February 24, 2025
Maxim Impressions Lanka நிறுவனத்துக்கு சிறந்த கைத்தொழிலுக்கான தங்கப் பதக்க விருது
செய்தி

Maxim Impressions Lanka நிறுவனத்துக்கு சிறந்த கைத்தொழிலுக்கான தங்கப் பதக்க விருது

Feb 21, 2024

உயர் தரத்திலான தைத்த ஆடைகளுக்கான லேபல்கள், பொதியிடல் மற்றும் அவை சார்ந்த இதர சேவைகளை வழங்கும் Maxim Smart Manufacturing நிறுவனத்துடன் இணைந்ததான Maxim Impressions Lanka தனியார் நிறுவனம், கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய உயர் கைத்தொழில் விருது விழாவில் பாரியளவிலான பிரிவின் உயர் உற்பத்தி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப பிரிவின் தங்கப் பதக்க விருதை வென்றுள்ளது. Maxim Smart Manufacturing முன்னணி வர்த்தகநாமங்கள் பலவற்றுக்கு வர்த்தகநாம அடையாள பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்குகிறது. ஆக்கத்திறன் மிக்க செயன்முறைகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு வாடிக்கையாளர்களுக்கு உயர் தரத்திலான உற்பத்திகளை வழங்கி வரும் மேற்படி நிறுவனம் பயிற்சியுடன் கூடிய அனுபவமிக்க ஊழியர்களை கொண்டுள்ளது. இறுதி கட்டம் வரையான உற்பத்திச் செயற்பாடுகளுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணக்கருவை இணைப்பதற்கும் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நிறுவனத்தின் பொதியிடல் உற்பத்திகளில் RFID Stickers & Tags, Price Ticket, Heat Transfer Label, Hang Tag, Woven Label, Care label, Adhesive stickers ஆகியவை பிரதான உற்பத்திகளாகும். அவர்களின் ஏனைய உற்பத்திகளில் Patches, Specialty Trim, Faux Leather, Suede, Silicone, PVC, Vinyl, Zipper Pull, Grommet, Pin, String Seal, நூல் மற்றும் ரிப்பன் போன்றவை அடங்கும்.மேலும், உற்பத்தி மற்றும் களஞ்சிய (Production & warehouse) பிரிவுகளை வினைத்திறனுடன் மே்படுத்துவதற்கு கைத்தொழில்களுக்கு RFID Tracking Solution சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. Maxim Smart Manufacturing தமது உற்பத்தி செயற்பாடுகளின் போது Ginetex, International Organization for Standardization, Federal Trade Commission, UK Fashion and Textile Association, HIGG Index සහ UKFT and International Conference on Live Coding Standards போன்ற நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ள தர நியமங்களை உள்ளபடியே பின்பற்றுகின்றது. “உயர் தரத்துடன் நீண்ட காலமாக நாம் மேற்கொண்டு வரும் உற்பத்திகளும் சர்வதேச வாடிக்கையாளர்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கையுமே இந்த வெற்றிக்கு பிரதான காரணமாகும்” என Maxim Impressions Lanka  நிறுவனத்தின் பிரதிப் பொது முகாமையாளர் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல்) சுரஜி திசாநாயக்க தெரிவித்தார். Maxim நிறுவனத்தின் தலைமை அலுவலகம் தாய்வான் நாட்டில் அமைந்துள்ளதோடு, அதன் கிளை அலுவலகங்கள் இலங்கை, சீனா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, டொமினிக் குடியரசு, குவாத்தமாலா, ஸ்பெயின், ஜேர்மனி, துருக்கி, நோர்வே, இந்தியா, பங்களாதேஸ், தாய்லாந்து, வியட்னாம், பாகிஸ்தான், கம்போடியா மற்றும் தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளிலும் அமைந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close