STEM மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் இணைப்பில் சமூக ஊடகங்களின் பங்கு
சமூக ஊடகங்கள் இன்று பொழுதுபோக்கிற்கான தளமாக மட்டுமல்லாது, கல்விக்கும் அறிவு பரிமாற்றத்திற்கும் முக்கிய வாயிலாக மாறியுள்ளன. தெற்காசியாவில் இளைஞர்கள் இந்த தளங்களைப் பயன்படுத்தி அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தில் (STEM) தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்கின்றனர். தொலைதூர கிராமங்களில் இருக்கும் மாணவர்களும் கணிதம், வானியல், உயிரியல் போன்ற சிக்கலான பாடங்களை இணையத்தின் மூலம் எளிதில் கற்றுக்கொள்கின்றனர். இளம் பெண்களுக்கு உலகின் பல பகுதிகளிலிருந்து நிரலாக்கம், பொறியியல் மற்றும் வடிவமைப்புக் கலை போன்ற துறைகளில் கற்றுக்கொள்ள முடிகிறது. இவ்வாறாக, சமூக ஊடகங்கள் வெறும் தகவல் பரிமாற்றத்திற்கான தளமாக மட்டுமல்லாமல், ஆர்வத்தை அறிவுடன் இணைக்கும், கற்போரை வல்லுநர்களுடன் இணைக்கும், புத்தாக்கத்தை சமூகத்துடன் இணைக்கும் ஒரு பாலமாகத் திகழ்கின்றன.
கல்வியை ஊக்குவிக்கும் STEM
சமூக ஊடகங்கள் STEM கல்வியில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறுகிய வீடியோக்கள், ஊடாடும் பாடங்கள், நேரலை விளக்கக் காட்சிகள் மூலம் மாணவர்கள் பௌதீகம், கணிதம், நிரலாக்கம் போன்ற துறைகளை எளிதில் கற்கின்றனர். இத்தகைய கற்றல் முறை மனப்பாடத்திற்குப் பதிலாக செய்து பழகுவதன் மூலம் புரிந்துகொள்வதை ஊக்குவிக்கிறது. உலகெங்கிலும் உள்ளடக்க உருவாக்குநர்கள் வானியல், பௌதீகம் போன்ற சிக்கலான துறைகளை கவர்ச்சிகரமான முறையில் விளக்குகின்றனர். கிராமப்புற சமூகங்கள் உட்பட அனைவரும் ஒரு கையடக்க சாதனத்தின் மூலமாகவே தரமான கல்வியை அணுக முடிகிறது. இது சமூக ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து கல்வி சமத்துவத்தை ஊக்குவிக்கிறது. பாரம்பரியமற்ற கற்பவர்கள் தங்கள் சொந்த நேரத்தில், தங்கள் வேகத்தில் கற்க முடிகிறது. சமூக ஊடகங்கள் வெறும் தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமல்ல, மாணவர்கள் ஒன்றிணைந்து கல்வி கற்க உதவும் சமூகங்களையும் உருவாக்குகின்றன. இவை பாரம்பரிய கல்விமுறைகளுக்கு துணையாக இருப்பதோடு, வழக்கமான கல்வி முறைகளில் சேர இயலாதவர்களுக்கும் கல்வியைக் கொண்டு சேர்க்கின்றன.
பாதுகாப்பான மற்றும் துல்லியமான ஆன்லைன் கற்றலை உறுதி செய்தல்
TikTok தளமானது STEM உட்பட அனைத்து கல்வி சார்ந்த உள்ளடக்கங்களும் உயர்தரம் மற்றும் பாதுகாப்பு தரநிலைகளைக் கொண்டிருப்பதை உறுதிசெய்ய பலமான வழிமுறைகளை உருவாக்கியுள்ளது. “உங்கள் பிள்ளைகளுக்குச் சென்றடையும் தகவல்கள் துல்லியமானதாக இருக்க வேண்டும்” என்பதே அதன் அடிப்படை நோக்கம். இதற்காக, TikTok துறை நிபுணர்கள், சரிபார்ப்பு அமைப்புகள், அரசு துறைகள் ஆகியவற்றுடன் இணைந்து உள்ளடக்கங்களைத் திரட்டி சரிபார்க்கிறது.
