
நவீன ரக உற்பத்திகள் அடங்கிய 2025 ஆம் ஆண்டுக்கான தமது புதிய உற்பத்திகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ள Phoenix Industries
இலங்கையின் தளபாட உற்பத்தி துறையில் முன்னோடியாக திகழும் Phoenix நிறுவனத்தின் புத்தம் புதிய உற்பத்திகளை உள்ளடக்கிய தொகுதியொன்று கடந்த மாதம் 23 ஆம் திகதி கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தரம், நவீனத்துவம், ஆக்கத்திறன் ஆகிய பிரிவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து ஓய்வாக இருப்பதற்கும், அமர்வதற்கும், களஞ்சியப்படுத்துவதற்குமென பல்வேறு தேவைகளை வழங்கக்கூடிய வகையில் இப் பொருட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஓய்வாக பொழுதை கழிப்பதற்கு பாவிக்கக்கூடிய Nap Foldable Hammock இருக்கை அவற்றில் முதன்மை இடத்தை பெறுகின்றது. அதனை இரண்டாக மடிக்க முடிவதோடு அதன் சாய்வுப்பகுதியை பாவிப்போரின் வசதி மற்றும் சௌகரியத்துக்கேற்ப ஐந்து நிலைகளுக்கு தக்கவாறு அமைத்துக்கொள்ள முடிகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்த இருக்கையை சிறியதொரு இடத்திலேனும் களஞ்சியப்படுத்த முடியும். மன அழுத்தத்தை மாற்றி சௌகரியமாக அமர்ந்திருப்பதற்கு இது பெரிதும் பயன்படுகிறது. இந்த உற்பத்தி Phoenix நிறுவனத்தின் பிசின் மற்றும் துணியிலான முதலாவது இருக்கையும் ஆகும். மேலுமொரு உற்பத்தியான Cala Foldable Comfort Chair தேவையான எந்த இடத்துக்கும் கொண்டு செல்லக்கூடிய வகையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இடவசதி குறைவாகவுள்ள இடத்திலேனும் வைக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள Flip Foldable மேசையை சுலபமாக மடிக்கவும், விரிக்கவும் முடியும். அழகிய தோற்றத்தில் உடலுக்கு சௌகரியமாக அமர்வதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ள Kyo கதிரையை எந்தவொரு இடத்திலும் சிரமமின்றி வைத்திட முடியும். அது இயக்கத்தையும் புத்தாக்க அழகியலையும் ஒரு சேர இணைக்கிறது. Cocktail Bar Stool அழகும் சௌகரியமும் கலந்த இன்னுமொரு புதிய அறிமுகமாகும். அது உணவகமொன்றுக்கு பெரிதும் உகந்ததாக இருக்கும். இப் புதிய உற்பத்திகள் அடங்கிய தொகுதிக்கு எந்தவொரு உணவையும் களஞ்சியப்படுத்தக்கூடிய நவீன அலங்கார பெட்டிகளும் அடங்கும்.
அன்றாட வாழ்க்கையை மேலும் இலகுவாக்கிக்கொள்வதற்கு தேவையான பல்வேறு உற்பத்திகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ள Phoenix நிறுவனம் எளிமையையும், உயர் செயலாற்றலையும் ஆகச் சிறந்த வர்ண கலவையையும் ஒன்றிணைக்கிறது. https://shop.phoenix.lk மூலம் இணைய வழி ஊடாகவும், வெலிசர, பாணந்துறை மற்றும் பத்தரமுல்ல ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள கிளைகளிலும் இப் புதிய உற்பத்திகளை கொள்வனவு செய்ய முடியும். உயர் தரத்தையும் அழகிய தோற்றத்தையும் முதன்மையாக கொண்டு இயங்கி வரும் Phoenix நிறுவனம் இலங்கை மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேலும் உயர்நிலைக்கு கொண்டு செல்வதற்கு அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறது.
4 Comments
Kunjungin situs rtp slot terbaru 99,99% akurat, KONTOL KUDA SITUS PENIPU
Document translation services cover a wide range of materials, ensuring accurate and professional translations for legal, academic, technical, medical, and business purposes. Certified translation services provide official translations of important documents such as birth certificates, passports, court orders, contracts, and declarations, meeting legal and governmental requirements. Businesses often require translations for product catalogs, financial statements, user manuals, and commercial offers to expand globally. Academic and research materials, including theses, white papers, and scientific studies, are translated to facilitate knowledge sharing. Media-related documents such as magazines, newspapers, and journals require precise localization to maintain context. Surveys, business proposals, and promotional materials also benefit from expert translation. Whether translating medical records, financial reports, or technical specifications, professional translators ensure clarity, accuracy, and cultural relevance. High-quality document translation services play a crucial role in global communication, legal compliance, and international business expansion. Visit our website today to learn more about our translation of medical record and professional translation solutions!
Website Scam Penipu Indonesia, KONTOL SEXS SITUS SEXS
“This is exactly what I was looking for, thank you!”