மெல்வா நிறுவனத்தின் அனுசரணையுடன் பொலனறுவை மாவட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கும் மேசன் மற்றும் வெல்டிங் தொழிலாளர்களுக்கும் இரண்டு விஷேட செயலமர்வுகள்
இலங்கையின் உருக்குக் கம்பி உற்பத்தியில் முன்னோடியாக திகழும் மெல்வா நிறுவனம் பொலனறுவை மாவட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்காக கட்டுமானக் கைத்தொழில் தொடர்பான செயலமர்வொன்றை அண்மையில் பொலனறுவை ரூ இன் சாயா ஹோட்டலில் வெற்றிகரமாக நடாத்தியுள்ளது. இதில் சுமார் 100 தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இத்திட்டத்துக்கு இணையாக கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள மேசன் மற்றும் வெல்டிங் தொழில்களின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் அத் துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு தேசிய ரீதியாக அங்கீகாரம் பெற்ற NVQ மூன்றாம் மட்டத்தின் தகைமையை பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துடனும் விஷேட பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்றும் ஹிங்குரக்கொடை கோல்டன் ப்ளவர் ஹோட்டலில் நடாத்தப்பட்டது.
மெல்வா நிறுவனத்தின் பூரண அனுசரனையில் ஏற்பாடு செய்யப்பட்ட இத்திட்டத்தில் சுமார் 200 மேசன் மற்றும் வெல்டிங் தொழிலாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இத்திட்டத்தில் கட்டுமானப் பணிகளுக்கு சரியான தொழல்நுட்பத்தை பயன்படுத்தி உருக்குக் கம்பிகள் மற்றும் GI குழாய்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்பது தொடர்பாக அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. மேலும், இச்செயலமர்வில் பங்கெடுத்த சகலருக்கும் மெல்வா நிறுவனத்தினால் பெறுமதியான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில் கலந்துகொண்டவர்களில் தெரிவு செய்யப்பட்ட குழுவொன்றுக்கு தேசிய தொழில் பயிற்சி அதிகாரசபை அளிக்கும் NVQ மூன்றாம் மட்டத்தின் தேசிய சான்றிதழை பெறுவதற்குத் தேவையான பயிற்சி மற்றும் பூரண பங்களிப்பையும் மெல்வா நிறுவனம் வழங்கியது. இத்திட்டத்தில் பங்கேற்ற சகல மேசன் மற்றும் வெல்டிங் தொழிலாளர்களுக்கும் பெறுமதியான உபகரணத் தொகுதியொன்றை வழங்குவதற்கும் மெல்வா நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது. நாட்டின் கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள உழைப்பாளர்களுக்கு உரிய தொழில் பயிற்சியையும் தேசிய மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற எழுத்து மூல தொழில் தகைமையையும் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்துடன் மெல்வா நிறுவனம் இத்திட்டத்தை நாடெங்கிலும் முன்னெடுத்து வருகின்றது. அனுபவத்துக்கு மேலதிகமாக NVQ போன்ற அங்கீகரிக்கப்பட்ட தொழில் தகைமையினை பெற்றிருப்பது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை பெறுவதற்கான விஷேட மேலதிக தகைமை ஆகும்.