
கொழும்பில் City of Dreams Sri Lanka வின்பிரமாண்டமாகத்திறப்புநிகழ்விற்குஇலங்கைவரும்பொலிவுட்சூப்பர்ஸ்டார்ஷாருக்கான்
2025 ஆகஸ்ட் 2 ஆம் திகதி கொழும்பில் சிறப்பாக நடைபெறவுள்ள “City of Dreams Sri Lanka” திறப்பு திறப்பு நிகழ்விற்கு பொலிவுட் கிங் கஹான் என்று அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் சிறப்பு விருந்தினராக இலங்கைக்கு வருகை தர உள்ளார்.
பொலிவுட் சினிமாவின் பல விருதுகளை வென்று மதிக்கப்படும் “கிங் கஹான்” என்று அன்புடன் அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் வருகை, இந்த சிறப்புமிகு திறப்பு விழாவுக்கு மேலும் ஒரு தனிச்சிறப்பை சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (JKH) மற்றும் மெல்கோ ரிசார்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட் இடையேயான கூட்டு முயற்சியின் ஒரு பகுதியான “City of Dreams Sri Lanka”, தெற்கு ஆசியாவின் முதல் முழுமையான ஒருங்கிணைந்த பொழுதுபோக்கு ஹோட்டல் வளாகமாகும். இது அனைத்து வசதிகளுடன் கூடியதாக உள்ளமை சிறப்பம்சமாகும்.
2025 ஆம் ஆண்டில் தெற்காசியாவின் மிகவும் கவர்ச்சிகரமான நிகழ்வாக எதிர்பார்க்கப்படும் பலரால் பேசப்படும் இந்த திறப்பு விழாவுடன், இந்த விருப்பமான ஹோட்டல் வளாகத் தின் புதிய பிராண்ட் வர்த்தகமான “Let’s Go, Let Go” அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட உள்ளது. இது ஆடம்பரமான மற்றும் பொழுதுபோக்கின் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது, அங்கு பல்வேறு சுவையான மற்றும் உயர்தர உணவு மற்றும் பான வகைகள், நவீன ஹோட்டல் அறைகள், பிரீமியம் ரிலாக்சேஷன் மற்றும் ஸ்பா சேவைகள், உயர்தர ஷாப்பிங் அனுபவங்கள் மற்றும் வணிக நிகழ்வுகள் மற்றும் மாநாடுகளுக்கான விசாலமான வசதிகள் உள்ளிட்ட தனித்துவமான அனுபவங்களை வழங்கும்.
“City of Dreams Sri Lanka” மெல்கோ ரிசார்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு சர்வதேச தரத்திலான கேசினோ வசதியைக் கொண்டிருக்கும். மேலும், இது மெல்கோவின் பிரீமியம் “Nüwa” ஹோட்டல் பிராண்டை கொழும்பில் அறிமுகப்படுத்தி, நகரத்தின் வளர்ந்து வரும் ஹோட்டல் மற்றும் சுற்றுலா துறைக்கு தனித்துவமான மதிப்பை சேர்க்கும்.
கொழும்பு நகரத்திற்கு ஒரு புதிய அத்தியாயம்
இலங்கையின் பொருளாதார மையமான கொழும்பு நகரத்தின் முதன்மை இடமான, இல. 01, நீதிபதி அக்பார் வீதியில் அமைந்துள்ள “City of Dreams Sri Lanka” என்பது உலகப் புகழ்பெற்ற கட்டிடக்கலைஞர் சிசில் பாமண்டால் வடிவமைக்கப்பட்ட 4.5 மில்லியன் சதுர அடி பரப்பளவுள்ள ஒரு உயர்தர ஹோட்டல் வளாகமாகும். இந்த வளாகம், கிளாசிக்கல் கட்டிடக்கலை, உயர் தரமான விருந்தோம்பல் சேவைகள் மற்றும் ஆடம்பர வசதிகளை ஒருங்கிணைத்து, விருந்தினர்களுக்கு தனித்துவமான மற்றும் உயர் தரமான அனுபவத்தை வழங்குகிறது.
