Sands Active நிறுவனம் வலிகளுக்கு நிவாரணமளிக்கும் Meldol மாத்திரையை அறிமுகப்படுத்துகிறது
Sands Active தனியார் நிறுவனம் உற்பத்தி செய்யும் வலி மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ள பெரசிட்டமோல் மருந்திலான Meldol (500 மிகி) வலி நிவாரண மருந்து அண்மையில் வைபவ ரீதியாக சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. உயர் தரத்திலான மூலப்பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்ற Meldol தலைவலி, தசை பிடிப்பு, பல் வலி போன்ற வலிகளை குணப்படுத்துவதற்கு உதவுகிறது. மாத்திரை வடிவில் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Meldol மிக விரைவிலேயே மக்கள் மத்தியில் பிரபல்யமடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. Meldol மருந்தை அறிமுகப்படுத்தும் மேற்படி உத்தியோகபூர்வ வைபவத்தில் சனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சுற்றுலா, காணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பிரனாந்து, சனாதிபதி பணியாட்டொகுதி பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான சனாதிபதி ஆலோசகருமான திரு சாகல ரத்னாயக்க, முன்னாள் சுகாதார அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ராஜித்த சேனாரத்ன மற்றும் Melwa குழுமத்தின் பணிப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Sands Active நிறுவனத்துக்குச் சொந்தமான புதிய செபலொஸ்போரின் இன்ஜெக்டபல் உற்பத்திசாலையும் இதற்கு நேர் ஒத்ததாக சனாதிபதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மேற்படி உற்பத்திசாலை பல்வேறு பக்டீரியா தொற்றுகளுக்கு தீர்வாக பாவிக்கக்கூடிய நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை இலங்கையில் உற்பத்தி செய்யக்கூடிய ஆற்றலை மேம்படுத்துகிறது. நியுமோனியா, மெனிஞ்ஜைடீஸ் மற்றும் சேப்சிஸ் போன்ற பல்வேறு நோய் தொற்றுகளை குணப்படுத்துவதற்கு செபலொஸ்போரின் பயன்படுத்தப்படுகிறது. இலங்கையின் முதன்மையான உருக்கு கம்பி உற்பத்தியாளரான Melwa நிறுவன குழுமத்தின் இணைந்த நிறுவனமாக 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Sands Active நிறுவனம் சர்வதேச தர நியமங்களுக்குட்பட்டு மாத்திரைகள், குளுசைகள் மற்றும் ஊசிகளிலேற்றப்பட்ட மருந்துகளாக உற்பத்திச் செய்யப்பட்ட மருந்துகளை சந்தைக்கு விநியோகிக்கின்றது. Sands Active நிறுவனம் அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து நியாயமான விலைக்கு மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை மக்களுக்கு வழங்குகின்றது. உள்நாட்டு மற்றும் சர்வதேச ஒழுங்குபடுத்தல் செயன்முறைகளுக்கமைய தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற இந் நிறுவனம் உலக சுகாதார அமைப்பு, EU-GMP மற்றும் ஏற்புடைய இதர நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றுவதோடு அவர்களின் உற்பத்திகள் தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளன.