சாதனைகளின் பதிவைத் தொடர்ந்து, முற்போக்கான, தொழில்நுட்பம் சார்ந்த காப்பீட்டாளராக தனது நிலையை வலுப்படுத்துகிறது. வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, நிர்வாகம் மற்றும் நிலைபேறாண்மை ஆகியவற்றிற்கான அர்ப்பணிப்பையும் உறுதிசெய்துள்ளது. 59ஆவது CA TAGS விருதுகள் 2024 இல் இலங்கையின் முன்னணி நிறுவனங்களிடையே முதல் 3 இடத்தைப் பெற்று, தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்த சாதனையை எட்டிய ஒரே தனி நிறுவனமாக உருவெடுத்துள்ளது. மேலும், நிறுவன அறிக்கையிடலில் வெண்கல விருதுடன் பல்வேறு தொழில்துறை பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இது நிறுவன சிறப்புக்கான அதன் தொடர்ச்சியான நாட்டத்தை வெளிப்படுத்துகிறது.