
ஆண்டின் சிறந்த சேவை வழங்குநராக பிளெட்டினம் விருதை வென்றுள்ள ரோயல் நர்சிங் ஹோம்
முதியோர் பராமரிப்புச் சேவைத் துறையில் புகழ்பெற்று விளங்கும் இலங்கையின் முதன்மையான நிறுவனமான ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனம் Business World International அமைப்பு ஏற்பாடு செய்திருந்த BWIO விருது விழாவில் சுகாதாரம் மற்றும் அது சார்ந்த சேவைத் துறையின் பாரியளவிலான பிரிவில் ஆண்டின் சிறந்த சேவை வழங்குநராக பிளெட்டினம் விருதை வென்றுள்ளது. மவுண்ட் லேவினியா ஹோட்டலில் அண்மையில் நடைபெற்ற மேற்படி விருது விழாவில் ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனம் சார்பாக அதன் வதிவிட முகாமையாளர்களான திருமதி விஜிதா காரியவசம் மற்றும் திரு மொஹமட் அர்சத் ஆகியோர் விருதை பெற்றுக்கொண்டனர்.
இதற்கு முன்னரும் ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகள் பலவற்றை வென்றுள்ளதோடு இந்த ஆண்டில் மாத்திரம் அவ்வாறான நான்கு விருதுகளை வென்றுள்ளமை மூலம் சுகாதாரத் துறையில் அவர்களின் திறன், அர்ப்பணிப்பு, வாடிக்கையாளர் நம்பிக்கை தரம் மற்றும் சந்தை தலைமை ஆகியவற்றை தம்மை மீண்டும் நிரூபித்துக்காட்டியுள்ளது. 2007 ஆம் ஆண்டில் மிகக் குறைவான ஊழியர்களுடன் தொடங்கப்பட்ட ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனம் தற்பொழுது இலங்கையின் மிகப் பெரிய தாதியர் சேவை வழங்குநராக தடம் பதித்துள்ளது. மஹரகம, கல்கிஸ்ஸ, கடுவளை, ஹங்வெல்ல ஆகிய பிரதேசங்களிலும் இங்கிலாந்தின் லண்டன் மாநகரிலும் சொகுசு முதியோர் பராமரிப்பு சேவை நிலையங்களை கொண்டுள்ள ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனம் அதன் ஸ்தாபக தலைவர் திரு மனுஜ ஹேவாவசம் அவர்களின் தலைமையில் இயங்குவதோடு 1600 இற்கும் மேற்பட்ட மருத்துவர்கள், தாதிய கண்காணிப்பாளர்கள், தாதியர்கள் மற்றும் இதர சுகாதார தொழில் வல்லுநர்கள் அதில் பணியாற்றுகின்றனர். நவீன வசதிகளை கொண்டுள்ள ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஆகச் சிறந்த சேவையினை வழங்குகிறது. இலங்கை தனியார் சுகாதாரச் சேவை ஒழுங்குபடுத்துல் பேரவையின் அங்கீகாரத்தை பெற்றுள்ள ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனம் ISO 9001-2015 சர்வதேச தரச் சான்றிதழை வென்றுள்ள இலங்கையின் முதலாவது மற்றும் ஒரே முதியோர் பராமரிப்பு சேவை நிறுவனமுமாகும்.