தேசிய தர விருது விழாவில் Sithara Limited நிறுவனத்துக்கு திறமைச் சான்றிதழ் விருது
இலங்கையின் அச்சிடும் மை உற்பத்தி துறையில் முதன்மை நிறுவனமான Sithara Limited நிறுவனம், இலங்கை கட்டளைகள் நிறுவனம் ஏற்பாடு செய்த 27 ஆவது தேசிய தர விருது விழாவில் (2022) திறமைச் சான்றிதழ் விருதை வென்றுள்ளது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பனிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அச்சிடும் மைகளுக்கு பதிலாக இலங்கையிலேயே அச்சிடும் மை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் திரு சீ.ஈ.எல். விக்கிரமசிங்க அவர்களால் தொடங்கப்பட்ட Sithara Limited நிறுவனத்துக்கு உயர் தரத்திலான உற்பத்திகளினதும் சேவைகளினதும் தரத்தை உறுதிப்படுத்தல் மற்றும் சிறந்த வர்த்தக முகாமைத்துவத்துக்காக மேற்படி விருது வழங்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி துறை சார்ந்ததாக கூடுதல் கவனம் செலுத்துவதற்கு Sithara Limited நிறுவனம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
தற்பொழுது பல்வேறு பிரிவுகளில் அச்சிடும் மை உற்பத்தி நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ள Sithara Limited நிறுவனம் போட்டியாளர்கள் அனைவரையும் பின்னுக்கு தள்ளி இத் துறையின் முதல்வனாக திகழ்கிறது. நவீன தொழில்நுட்பத்தின் துணையுடன் உயர் தரத்திலான உற்பத்திகள் மூலம் சந்தையை தன் வசப்படுத்தியுள்ள Sithara Limited நிறுவனம் ISO 9001 தரச் சான்றிதழ், உயர் கைத்தொழில் திறனுக்கான CNCI திறமைச் சான்றிதழ் விருது, உயிர் அழிவுக்குள்ளாகும் மை க்கான “OK’” சான்றிதழ் மற்றும் இலங்கை தேசிய தர விருது விழாவில் திறமைச் சான்றிதழ் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் உள்நாட்டு, வெளிநாட்டு தரச் சான்றிதழ்களையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. UV Coatings, Water-Based Coatings, Barrier Coatings, Biodegradable Inks, UV Flexo Inks, Flexo, Rotogravure மற்றும் Offset போன்ற மை வகைகள் Sithara Limited நிறுவனத்தின் உற்பத்திகளில் அடங்கும். தமது தொழிற்பாடுகளின் முழுமையான மின்சக்தி தேவையை 2050 ஆம் ஆண்டளவில் சூரிய ஒளியின் மூலம் பூர்த்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ள Sithara Limited நிறுவனம் UNSDG பிரமாணங்களுக்கு ஏற்புடைய இலக்குகள் மற்றும் தர நியமங்களுக்கு உட்பட்டதாக செயற்படுகின்றது. புதைவடிவ எரிமங்களின் பயன்பாட்டை குறைப்பதற்கு Sithara Limited நிர்வாகம் பல்வேறு முற்போக்கான தீர்மானங்களை எடுத்துள்ளது. கனிம கரைப்புகளுக்கு பதிலாக நீர் சார்ந்த மூலப்பொருட்களை பயன்படுத்துவதற்கான சாத்தியம் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளையும் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. தமது உற்பத்திகளை பெறுமதி சேர் உற்பத்திகளாக்குவதற்கு பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து கருத்திட்டங்களை மேற்கொள்ளவும் Sithara Limited நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
1 Comment
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.