June 1, 2025
Richwin Investment நிறுவனத்துக்கு இரட்டை விருதுகள்
செய்தி

Richwin Investment நிறுவனத்துக்கு இரட்டை விருதுகள்

May 30, 2025

நாட்டின் நிதித் துறையில் முதன்மையான நிறுவனங்களில் ஒன்றான Richwin Investment and Credit தனியார் நிறுவனம் Business World International 2025 விருது விழாவில் சிறந்த நிதித் தீர்வுகளை வழங்கும் நிறுவனம் எனும் விருதை வென்றுள்ளது. Business World International Organization அமைப்பு ஏற்பாடு செய்த மேற்படி விருது விழா கல்கிஸ்ச பெரிய ஹோட்டலில் வெகு விமரிசையாக நடைபெற்றது. London Business Excellency நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட Global Business Excellence 2025 விருது விழாவில் புத்தாக்க நிதி நிறுவனம் எனும் விருதையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந் நிறுவனத்தின் பணிப்பாளரும் தலைமை நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி சம்பத் நிரோஷன சந்திரசிறி மற்றும் சானுக்க பிரதீப் ஆகியோர் நிறுவனம் சார்பாக விருதுகளை பெற்றுக்கொண்டனர்.

Richwin Investment and Credit நிறுவனம் பிரத்தியேக மற்றும் தொழில்முயற்சிகளுக்கான தேவைகளுக்கு உகந்த நிதிச் சேவைகள் பலவற்றை வழங்குகிறது. குறிப்பாக தொழில்முயற்சி மற்றம் பிரத்தியேக கடன்கள், காணி, வாகனங்கள் மற்றும் காசோலைகளை பிணையாக கொண்டு வழங்கப்படும் கடன்கள், தங்கக் கடன்கள், குழுக் கடன்கள் முக்கிய இடத்தை பெறுகின்றன. அந் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள நுண் நிதிச் சேவைகளை பெற்ற வாடிக்கையாளர்கள் பலர் கடந்த காாலங்களில் நிதிச் சுயாதீனம் மற்றும் ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளனர். முதலீடுகள் தொடர்பாக ஆரவங் கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட உடன்படிக்கை சான்றிதழுடன் மாதாந்த அல்லது வருடாந்த அடிப்படையில் அனுகூலங்களை பெறக்கூடிய பல்வேறு முதலீட்டு திட்டங்களை இந் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மேற்படி முதலீடுகளை அடிப்படையாக கொண்டு கடன் பெறுவதற்கான வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு உண்டு. முதலீட்டாளர்களுக்கு ஆயுள் காப்புறதியை இலவசமாக வழங்கவும் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளத. இந் நிறுவனத்தின் இணை நிறுவனமான Richwin Plaza தனியார் நிறுவனம் சர்வதேச அங்கீகாரத்தை பெற்ற வர்த்தகநாமங்களின் கீழ்  கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இதர மின்சார உபகரணங்கள் விற்பனைத் துறையில் முதன்மையான நிறுவனமாக விளங்குகிறது. அதன் கிளைகள் நீர்கொழும்பு, கட்டானை மற்றும் ஜகஎல ஆகிய பகுதிகளில்  அமைந்துள்ளன. கடனட்டைகள் அல்லது பிணையாளர்களின்றி இலகு தவணை முறைகளின் கீழ் கைடயக்கத் தொலைபேசிகளையும் இதர மின்சார உபகரணயங்களையும் கொள்வனவு செய்திட முடியும். கடனட்டையின்றி இலகு தவணை முறையின் கீழ் பொருட்களை வழங்கும் இலங்கையின் ஒரே நிறுவனமான Richwin Plaza நிறுவனம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெரிதும் வென்றுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close