July 21, 2025
சிறந்த தனியார் பாடசாலைக்கான BWIO2025 விருதை வென்றுள்ள கண்டி ரிஜென்சி வதிவிடப் பாடசாலை
செய்தி

சிறந்த தனியார் பாடசாலைக்கான BWIO2025 விருதை வென்றுள்ள கண்டி ரிஜென்சி வதிவிடப் பாடசாலை

Jun 29, 2025

இலங்கையின் புதிய கல்வி மறுசீரமைப்பு செயன்முறைகளுக்கமைவாக சுதந்திரமானதொரு சூழலில் கல்வியை முறையாக வழங்கும் கண்டி ரிஜென்சி வதிவிடப் பாடசாலை BWIO 2025 விருது விழாவில் இலங்கையின் சிறந்த தனியார் பாடசாலை எனும் விருதை வென்றுள்ளது. Business World International Organization அமைப்பு கல்கிஸ்ஸ பெரிய ஹோட்டலில் கோலாகலமாக ஏற்பாடு செய்திருந்த மேற்படி விருது விழாவில் ரிஜென்சி பாடசாலை குழுமத்தின் ஸ்தாபகர் திரு சுஜீவ லேக்கம்கே அதற்கான விருதை பெற்றுக்கொண்டார். 2023 ஆம் ஆண்டில் Global Consortium of Science and Technology அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட Business Icon Awards விருது விழாவில் இலங்கையின் கல்வி மறுசீரமைப்புகளின் முன்னோடி எனும் விருதையும் இந் நிறுவனம் வென்றமை குறிப்பிடத்தக்கது. மேலும், தேசிய உயர் தொழில்முயற்சியாளர் 2024 ஜனாதிபதி விருது விழாவிலும் திரு சம்பத் லேக்கம்கே சிறந்த தொழில்முயற்சியாளருக்கான விருதை வென்றார்.

கல்வித் துறையில் பல்வேறு பரிமானங்கள் ஊடாக சர்வதேசத்தை வெல்வதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பேற்படுத்திக் கொடுக்கும் துரித கல்விச் செயன்முறைகளை ரிஜென்சி பாடசாலை குழுமம் நடைமுறைப்படுத்தி வருகிறது. குறைந்த வயதில் சாதாரண தரப் பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்தி வரும் ரிஜென்சி வதிவிடப் பாடசாலை உயர் தரத்துக்கு ஓராண்டு காலத்தை மாத்திரமே எடுத்துக்கொள்கிறது. அதன் மூலம் மிகக் குறைந்த வயதிலேயே பல்கலைக்கழக கல்வியை பெறுவதோடு பல்வேறு தொழில்துறைகளுக்கும் பிரவேசிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. மாணவர்களின் ஆளுமை விருத்தி மீதும் ரிஜென்சி பாடசாலை கூடுதல் கவனம் செலுத்துகிறது. ரிஜென்சி பாடசாலை குழுமத்தின் கிளையொன்று குருணாகல் நகரிலும் திறக்கப்பட்டுள்ளது. சிங்களம் மற்றும் ஆங்கிலம் இரு மொழிகளிலும் கற்பிக்கப்படுவதோடு பல்கலைக்கழக அனுமதிக்கு விஞ்ஞானம், கணிதம், வணிகம், கலை மற்றும் தொழில்நுட்பவியல் என எந்தவொரு பிரிவிலும் ரிஜென்சி வதிவிட பாடசாலை மாணவர்களுக்கு தோற்ற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close