மேலும், இந்த ஆடம்பர அதிசொகுசு ஹோட்டல் வளாகத்தில் 800க்கும் மேற்பட்ட உயர்தர அறைகள், ரிலாக்சேஷன் மற்றும் ஸ்பா வசதிகள், பிரீமியம் ஷாப்பிங் அனுபவங்கள் மற்றும் பல்வேறு சுவையான உயர்தர உணவு மற்றும் பான வகைகள் உள்ளன.
வணிகம் மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறையின் ஒருங்கிணைந்த தனித்துவமான அனுபவம்
City of Dreams Sri Lanka என்பது பொழுதுபோக்கிற்கு அப்பாற்பட்டு, இலங்கையை தெற்காசியாவின் முக்கிய வணிக மையமாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த வளாகம் சிறப்பு இலங்கைக் கலைப்படைப்புகள், நவீன மற்றும் உயர்தர வசதிகள் மற்றும் வடிவமைக்கப்பட்ட விழா மண்டபங்கள் உள்ளிட்ட வணிக நிகழ்வுகள், கூட்டங்கள் மற்றும் மாநாடுகளுக்கான பிராந்தியத்தின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மேம்பட்ட வசதிகளைக் கொண்டுள்ளது.
“Let’s Go, Let Go” தொனீப்பொருள்
City of Dreams Sri Lanka-வின் திறப்பு விழாவுடன் இணைந்து, அதன் முக்கிய தொனிப்பொருளான “Let’s Go, Let Go” விளம்பர பிரச்சாரத்தையும் உத்தியோகப்பூர்வமாக அறிமுகப்படுத்த உள்ளது. இந்த பிரச்சாரம் மக்களை அவர்களின் தினசரி வழக்கமான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, City of Dreams Sri Lanka-வின் தனித்துவமான, ஆடம்பரமான மற்றும் அசாதாரணமான அனுபவத்தை அனுபவிக்க அழைக்கிறது. இந்த சிறப்பு நிகழ்வில் பொலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார், இது உங்களுக்கு மறக்க முடியாத ஒரு இரவாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!
The Countdown Begins!
சில வாரங்களில், கொழும்பில் தெற்காசியாவின் மிக அழகிய மற்றும் தனித்துவமான ஹோட்டல் வளாகமான “City of Dreams Sri Lanka” அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட உள்ளது. இந்த ஆடம்பர விடுமுறை தலத்தின் அனுபவத்தை ரசிக்க மக்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதேவேளை, பொலிவுட்டின் கிங் என்று அழைக்கப்படும் சூப்பர்ஸ்டார் ஷாருக் கானின் வருகை இந்த திறப்பு விழாவை ஒரு உயிருள்ள, மறக்கமுடியாத அனுபவமாக மாற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!
தெற்காசியாவின் 2025ம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆடம்பர நிகழ்வின் சிறப்பு விவரங்கள் மற்றும் அழைப்பிதழ்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
கொழும்பு நகரின் முன்னெப்போதும் இல்லாத ஒரு தனித்துவமான அனுபவத்திற்கு ஆகஸ்ட் 2ஆம் திகதிக்கு தயாராகுங்கள்!
John Keells தொடர்பில்
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (JKH) என்பது கொழும்பு பங்குச் சந்தையில் சந்தை மூலதனமயமாக்கலின் அடிப்படையில் பட்டியலிடப்பட்ட மிகப்பெரிய கூட்டு நிறுவனமாகும். இது 7 வெவ்வேறு தொழில் துறைகளில் 80க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் செயல்படுகிறது. 155 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஜோன் கீல்ஸ் குழுமம் 16,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. மேலும், LMD பத்திரிகையால் 19 ஆண்டுகளாக இலங்கையின் ‘மிகவும் மதிக்கப்படும் நிறுவனம்’ என தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. பெருநிறுவன அறிக்கையிடல் வெளிப்படைத்தன்மை மதிப்பீட்டில், ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவால் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி நான்கு ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் முழு உறுப்பினராகவும், ஐ.நா. உலகளாவிய ஒப்பந்தத்தில் பங்கேற்பாளராகவும் இருக்கும் JKH, “நாளைக்காக தேசத்தை மேம்படுத்துதல்” என்ற தனது சமூகப் பொறுப்புணர்வு (CSR) தொலைநோக்குப் பார்வையை ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மூலம் முன்னெடுத்துச் செல்கிறது.