February 22, 2025
Retail IT ஏற்பாடு செய்த Retail Technology Trends 2025 மாநாடு வெற்றிகரமாக நிறைவு
செய்தி

Retail IT ஏற்பாடு செய்த Retail Technology Trends 2025 மாநாடு வெற்றிகரமாக நிறைவு

Feb 18, 2025

POS வன்பொருள் மற்றும் மென்பொருள் துறையில் முதன்மை நிறுவனமாக திகழும் Retail IT தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்த Retail Technology Trends 2025 மாநாடு ஹோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது. பேரங்காடிகள், விருந்தோம்பல், ஆடைகள் மற்றும் புத்தக விற்பனை நிலையங்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் இதில் பங்கெடுத்திருந்தார்கள். நவீன தொழில்நுட்பம் நாட்டின் வர்த்தகத் துறையின் வளர்ச்சிக்கு எவ்வாறு பங்களிப்பு செய்கிறது என்பது தொடர்பாக இதன் போது அவர்களுக்கு பரந்துபட்ட அறிவை பெற முடிந்தது. POS தொழில்நுட்பம் தொடர்பான சர்வதேச முதன்மை நிறுவனமான Posiflex  மற்றும் Retail IT நிறுவனங்களுக்கிடையே காணப்படுகின்ற நீண்ட கால கூட்டிணைவு இதன்போது தனித்துவமானதொரு விடயமாக காணப்பட்டது. மேற்படி நிறுவனங்கள் கடந்த 15 ஆண்டுகளாக நாட்டின் சில்லறை வர்த்தகத் துறையின் தனித்துவமான தேவைகளுக்கேற்ற வினைத்திறனையும் உயர் தரத்திலான தொழில்நுட்ப தீர்வுகளையும் வழங்கியுள்ளது. இங்கு Posiflex நாமத்தின் கீழ் வருகின்ற புத்தம் புதிய POS கட்டமைப்புகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.

Retail IT நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி சந்திம விக்கிரமதுங்க, ஜோன் கீல்ஸ் குழுமத்தைச் சேர்ந்த நாலக்க உமகிலிய, Moore Aiyar நிறுவனத்தின் ருவான் பெரேரா, WebXPay தலைவர் திலக் பியதிகம உள்ளிட்ட துறை சார்ந்த விற்பன்னர்கள் பலரும் நவீன தொழில்நுட்பம், புத்தாக்க செலுத்துகை முறைகள், தொழில்முயற்சிகளை வினைத்திறனுடன் மேம்படுத்துவதற்கான மூலோபாயங்கள் போன்றவை தொடர்பாக கருத்துரை வழங்கினார்கள். இதில் பங்கெடுத்தோருக்கு Posiflex POS கட்டமைப்புகள், Retail IT நிறுவனத்தின் ReTech துணைக்கருவிகள், ஸ்மார்ட் POS  மற்றும் ERP கட்டமைப்புகள் போன்ற மென்பொருள், கணக்கீடு மற்றும் மனித வள முகாமைத்துவ மென்பொருள் தொடர்பாக நடைமுறைச்சாத்தியமான அறிவை பெறுவதற்கேற்ற வகையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. POS கட்டமைப்புகள், துணை முகாமைத்துவக் கருவிகள், புத்தாக்க செலுத்துகை தீர்வுகள் போன்ற பரந்துபட்ட பரப்புகள் வரை வியாபித்துள்ள தொழில்நுட்பத் தீர்வுகள் மூலம் தொழில்முயற்சிகளை வலுவூட்டும் Retail IT நிறுவனம் வாடிக்கையாளர்களின் திருப்தி மற்றும் தரத்தை முதன்மையாக கொண்டு செயற்படுகின்றது. வாடிக்கையாளர்களுக்கு இணையவழி மற்றும் இணையவழியற்ற முறைகளில் தேவையான உதவிகளை வழங்கும் இந் நிறுவனம் அந்தந்த நிறுவனங்களுக்கேற்ற வகையில் பராமரிப்புத் திட்டங்களை வடிவமைத்துள்ளது. கீல்ஸ்,சரசவி,நோலிமிட் போன்ற பெரும் நிறுவனங்களுடன் கூட்டிணைந்துள்ள இந் நிறுவனம் போட்டி சந்தையின் சவால்களை வெற்றிகொள்வதற்கு தொழில்முயற்சிகளுக்கு உதவுவதன் மூலம் துறையின் விற்பன்னராக விளங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close