Super PVC வர்த்தகநாமத்தின் கீழ் தமது PVC உற்பத்திகளை மீள அறிமுகப்படுத்தும் Phoenix Industries
இலங்கையின் தளபாட உற்பத்தியில் முன்னோடியான Phoenix Industries நிறுவனம் Super PVC வர்த்தகநாமத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட PVC உற்பத்திகளை மீள அறிமுகப்படுத்தியுள்ளது. அதை முன்னிட்டு கடந்த பெப்ரவரி 14 ஆந் திகதியன்று Phoenix நிறுவனத்துக்கு சொந்தமான மாகந்துர கைத்தொழிற்சாலை வளாகத்தில் பைவமொன்று நடைபெற்றது. கட்டுமான மற்றும் வீடுகளை சீரமைக்கும் நடவடிக்கைகளுக்கு தேவையான UPVC மற்றும் CPVC குழாய்கள் மற்றும் துணைப் பாகங்கள், FAB Bends, Solvent Cements, Cable Management Tubes மற்றும் இதர கட்டட நிர்மாண உபகரணங்களும் மேற்படி உற்பத்திகளில் அடங்கும். ஒப்பந்தக்காரர்கள், கருத்திட்ட முகாமையாளர்கள் மற்றும் பொது மக்கள் போன்ற பல்வேறு தரப்புகள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ள Phoenix உற்பத்திகளில் காணப்படும் தனித்துவமான பலம், நீண்ட காலம் உழைக்கக்கூடிய ஆற்றல் மற்றும் செயலாற்றுகையை பிரதிபலிக்கும் வகையில் மேற்படி உற்பத்திகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் அவர்களின் காட்சியறைகளினூடாக PVC உற்பத்திகளை விற்பனை செய்து தற்பொழுது இத் துறையில் முன்னோடியாக திகழும் Phoenix நிறுவனம் இதன் ஊடாக தமது விநியோக வலையமைப்பை வலுவூட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. UPVC, CPVC மற்றும் துணைப் பாகங்கள், சீமெந்து மற்றும் இதர சகல PVC உற்பத்திகளுக்கு ஏற்புடைய புதிய PVC இலட்சினையை வெளியிடும் நிகழ்வும் இதன் போது நடைபெற்றது. பல தசாப்தங்களாக இலங்கையின் கட்டுமானத் துறைக்கு தேவையான உயர் தரத்திலான PVC துணைப் பாகங்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வரும் Phoenix நிறுவனத்தின் Super PVC உற்பத்திகள் நீர் குழாய் தொழில்நுட்பவியலாளர்கள், மின்னியல் வல்லுநர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் போன்ற சகலருக்கும் பல்வேறு நன்மைகளை வழங்குகின்றது. superpvc.lk இணையதளத்துக்கு பிரவேசிப்பதன் மூலமாகவோ, அல்லது அருகிலுள்ள Phoenix காட்சியறைக்கோ அல்லது விற்பனை முகவர் நிலையத்திற்கோ சென்று மேற்படி உற்பத்திகள் தொடர்பான சகல விபரங்களையும் பெற முடியும்.
2 Comments
Hello! This is my first comment here so I just wanted to give a quick shout out and say I genuinely enjoy reading through your articles. Can you recommend any other blogs/websites/forums that cover the same subjects? Thanks for your time!
Noodlemagazine I’m delighted to find this site on Bing, just what I was looking for and added it to my bookmarks