இந்தக் கூட்டுமுயற்சியால், பரப்பப்படும் தகவல்கள் துல்லியமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், சிறந்த கல்வி நடைமுறைகள் மற்றும் உள்ளூர் பாடத்திட்டங்களுக்கும் ஏற்றதாக அமைகின்றன. உள்ளடக்கங்கள் முதலில் TikTok இன் சமூக வழிகாட்டுதல்களுக்கு ஏற்றதா என ஆய்வு செய்யப்பட்டு, பின்னர் பல்கலைக்கழகங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட துறை வல்லுநர்களால் மதிப்பீடு செய்யப்படுகின்றன. தீங்கு விளைவிக்கும் தகவல்கள், தற்கொலை, ஆபத்தான செயல்கள் போன்றவை கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன. பெருமளவு உள்ளடக்கங்களை நிர்வகிக்க, செயற்கை நுண்ணறிவும் மனித கண்காணிப்பாளர்களும் இணைந்து செயல்படுகின்றனர்.
இலங்கை போன்ற நாடுகளில் அரசாங்கத்துடன் இணைந்து STEM கல்வி முன்னெடுப்புகளைச் செயல்படுத்துவதன் மூலம், TikTok கல்வி மேம்பாட்டில் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. இம்முயற்சிகள் STEM கல்வியை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், மாணவர்கள் படைப்பாற்றலுடனும் உள்ளுணர்வுடனும் பாடங்களை அணுக ஒரு தளத்தையும் வழங்குகின்றன.
டிஜிட்டல் கல்வியின் எதிர்காலம்
எதிர்காலத்தை நோக்கிப் பார்க்கும்போது, சமூக ஊடகங்கள் மூலம் டிஜிட்டல் கல்வியை வடிவமைக்கும் சாத்தியம் மிகப்பெரியது. வகுப்பறைகள் அல்லது கடுமையான அட்டவணைகளுக்குள் மட்டும் இனி நின்றுவிடாமல், கற்றல் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், ஆர்வம், மற்றும் சம வயதுடைய நண்பர்கள் மற்றும் ஆலோசகர்களின் சமூகத்தால் வழிநடத்தப்படுகிறது. நிபுணத்துவ வழிகாட்டுதல் மற்றும் தொழில்நுட்ப புதுமைகளுடன் இணைந்து, கல்வியை மேலும் உள்ளடக்கிய, ஊடாடும் மற்றும் அதிகாரமளிப்பதற்கு சமூக ஊடக தளங்கள் பெரும் பங்கு வகிக்க முடியும்.
TikTok-இன் மிகவும் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்று தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் ஆகும். பாதுகாப்பான உள்ளடக்கத்துடன் இணைந்து, வழங்கப்படும் பரிந்துரைகள், கற்பவர்களுக்கு அவர்களின் விருப்பங்கள் மற்றும் திறன் நிலைகளுக்கு பொருத்தமான பாதைகளை அணுக அனுமதிக்கிறது.உதாரணமாக, ரோபாட்டிக்ஸில் ஆர்வமுள்ள ஒருவர் அறிவு மற்றும் நடைமுறை திறன்கள் ஆகிய இரண்டையும் வளர்க்கும் பயிற்சிகள், நேரடி விவாதங்கள் மற்றும் நடைமுறை சவால்களின் தொடர்ச்சியை இதன் மூலம் பின்பற்ற முடியும்.
அடுத்த தலைமுறை கற்பவர்களும் படைப்பாளிகளும் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஆராய்ந்து, கேள்வி கேட்டு, படைப்புகளை உருவாக்கி வருகின்றனர், மேலும், TikTok போன்ற தளங்கள் பொறுப்பு மற்றும் வாய்ப்பு ஆகிய இரண்டையும் முன்னுரிமையாகக் கொண்டு பாதுகாப்பாக, புத்திசாலித்தனமாக மற்றும் அர்த்தமுள்ள வழியில் வழிநடத்துகின்றன. ஆர்வம் அறிவாகவும், அறிவு அதிகாரமளிப்பதாகவும் மாறுவதை உறுதிசெய்ய சமூக ஊடகங்கள் நமக்கு உதவ முடியும், மேலும், TikTok எல்லா இடங்களிலும் உள்ள இளைஞர்களை எதிர்காலத்தை கற்பனை செய்யவும், கற்றுக்கொள்ளவும், வடிவமைக்கவும் அதிகாரம் அளிக்கிறது.
(உமைஸ் நவீட் எழுதியது)

