மஹிந்திரா ஐடியல் ஃபைனான்ஸின் புதிய முகாமைத்துவப் பணிப்பாளராகவும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் திரு. முஃபத்தல் சுனியா நியமனம்
Mahindra Financeஇன் துணை நிறுவனமான Mahindra Ideal Finance Limited (MIFL) புதிய முகாமைத்துவப் பணிப்பாளராகவும், பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் திரு. முஃபத்தல் சுனியாவை நியமிப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. MIFL இன் பிரதம நிறைவேற்று அதிகாரியாக முன்னர் பணியாற்றிய திரு. துமிந்த வீரசேகர ஓய்வுபெற்றதை அடுத்து, அந்த வெற்றிடத்திற்கு திரு. முஃபத்தல் நியமிக்கப்பட்டுள்ளார்.
தனது புதிய நியமிப்பில், திரு. முஃபத்தல், குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் (SMEகள்) மற்றும் கிராமப்புற மக்களுக்கு MIFL இன் டிஜிட்டல் கடன் வழங்கும் திறன்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தவுள்ளார். மேலும் நிறுவனத்தின் வாடிக்கையாளர் மதிப்பை மேலும் மேம்படுத்தும் வகையில் நிறுவனத்தின் சேவைகளை மேலும் விரிவுபடுத்த அவர் எதிர்பார்த்துள்ளார்.
இந்த நியமனம் குறித்து Mahindra Finance நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான Raul Rebello கூறுகையில், “முஃபத்தல் மஹிந்திரா குழுமம் மற்றும் Mahindra Finance ஆகியவற்றில் பல்வேறு தலைமைப் பதவிகளை வகித்துள்ளார். இலங்கையில் ஒரு வலுவான நிதிச் சேவை வர்த்தகத்தை கட்டியெழுப்ப துமிந்தவின் பங்களிப்புக்காக நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், மேலும் எதிர்காலத்தில் MIFL இன்னும் பெரிய வெற்றியைப் பெற முஃபத்தலின் அனுபவம் உதவும் என்று நான் நம்புகிறேன்.” என தெரிவித்தார்.
Mahindra Ideal Finance நிறுவனத்தின் தலைவர் திரு. நளின் வெல்கம கருத்து தெரிவிக்கையில், “சர்வதேச அனுபவத்தைக் கொண்ட முஃபத்தல் நிறுவனத்துடன் இணைந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நிதித் துறையைப் பற்றிய அவரது விரிவான அறிவு, சந்தையில் வளரவும் வெற்றிபெறவும் புதிய வழிகளைக் கண்டறிய நிறுவனத்திற்கு உதவும்.” என தெரிவித்தார்.
Mahindra Financeஇனால் செய்த முதலீடு MIFL இன் அங்கீகாரத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது, இதன் விளைவாக நிறுவனம் Fitch Ratings மூலம் AA- (Outlook Stable) என்ற உயர் கடன் மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இந்த மதிப்பீடு MIFL நிதி ரீதியாக நிலையானது மற்றும் நம்பகமானது, இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாக அதை நிலைநிறுத்துகிறது.