April 24, 2025
Galaxy வரிசையில் முன்னணி அம்சங்களுடன் புதிய Galaxy F16 5G-ஐ அறிமுகப்படுத்தும் Samsung Sri Lanka
செய்தி

Galaxy வரிசையில் முன்னணி அம்சங்களுடன் புதிய Galaxy F16 5G-ஐ அறிமுகப்படுத்தும் Samsung Sri Lanka

Apr 23, 2025

இலங்கை வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் Samsung Sri Lanka, Galaxy F16 5G ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை அண்மையில் சந்தைக்கு அறிமுகப்படுத்தியது. வாடிக்கையாளர் மத்தியில் மிகவும் பிரபலமான Galaxy A தொடரின் கீழ் வெளியிடப்பட்ட இந்த ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி, நவீன வடிவமைப்பு, சிறந்த கேரா அம்சங்கள் மற்றும் சக்திவாய்ந்த செயல்திறனுடன் பாவனையாளர்களுக்கு இணையற்ற அனுபவத்தை வழங்கும். குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட Galaxy F16 5G அதிக எண்ணிக்கையிலான பாவனையாளர்களுக்கு சலுகை விலையில் 5G தொழில்நுட்பத்தின் நன்மைகளை அனுபவிக்க வழிவகுக்கிறது.

Galaxy F16 5G ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் 7.9mm தடிமனுடன், 6.7″ FHD+ sAMOLED திரையுடன் வண்ணமயமான நிறங்களுடன் பாவனையாளர்களுக்கு கவர்ச்சிகரமான காட்சி அனுபவத்தை வழங்குகிறது. பாவனையாளர்கள் திரைப்படங்களைப் பார்க்க, கேம்ஸ் விளையாட மற்றும் இணையத்தில் உலாவ அதன் திரை மிகப் பெரிய உதவியாக இருப்பதோடு, சிறந்த காட்சி அனுபவத்தையும் உறுதி செய்கிறது.

மேலும், நவீன 50MP முப்பரிமாண கேமராவுடன் கூடிய Galaxy F16 5G ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி எப்போதும் அழகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கும் வசதியை பாவனையாளர்களுக்கு வழங்குகிறது. மேலும், புதிய குழு கேமரா வடிவமைப்புடன் கூடிய 13MP முன்பக்க கேமரா தெளிவான செல்ஃபி புகைப்படங்களை எடுக்கவும், எந்த தொந்தரவும் இல்லாமல் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும் வாய்ப்பளிக்கிறது. 

MediaTek Dimensity 6300 processor ஆல் இயக்கப்படும் Galaxy F16 5G, பல பணிகளை எளிதாகச் செய்யவும், எந்தத் தடையும் இல்லாமல் கேமிங் விளையாடவும் முடியும் என்பது பாவனையாளர்களுக்கு கிடைக்கின்ற மற்றுமொரு நன்மையாகும். இதன் சக்திவாய்ந்த 5000Ah மின்கலத்தால் இதை charge செய்யாமல் நீண்ட நேரம் பயன்படுத்த முடியும், மேலும் 25W வேகமான சார்ஜிங் மூலம் விரைவாக charge செய்ய முடியும்.

ஆறு தலைமுறை Android மேம்படுத்தல்களுடன் Galaxy F16 5G க்கு 6 ஆண்டுகள் பாதுகாப்பு புதுப்பிப்புகளை வழங்கி, ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி துறையில் புதிய அளவுகோலை நிறுவ Samsung நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக Galaxy F16 5G க்கு நீண்ட ஆயுளை உறுதி செய்ய முடியும், மேலும், நீண்ட கால உறுதிப்பாட்டின் இந்த அர்ப்பணிப்பு, சாதனம் எதிர்காலத்தில் தொடர்ந்து பயன்படுத்தக்கூடியதாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

இதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், அதிக செலவு செய்யாமல் மலிவு விலையில் Galaxy F16 5G வாங்குவதன் மூலம் நவீன தொழில்நுட்பத்தை அனுபவிக்கும் திறன் ஆகும். இந்த தனித்துவமான ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி மூலம் அனைவருக்கும் 5G தொழில்நுட்பத்தை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ள Samsung, தங்கள் ஸ்மார்ட் சாதனத்தின் வேகம் மற்றும் செயல்திறனை அதிகமாக அனுபவிக்கும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது, இது நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

இப் புதிய அறிமுகத்தின் கீழ், ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி திரைகளை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றும் Break Free Offer உள்ளிட்ட பல சலுகைகளை வழங்க Samsung நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் 16,960 ரூபா வரை சேமிக்கலாம். மேலும், EMI சலுகையின் மூலம், Galaxy F16 5G சாதனத்தை 20,505 ரூபா முன்பணம் செலுத்தி, 12 மாதங்களுக்கு மாதம் 5,056 ரூபா மட்டுமே செலுத்தி வாங்க முடியும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு Galaxy F16 5G ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியொன்றை சொந்தமாக்கிக் கொள்ளும் வாய்ப்பைப் பெறலாம்.

இப் புதிய அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த சாம்சங் இலங்கையின் வின் முகாமைத்துப் பணிப்பாளர் சாங்வா சாங், ‘இலங்கைக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புத்தாக்க தயாரிப்புகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் சாம்சங், பாவனையாளர்களுக்கு ஆச்சரியமூட்டும் அனுபவத்தையும், தடையின்றி பணிகளைச் செய்யக்கூடிய திறனைக் கொண்ட ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். இலங்கையின் நம்பர் 1 ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி வர்த்தக நாமமாக, எங்கள் வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தி, நாளைய நாளுக்காக அவர்களை வலுப்படுத்தும் சாதனங்களை வழங்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றுகிறோம்’ என்று கூறினார்.

நீலம், பச்சை மற்றும் கருப்பு நிறங்களில் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Galaxy F16 5G ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை நாடு முழுவதும் உள்ள சாம்சங் இன் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் இருந்து இப்போது வாங்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close