January 3, 2025
இலங்கை போக்குவரத்தில் ஒரு தனித்துவமான திருப்புமுனை: JKCG Auto நிறுவனம் EV Motor Show 2024இல் BYDஐ அறிமுகம் செய்கிறது
செய்தி

இலங்கை போக்குவரத்தில் ஒரு தனித்துவமான திருப்புமுனை: JKCG Auto நிறுவனம் EV Motor Show 2024இல் BYDஐ அறிமுகம் செய்கிறது

Jul 3, 2024

உலகின் முன்னணி NEVகள் (புதிய மின்சார வாகனங்கள்) உற்பத்தியாளர், BYD, அதன் பயணிகள் வாகன அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் மூலம், கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இலங்கையின் மிகப் பெரிய கூட்டு நிறுவனமான (CSE) John Keells Holding PLC (JKH) மற்றும் CG Auto Pte. Ltd., டுபாயை தலைமையிடமாகக் கொண்ட CG Corp Global இன் துணை நிறுவனம், BYD மின்சார வாகனங்களான BYD NEVகளை உத்தியோகபூர்வமாக இலங்கையில் EV மோட்டார் ஷோ 2024 இல் வெளியிட்டது, இது போக்குவரத்து தொழில்நுட்பத்தின் ஒரு புரட்சிகரமான மைல்கல்.

2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை BMICH இல் நடைபெற்ற கண்காட்சிக்கான பிரதம அதிதியாக இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் BYD NEVகளை பொதுமக்களுக்கு வெளியிட்டார். இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர்  பந்துல குணவர்தன, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க மற்றும் இலங்கை மோட்டார் விளையாட்டு பந்தய வீரர் டிலந்த மாலகமுவ ஆகியோர் கலந்துகொண்டனர்.

மோட்டார் ஷோவில் வெளியிடப்பட்ட புதிய மின்சார வாகனங்களில் BYD புதிய மின்சார வாகனங்களான luxury sedan, BYD SEAL அடங்கும். அதன் நேர்த்தியான வடிவமைப்பு, 650 கிமீ வரையிலான அதி நீண்ட தூரம் மற்றும் 0-100 கிமீ/மணி முதல் 3.8 வினாடிகள் அக்ஸ்ரலேஷன் , BYD ATTO 3 ஆகியவற்றிற்கு புகழ்பெற்றது. BYD ATTO 3, ஒரு பல்துறை மற்றும் குடும்பத்திற்கு ஏற்ற SUV, அதன் விசாலமான உட்புறம், மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் BYD DOLPHIN உடன் இணைந்து 480 கிமீ வரை வரம்பிற்கு தனித்து நிற்கிறது மற்றும் செயல்திறன், 410 கிமீ வரையிலான வரம்பையும், 7.9 வினாடிகள் 0-100 கிமீ/மணியிலிருந்து வேகமான அக்ஸ்ரலேஷன் நேரத்தையும் வழங்குகிறது.

BYD விரைவில் இலங்கையில் BYD DM-i தொழில்நுட்பம் (BYD Super Plug-in Hybrid EV Technology) கொண்ட முதல் மாதிரியான BYD SEALION 6 DM-i வாகனத்தை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஓட்டுநேர வரம்பு (Driving Range) 1,100Km வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையை புதிய மின்சார வாகனங்களுக்கான மையமாக மாற்றுவதற்கான அதன் நோக்கத்தை வலுப்படுத்தும் வகையில், JKCG Auto BYD மின்சார (EV) வாகனங்களின் ஆர்வலர்களுக்காக கொழும்பில் ஒரு அதிநவீன காட்சியறையை திறக்கவும் திட்டமிட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்படும். இந்த காட்சியறை, அதிநவீன மின்சார (EV) வாகனங்களின்  தொழில்நுட்ப, அம்சங்கள் மற்றும் நன்மைகளை காட்சிப்படுத்துவதுடன் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும்.

மேலும், உள்ளூர் திறமைகளை மேம்படுத்துவதற்கும் பிராந்தியத்தில் புதிய மின்சார வாகனங்களுக்கான (NEVs) பிரத்யேக மையத்தை உருவாக்குவதற்கும் BYD செயல்படுகின்றது. இந்த நோக்கத்திற்காக, BYD ஆனது EVகளுக்கான இலங்கையின் முதல் அதிநவீன சேவை நிலையத்திற்கான முதல் தொகுதிக்கு பயிற்சிகளை வழங்கத் தொடங்கியுள்ளது. சர்வதேச தரத்தை பூர்த்தி செய்ய உள்ளூர் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட எதிர்கால ஒத்துழைப்புகளுக்கு இது ஒரு முன்னோடியாக அமைகிறது.

அத்துடன், நாடு முழுவதும் விரிவான EV Charging வலையமைப்பை நிறுவுவதற்கு JKH இன் பரந்த அளவிலான வளங்களைப் பயன்படுத்தி இலங்கையில் நிலையான போக்குவரத்து உட்கட்டமைப்பு அமைப்பை உருவாக்குவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை JKCG Auto வலுப்படுத்தியது. வேகமாக Charge செய்யும் வசதிகள் கொண்ட நிலையங்களை அமைக்கும் நடவடிக்கை அடுத்த சில மாதங்களில் நிறைவடையவுள்ளது. இதன் மூலம், EV வாகனங்கள் மூன்று மடங்கு வேகமாக சார்ஜ் செய்யும் திறனைப் பெறும், இது சந்தேகத்திற்கு இடமின்றி EV உரிமையாளர்களுக்கு பெரும் ஆறுதலாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close