November 21, 2024
தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கும் வேல்டிங் தொழிலாளர்களுக்கும் விஷேட செயலமர்வுகளை நடாத்திய மெல்வா நிறுவனம்
Blog

தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கும் வேல்டிங் தொழிலாளர்களுக்கும் விஷேட செயலமர்வுகளை நடாத்திய மெல்வா நிறுவனம்

Nov 20, 2024

இலங்கையின் உருக்கு கம்பி உற்பத்தியில் முன்னோடியாக திகழும் மெல்வா நிறுவனம் அனுராதபுர மாட்டத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கு (Technical Officers) கட்டுமானக் கைத்தொழில் தொடர்பான செயலமர்வொன்றை அனுராதபுரம் மெங்கோ ஹோட்டலில் கடந்த நொவம்பர் மாதம் 07 ஆம் திகதியன்று நடாத்தியுள்ளது. இதில் 100 இற்கும் மேற்பட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் பங்குபற்றி பயனடைந்தனர். மேலும், இந் நிகழ்வுக்கு இணையாக கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள வேல்டிங் தொழிலாளர்களின் தொழில் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடனும் அவர்களுக்கு தேசிய ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ​NVQ மூன்றாம் நிலை தகைமையை பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடனும் சிறப்பு பயிற்சி பட்டறையொன்று நொவம்பர் மாதம் 09 ஆம் திகதி வலஸ்முல்ல முத்து விலா ஹோட்டலில் நடைபெற்றுள்ளது.

மெல்வா நிறுவனத்தின் பூரண அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் சுமார் 200 வேல்டிங் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதில் கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது மிகச் சரியான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி GI மற்றும் Box Bar எவ்வாறு கையாளப்பட வேண்டுமென்பது தொடர்பாக வேல்டிங் தொழிலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. GI மற்றும் Box Bar ஆக்கத்திறன் மிக்கதாக பயன்படுத்துவதன் மூலம் கட்டுமானத் துறையில் மேற்கொள்ளக்கூடிய மாற்றங்கள் தொடர்பாக வேல்டிங் தொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.  மேலும் செயலமர்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் மெல்வா நிறுவனம் பெறுமதியான சான்றிதழையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் பங்கெடுத்தோரில் தெரிவு செய்யப்பட்ட ஒரு குழுவினருக்கு தேசிய தொழில்பயிற்சி அதிகாரசபை அளிக்கும் ​NVQ மூன்றாம் நிலையின் தேசிய சான்றிதழை பெற்றுக்கொள்வதற்கு தேவையான பயிற்சிகள் மற்றும் நிதிப் பங்களிப்பை மெல்வா நிறுவனம் வழங்கியிருந்தது. இந் நிகழ்வில் கலந்துகொண்ட சகல வேல்டிங் தொழிலாளர்களுக்கும் பெறுமதியான உபகரணத் தொகுதியொன்றும் மெல்வா நிறுவனத்தினால் வழங்கப்பட்டது. இலங்கையில் கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள வேலையாட்களுக்கு முறையான தொழில் பயிற்சி மற்றும் தேசிய, சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட எழுத்துமூலமான தொழில் தகைமையினை பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன் மெல்வா நிறுவனம் இந்த வேலைத்திட்டத்தை நாடளாவிய ரீதியில் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. அனுபவத்துக்கு மேலதிகமாக NVQ மாதிரியான அங்கீகரிக்கப்பட்ட தகைமை இருக்க வேண்டியது உள்நாட்டு வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கான விஷேட தகைமை ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *