November 28, 2025
வீட்டு உபகரணங்களை ஒரே இடத்தில் இருந்து இயக்கும் Samsung SmartThings
செய்தி

வீட்டு உபகரணங்களை ஒரே இடத்தில் இருந்து இயக்கும் Samsung SmartThings

Nov 25, 2025

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, தானாகவே இயங்கும் வீடு என்ற கனவு மனிதர்களின் சிந்தனையில் இருந்து வந்துள்ளது. இன்று, Samsung தனது வளர்ந்து வரும் AI Home சூழலமைப்பின் மூலம் SmartThings தொழில்நுட்பத்துடன் அந்த கனவை நடைமுறை யதார்த்தமாக மாற்றி வருகிறது. இலங்கை உட்பட உலகெங்கிலும் உள்ள பல குடும்பங்கள் இணைக்கப்பட்ட வாழ்க்கை முறையை தேடி வரும் இந்த காலகட்டத்தில், Samsung இன் அணுகுமுறை இயல்பானதாகவும், எளிமையானதாகவும், உண்மையில் உதவிகரமானதாகவும் உணரக்கூடிய தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துகிறது.

இந்த புரட்சிகர மாற்றத்தின் அடித்தளமாக SmartThings விளங்குகிறது. உலகளவில் 380க்கும் மேற்பட்ட கூட்டாளர் நிறுவனங்களுடன் இணைந்து ஆயிரக்கணக்கான சாதனங்களை ஒருங்கிணைக்கும் SmartThings, வீட்டு உபகரணங்கள், sensors மற்றும் பல்வேறு சாதனங்களை ஒரே தடையற்ற சூழலில் ஒருங்கிணைத்து, இலங்கை உட்பட உலகெங்கும் உள்ள பயனர்களுக்கு எளிதான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட ஸ்மார்ட் வாழ்க்கையை வழங்குகிறது.


சாதனங்கள் ஒன்றிணைந்து செயல்படும் வீடு

பல தசாப்தங்களாக, வீட்டு உபகரணங்கள் கைமுறை வேலைகளை குறைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டன. ஆனால் புத்தாக்கத்தின் அடுத்த கட்டம், ஒன்றுடன் ஒன்று ஒத்துழைத்து செயல்படும் உபகரணங்கள் மற்றும் அன்றாட வழக்கங்களுக்கு தானாகவே பதிலளிக்கும் சாதனங்கள். இதற்காகவே SmartThings வடிவமைக்கப்பட்டுள்ளது.

SmartThings தொழில்நுட்பம் Samsung குளிர்சாதனப்பெட்டிகள், தொலைக்காட்சிகள், சலவை இயந்திரங்கள், குளிரூட்டிகள் மற்றும் பிற வர்த்தகநாம சாதனங்களை ஒருங்கிணைத்து, ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படும் வீட்டு அனுபவத்தை உருவாக்குகிறது.

நடைமுறையில் இது எப்படி செயல்படுகிறது என்பதை பார்ப்போம்: சலவை முடிந்ததும் தொலைக்காட்சியில் அறிவிப்பு வருவதால் இயந்திரத்தை சரிபார்க்க செல்ல வேண்டியதில்லை. சமையல் செய்யும்போது குளிர்சாதனப்பெட்டியின் திரையிலிருந்தே வேறு அறையில் உள்ள குளிரூட்டியை இயக்கலாம். 3D Map View மூலம் வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையையும் காட்சி வடிவில் கண்காணிக்க முடியும். வீட்டை விட்டு வெளியேறும்போது “Away Mode” தானாகவே விளக்குகளையும், சாதனங்களையும் அணைத்துவிடும். இந்த ஒவ்வொரு செயல்பாடும் சிறிய வேலைகளையும் இடையூறுகளையும் குறைத்து, அனைத்து வகையான குடும்பங்களுக்கும் எளிமையான அன்றாட வாழ்க்கையை உருவாக்குகிறது.

சலவை முடிந்ததும் தொலைக்காட்சியில் அறிவிப்பு, குளிர்சாதனப்பெட்டி திரையிலிருந்து குளிரூட்டியை இயக்குதல், 3D Map View மூலம் ஒவ்வொரு அறையையும் கண்காணித்தல், வெளியேறும்போது தானாக விளக்குகளை அணைக்கும் “Away Mode” போன்ற வசதிகள் மூலம், அன்றாட சிறிய வேலைகளையும், இடையூறுகளையும் குறைத்து, அனைத்து குடும்பங்களுக்கும் எளிமையான வாழ்க்கையை வழங்குகிறது.


கூடுதல் சிரமம் இல்லாமல் சிக்கனமான மின்சார பயன்பாடு

உலகம் முழுவதும் ஆற்றல் சேமிப்பு விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், இலங்கை குடும்பங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. Samsung இன் AI Energy Mode அறிவார்ந்த பகுப்பாய்வு மற்றும் தானியங்கி கட்டுப்பாட்டின் மூலம் மின்சாரம் நுகர்வை திறம்பட குறைக்க வழிவகை செய்கிறது.

