February 24, 2025
300 பல்கலைக்கழக  மாணவர்களுக்கு  பூரண மாணவர் உதவித் தொகையை அளிக்கும் மெல்வா நிறுவனம்
செய்தி

300 பல்கலைக்கழக  மாணவர்களுக்கு  பூரண மாணவர் உதவித் தொகையை அளிக்கும் மெல்வா நிறுவனம்

Feb 21, 2024

இலங்கையின் உறுக்கு கம்பி உற்பத்தியின் முன்னோடியாக திகழும் மெல்வா நிறுவனம் தமது சமூகக் கடமை தொடர்பாக கொண்டுள்ள அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும் சுமார் 300 மாணவர்களுக்கு மாணவர் உதவித் தொகையை வழங்குகின்றது. பல்கலைக்கழகங்களில் கற்கும் குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவர் மாணவியர்களுக்கு தமது கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தேவையான நிதி உதவியை வழங்கும் மேற்படி மாணவர் உதவித்  திட்டத்தை மெல்வா நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. இத் திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 3000 மாணவர்கள் உதவித் தொகையை பெற்று தமது பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளதோடு தற்பொழுது 300 மாணவர்கள் மெல்வா நிறுவனத்தின் மேற்படி திட்டத்தினால் பயனடைந்து வருகின்றனர்.

பல்கலைக்கழகக் கல்வியை பூர்த்தி செய்யும் வரை மேற்படி மாணவர்களுக்கு இத் திட்டத்தின் அனுகூலங்கள் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். அதற்கு மேலதிகமாக மேற்படி மாணவர் உதவித் தொகையை பெறுகின்ற மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஏற்புடைய இதர தேவைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதற்கு மெல்வா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. மெல்வா நிறுவனத்தினால் அடையாளங் காணப்படும் குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இத் திட்டத்துக்கு தெரிவு செய்யப்படுகின்றனர். பிள்ளைகளே நாட்டின் உயிர்நாடி எனும் எண்ணக்கருவை முன்னிறுத்தி வறுமை கல்வியை தடுத்து விடக்கூடாதென்ற சிந்தனையை செயற்படுத்தும் வகையில் மெல்வா நிறுவனம் இத் திட்டத்தை செயற்படுத்துகின்றது. வர்த்தக நோக்கங்களுக்கு அப்பாற் சென்று சமூகப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து வரும் மெல்வா நிறுவனம் சூழல் பாதுகாப்பு மற்றும் நகரங்களை அழகுபடுத்தல், கட்டுமானத் துறை ஊழியர்களின் தொழில் திறன்களை மேம்படுத்தல் மற்றும் தொழிற் பயிற்சி சான்றிதழ்களை பெறுவதற்கு வாய்ப்பளித்தல் போன்ற பல்வேறு சமூகப் பணிகளில் நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.

2 Comments

  • Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

  • Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close