February 13, 2026
செனாரோ ஸ்ரீ லங்கா நிறுவனத்துக்கு SLIM உயர் விருதுகள்
செய்தி

செனாரோ ஸ்ரீ லங்கா நிறுவனத்துக்கு SLIM உயர் விருதுகள்

Dec 7, 2025

இலங்கை சந்தைப்படுத்தநர்களுக்கான முன்னணி நிறுவனமாக திகழும் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகம் (SLIM) நாட்டின் வர்த்தகநாமங்களின் உயர் திறனை பாராட்டி கௌரவிக்கும் பொருட்டு நடாத்தும் SLIM Brand Excellence 2025 விருது விழா Monarch Imperial வளாகத்தில் அண்மையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இலங்கையின் அனைத்து முன்னணி தொழில்முயற்சி வர்த்தக நாமங்களினதும் சங்கமமாக மாறியிருந்த மேற்படி நிகழ்வில் உயர் தரத்திலான மோட்டார் சைக்கிள்களை உள்நாட்டில் அசெம்பிளி செய்வதோடு உற்பத்தி செய்து வரும் செனாரோ ஸ்ரீ லங்கா நிறுவனம் ஆண்டின் சிறந்த புதிய பிராண்டு மற்றும் ஆண்டின் சிறந்த உள்நாட்டு பிராண்டு (SME) ஆகிய பிரிவுகளின் கீழ் இரட்டை வெள்ளிப் பதக்க விருதுகளை வென்றுள்ளது. 100% இலங்கை வர்த்தகநாமமான செனாரோ ஸ்ரீ லங்கா நிறுவனம் சர்வதேச வர்த்தகநாமங்களுடன் போட்டியிட்டு மிகத் துரிதமாக விற்பனையாகும் உற்பத்திகளை வழங்கி உள்நாட்டுச் சந்தையில் தமது அடையாளத்தை வெகுவாக பதித்துள்ளது. 30% இற்கும் மேற்பட்ட உள்நாட்டு பெறுமதி சேர்க்கையுடன் அசெம்பிளி மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் செனாரோ ஸ்ரீ லங்கா நிறுவனம் நேரடி மற்றும் மறைமுக தொழில்வாய்ப்புகள் பலவற்றை உருவாக்கி உள்நாட்டு பொருளாதாரத்துக்கும் தொழிற்படைக்கும் வலு சேர்ப்பதற்கு தனித்துவமான பங்களிப்பை வழங்கி வருகிறது.

செனாரோ ஸ்ரீ லங்கா நிறுவனம் உள்நாட்டில் அசெம்பிளி செய்த முதலாவது மோட்டார் சைக்கிள் வகையான Senaro GN 125 மிகக் குறுகிய காலத்திலேயே பெருமளவில் பிரபல்யமடைந்து உள்நாட்டுச் சந்தையில் அதிகளவில் விற்பனையாகும் மோட்டார் சைக்கிளாக மாறியுள்ளதோடு அதை தொடர்ந்து சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட Senaro Click 150i ஸ்கூட்டரும் மிகக் குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபல்யமடைந்துள்ளது. உரிய தர நியமங்களுடன் உற்பத்தி செய்யப்படும் இந்த உற்பத்திகளை நாடெங்கிலும் விநியோகித்து தற்பொழுது தமது வர்த்தகநாமத்தை உச்சத்துக்கு கொண்டுச் செல்வதற்கு செனாரோ ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் முடிந்துள்ளது. நாடெங்கிலுமுள்ள முதன்மையான வணிக நிறுவனங்கள் ஒன்று கூடிய SLIM விருது விழாவில் தமது வெற்றிகரமான பயணத்தில் தனித்துவமான தடத்தை பதித்துள்ள செனாரோ ஸ்ரீ லங்கா நிறுவனம் சுதேசத்திலும் நவீனத்திலும் முன்மாதிரியாக திகழும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. மிக விரைவில் செனாரோ ஸ்ரீ லங்கா நிறுவனம் மேலும் பல உள்நாட்டு உற்பத்திகளை அறிமுகப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகள் பலவற்றை வென்றுள்ள செனாரோ ஸ்ரீ லங்கா நிறுவனம் சர்வதேச சந்தைக்குள் பிரவேசிப்பதற்கும் தயாராகி வருகிறது.  100% இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களையும் ஸ்கூட்டர்களையும் சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்துவதே நிறுவனத்தின் அடுத்த இலக்காகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close