AI Energy Mode செயல்படுத்தப்படும்போது, குளிர்சாதனப்பெட்டியில் 10மூ வரை, சலவை இயந்திரத்தில் 70% வரை, மற்றும் குளிரூட்டியில் 30% வரை மின் நுகர்வை குறைக்க முடியும்.

இந்த மேம்பாடுகள் பயன்பாட்டு பழக்கவழக்கங்கள், சுற்றுப்புற சூழ்நிலைகள் மற்றும் உடனடி ஆற்றல் தேவைகளின் அடிப்படையில் தானாகவே நிகழ்கின்றன. பயனர்கள் வெப்பநிலையை கைமுறையாக மாற்றவோ அல்லது தொடர்ச்சியாக கண்காணிக்கவோ தேவையில்லை. SmartThings இதை பின்னணியில் கையாள்கிறது. இதன் மூலம் குடும்பங்கள் வசதியான வீட்டைப் பராமரிக்கும் அதே வேளையில், மின்சார பயன்பாட்டையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிகிறது.

நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் அன்புக்குரியவர்களையும், செல்லப்பிராணிகளையும் பாதுகாக்கலாம்

நவீன வாழ்க்கை என்பது வெறும் வசதி மட்டுமல்ல் நமக்கு பிடித்த மனிதர்கள் மற்றும் செல்லப்பிராணிகளுடன் இணைந்திருப்பதும் அதில் அடங்கும். SmartThings இதை எளிமையான ஆனால் முக்கியமான வழிகளில் சாத்தியமாக்குகிறது.

Family Care அம்சம் உங்கள் அன்புக்குரியவர்களை, குறிப்பாக தனித்து வாழும்போது கவனித்துக்கொள்ள உதவுகிறது. வேலை, வெளிநாட்டு பயணம் அல்லது அன்றாட நேர அட்டவணைகள் காரணமாக பிரிந்து வாழும் பல இலங்கை குடும்பங்களுக்கு இது பெரிதும் பயனுள்ளதாக அமைகிறது. அசாதாரண செயல்பாடு கண்டறியப்பட்டாலோ அல்லது ஒரு உபகரணம் நீண்ட நேரம் பயன்படுத்தப்படாமல் இருந்தாலோ, SmartThings எச்சரிக்கை அனுப்புவதால் உடனடியாக சரிபார்க்க முடியும். மருந்து நினைவூட்டல்கள், நீர்ச்சத்து அறிவிப்புகள் மற்றும் ஆரோக்கிய வழக்கங்களையும் இணைக்கப்பட்ட சாதனங்கள் மூலம் அமைக்கலாம்.

செல்லப்பிராணி பிரியர்களுக்கு, Pet Care கூடுதல் நிம்மதியை தருகிறது. வெப்பமான நாட்களில் தொலைவிலிருந்து அறையை குளிர்விக்கலாம், வீட்டு கேமராக்கள் மூலம் கண்காணிக்கலாம், அல்லது குரைப்பு கண்டறியப்பட்டால் தொலைக்காட்சியில் அமைதியான இசையை இயக்கலாம். உரிமையாளர்கள் நீண்ட நேரம் வெளியே இருந்தாலும் செல்லப்பிராணிகள் வசதியாக இருக்க இந்த வசதிகள் உதவுகின்றன.இவ்வாறு உபகரணங்கள் எளிய கருவிகளிலிருந்து பாதுகாப்பு, உதவி மற்றும் நம்பிக்கை அளிக்கும் துணைவர்களாக மாறுகின்றன.

Samsung இன் எதிர்கால பார்வை தெளிவானது: தானாகவே சிந்திக்கும் வீடுகள். IFA 2025 இல் அறிமுகப்படுத்தப்பட்ட Smart Modular Home கருத்தாக்கம், AI-இயக்கப்படும் வாழ்க்கைக்கு ஏற்கனவே தயாராக உள்ள இடத்தை பயனர்களுக்கு வழங்குகிறது. AI Home என்பது இனி எதிர்கால கனவல்ல. இன்றே நனவாகியுள்ளது.

Ambient intelligence இந்த புரட்சியின் மையமாக விளங்குகிறது. இணைக்கப்பட்ட உபகரணங்கள் வழக்கங்களை புரிந்துகொண்டு, தேவைகளை முன்கூட்டியே அறிந்து, தானாகவே செயல்பட இது அனுமதிக்கிறது. கைமுறை கட்டளைகளுக்கு பதிலாக, வீடே தன்னைத்தானே தகவமைத்துக்கொள்கிறது.

Samsung தொடர்ந்து SmartThings மற்றும் AI Home சூழலமைப்பில் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை வலுப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு சாதனத்திலும் இணைப்பிலும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அமைக்கப்பட்டிருப்பதால், உயர்மாடி குடியிருப்பிலோ, குடும்ப வீட்டிலோ, அல்லது இலங்கையின் நவீன நகர குடியிருப்பிலோ வாழ்ந்தாலும், பயனர்கள் தங்கள் ஸ்மார்ட் ஹோம் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பலாம்.

Samsung தயாரிப்புகள் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களான SmartThings மற்றும் Softlogic Life இல் கிடைக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close