Prime Health Herbal Products நிறுவனத்துக்கு Golden Inmediens விருது
இலங்கையின் முன்னணி மூலிகையிலான மருந்து மற்றும் மேலதிக போசாக்கு பொருள் உற்பத்தி நிறுவனமான Prime Health Herbal Products (PHHP) நிறுவனம் இத் துறையின் வளர்ச்சிக்காக செய்துள்ள தனித்துவமான பங்களிப்புக்காக Golden Inmediens 2023 விருது விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. சுதேச மருத்துவ தொழில்முயற்சிகளை ஊக்குவித்து அபிவிருத்தி செய்யும் நோக்கத்துக்காக நடாத்தப்படும் இந்த விருது விழா அண்மையில் வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் வெகு விமிரிசையாக நடைபெற்றது. பிரதம அமைச்சர் தினேஷ் குணவர்தன, சுதேச மருது்துவத்துறை இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி, அமைச்சர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் பலரும் இவ் விழாவில் பங்கேற்றனர்.
மூலிகையிலான மருந்துகள் மற்றும் மேலதிக போசாக்கு உற்பத்திகள் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் PHHP நிறுவனம் புற்றுநோய், நீரிழிவு, உடன் பருமன் உள்ளிட்ட பல்வேறு தொற்றா நோய்களை இலக்காக கொண்டு ஏராளமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளதோடு, இந் நிறுவனத்திற்கு சொந்தமான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவு பேராதனை, களனி (சுதேச மருத்துவப் பீடம்) மற்றும் ரூஹுணு ஆகிய உள்நாட்டு பல்கலைக்கழகங்களிலும் மெல்பன், ஓசாக்கா, ஸ்பெயின் மற்றும் பேர்லின் போன்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் பலவற்றுடனும் இணைந்து நிறுவப்பட்டுள்ளது. மேற்படி நிறுவனத்திற்கு சொந்தமான அதி நவீன வசதிகளுடன் கூடிய கைத்தொழிற்சாலை ஆராய்ச்சி குழுவின் பிரதானி சிரேஷ்ட பேராசிரியர் ஆர்.பீ.வீ.ஜே ராஜபக்ஷ அவர்களின் மேற்பார்வையின் கீழ் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் பிரபல்யமடைந்துள்ள PHHP நிறுவனம் Golden Inmediens விருது விழாவில் இந் நிறுவனத்தின் உற்பத்தியான “LivingMo600“ இற்காகவே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேற்படி உற்பத்தி சுமார் 06 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் மூலம் வெளிக்கொணரப்பட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு உற்பத்தி செய்யப்பட்டது. பாகற்காயில் அடங்கியுள்ள முனைப்பான உட்கூறுகள், கொழுப்பு அமிலங்கள் மற்றும் கறுவா பட்டை எண்ணெய் ஆகியவற்றை கொண்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ள LivingMo600 இல் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக Metastasis போன்ற நிலைமைகள் ஏற்படுவதை தடுப்பதற்கும் புற்றுநோய்க்கு அளிக்கப்படும் வேதியல் சிகிச்சை (Chemotherapy) மற்றும் கதிரியக்க சிகிச்சை (Radiotherapy) போன்ற சிகிச்சைகளினால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை தடுப்பதற்கும் அது உதவுகிறது.