Zero Technologies நிறுவனத்துடன் இணைந்து Zero வளிச்சீராக்கி இயந்திரங்களை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ரஞ்சன் லங்கா நிறுவனம்
ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக நாட்டின் பேரங்காடி (சூப்பர் மார்க்கெட்டு) வணிகத் துறையில் புகழ்மிக்க நிறுவனமாக திகழும் ரஞ்சன் லங்கா நிறுவனம் ‘Zero’ வளிச்சீராக்கி இயந்திரங்களை (Air condition machines) உள்நாட்டு சந்தைக்கு அறிமுகப்படுத்தி வளிச்சீராக்கி சந்தையில் கால் பதித்துள்ளது. சீன நாட்டின் Zero Technologies நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்படும் மேற்படி வளிச்சீராக்கி இயந்திரங்கள் அலுவலகங்கள், இல்லங்கள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு பெரிதும் பொருத்தமாக இருக்கும். BTU 9,000 – 12,000 இடைப்பட்ட இன்வர்ட்டர் அல்லாத மற்றும் 12,000 – 18,000 இடைப்பட்ட இன்வர்ட்டர் ஆகிய இரு வகைக்குரிய வளிச்சீராக்கி இயந்திரங்கள் இவ்வாறு எமது நாட்டு சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. Zero வளிச்சீராக்கி இயந்திரங்கள் உள்நாட்டு பொதுச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். ரஞ்சன் லங்கா நிறுவனத்தின் கம்பஹா களஞ்சியத் தொகுதியிலிருந்து வளிச்சீராக்கி இயந்திரங்களை நாடு பூராவும் விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. விற்பனை முகவர்களுக்கு மேற்படி நிறுவனத்துடன் இணைந்து Zero வளிச்சீராக்கி இயந்திரங்களை விற்பனை செய்ய முடியும்.
நீண்ட காலம் உழைக்கக்கூடிய Zero வளிச்சீராக்கி இயந்திரங்கள் மின்சாரத்தை சேமிக்கவும் உதவுகிறது. மேற்படி வளிச்சீராக்கி இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள செப்பிலான குழாய்கள் ஏனைய வளிச்சீராக்கி இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் குழாய்களை விடவும் கனதியாக உள்ளதால் துருப்பிடிப்பதற்கான வாய்ப்பை பெரிதும் குறைத்து நீண்ட கால பாவனைக்கு வழிவகுக்கிறது. சகல வளிச்சீராக்கி இயந்திரங்களினதும் கொம்பிரசரை இயக்குவதற்கு மிகக் குறைவான மின்சாரமே விரயமாகும். முழு இயந்திரத்துக்குமான ஓராண்டு கால உத்தரவாதமும், கொம்பிரசருக்கு ஐந்தாண்டு கால உத்தரவாதமும் உரித்தாகும். Zero வளிச்சீராக்கி இயந்திரங்களுக்கு தேவையான உதிரிப்பாகங்கள் உள்நாட்டு சந்தையில் தாராளமாக கிடைக்கும் வகையில் ரஞ்சன் லங்கா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொள்வனவு செய்யப்பட்டு முதலாவது ஆண்டில் மூன்று சேவைகளை இலவசமாக வழங்குகிறது. Zero வளிச்சீராக்கல் இயந்திரங்களின் விலை ஏனைய வகை வளிச்சீராக்கி இயந்திரங்களுக்கு நிகராக போட்டி மட்டத்தில் காணப்படுகிறது.
இல 04, விடுதி வீதி, கம்பஹா எனும் முகவரியில் அமைந்துள்ள ரஞ்சன் லங்கா நிறுவனம் 30 ஆண்டுகளுக்கு மேலாக சூப்பர் மார்க்கெட்டு துறையில் மக்கள் மனங்களை பெரிதும் வென்றுள்ளதொரு நிறுவனமாகும். டீ.எஸ். சேனாநாயக்க வீதி, அம்பாறை முகவரியில் அமைந்துள்ள இற்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ரஞ்சன் லங்கா வணிகத் தொகுதி அந்த நிறுவனத்தின் முதலாவது கிளையாகும்.