உள்நாட்டு உணவுக் கலையின் பிரபல்யமான நாமமாக தடம் பதித்துள்ள இலங்கை ‘MAQARA’ உணவகம்
கொழும்பு உலக வர்த்தக நிலையத்துக்கு முன்னால் அமைந்துள்ள “MAQARA”, மிகக் குறுகிய காலத்திலேயே நகரின் பிரபலமான உணவகமாக தடம் பதித்துள்ளது. இந்த உணவகம் உள்நாட்டு நுகர்வோர் மத்தியில் மட்டுமல்ல, இலங்கையின் சுவையை அனுபவிக்க விரும்பும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மத்தியிலும் பிரபலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதன் ரம்மியமான சூழல், தரமான சேவை மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட உணவு மெனுவுடன், “MAQARA” பலருக்கு மறக்க முடியாத உணவு அனுபவத்தை வழங்கும் இடமாக மாறியுள்ளது.
“MAQARA” பாரம்பரிய இலங்கை காலை உணவுகளை விற்பனை செய்வதோடு பல்வேறு சுவைகளைக் கொண்ட உணவுகளை உண்பதற்கு விருப்பங் கொண்டுள்ள உணவுப் பிரியர்களுக்கு மேற்கத்திய உணவுகளையும் வழங்குகிறது. சுவை நரம்புகளை தூண்டக்கூடிய புதிதாக காய்ச்சப்பட்ட கோப்பி பானமும் இங்கு கிடைக்கிறது. பாரம்பரிய இலங்கை கறி வகைகளை உள்ளடக்கியதாக இங்கு பரிமாறப்படும் மதிய உணவு மெனுவுக்கு தனிச்சிறப்பு உண்டு. நுகர்வோருக்கு தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப 10 க்கும் மேற்பட்ட வகையான காய்கறி கறிகளைத் தெரிவு செய்யலாம். இரவு உணவிற்கு, பல்வேறு வகையான இலங்கை மற்றும் சீன உணவுகளை ருசித்து மகிழும் வாய்ப்பு உள்ளது. “MAQARA” வழங்கும் இலவச விநியோக சேவையின் கீழ், நுகர்வோருக்கு மிக எளிதாக தமது வீடு, அலுவலகம் அல்லது எந்தவொரு இடத்துக்கும் உணவுகளை தருவித்து அதன் சுவையை அனுபவிக்க முடியும். அலுவலக கூட்டங்கள், பயிற்சி நிகழ்ச்சிகள், குடும்ப நிகழ்வுகள் மற்றும் எந்தவொரு விஷேட நிகழ்வுக்கும் மொத்த ஆர்டர்களை ஏற்றுக்கொள்வதோடு அதற்கான இலவச விநியோக சேவையும் வழங்கப்படுகிறது. மேலதிக விபரங்களுக்கும் ஆர்டர்களுக்கும் 0117711311 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைக்கலாம். இந்த உணவகத்தின் தனித்துவமான விடயம் யாதெனில், “MAQARA” உணவகம் Chinese Dragon Café குழுமத்தின் இணை நிறுவனம் என்பதாகும்.

