January 1, 2026
Macbertan தனியார் நிறுவனத்துக்கு CNCI தங்கப் பதக்க விருது
செய்தி

Macbertan தனியார் நிறுவனத்துக்கு CNCI தங்கப் பதக்க விருது

Nov 28, 2025

வெப்ப காப்பு, ஒலி காப்பு மற்றும் பொதியிடல் துறைகளில் முன்னோடியான Macbertan தனியார் நிறுவனம் இலங்கை தேசிய கைத்தொழில் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட CNCI Achiever Awards 2025 விருது விழாவில் நடுத்தர பிரிவின் உற்பத்திப் பிரிவின் தேசிய அளவிலான தங்கப் பதக்க விருதை வென்றுள்ளது. அதன் மூலம் முழுமையான தர முகாமைத்துவம், உயர் சேவை, தொழில்முறை மற்றும் நிலைப்பேறான வளர்ச்சி ஆகிய பிரிவுகளில் அந் நிறுவனம் அடைந்துள்ள முன்னேற்றம் மீண்டும் உறுதியாகியுள்ளது. 1997 ஆம் ஆண்டில் McLarens Holdings மற்றும் Alliance Finance ஆகிய நிறுவனங்களுக்கிடையே எட்டப்பட்ட மூலோபாய கூட்டிணைவின் மூலமாக நிறுவப்பட்ட Macbertan தனியார் நிறுவனம் நாட்டின் உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளது. மேற்படி நிறுவனம் Expanded Polyethylene (EPE) Foam மற்றும் Air Bubble Sheet உள்ளிட்ட உயர் தரத்திலான அலுமினியம் மற்றும் பிளாஸ்ரிக் பேரியர் லாமினேட் ரியூப் வரை பரந்துபட்ட உற்பத்திகளை கொண்டுள்ளது. தொடக்கக் காலத்திலிருந்து தற்போது வரை உயர் தொழில்நுட்ப செயன்முறைகளுக்குட்பட்டு தொடர்ச்சியாக தமது உற்பத்திகளின் தரத்தை மேம்படுத்தியுள்ள இந் நிறுவனம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையினையும் முழுமையாக வென்றுள்ளது.

“மேம்படுத்தப்பட்ட வசதி மற்றும் பாதுகாப்பு” எனும் வாடிக்கையாளர் வாக்குறுதியின் பிரகாரம் செயற்பட்டு வரும்  Macbertan நிறுவனத்தில் 125 இற்கும் மேற்பட்ட பணியாளர்கள் சேவையாற்றுகின்றனர். நவீன தொழில்நுட்ப சாதனங்களை கொண்ட கைத்தொழிற்சாலையினை கொண்டுள்ள அதன் வர்த்தகநாமங்களில்  McFOAM, McFOIL, McFOIL Ultrawide, McWRAP Protect Plus, மற்றும்  McLAMI Tubes ஆகியவை முதன்மையாவை ஆகும். CNCI தங்கப் பதக்க விருதை வென்றதன் மூலம் Macbertan தனியார் நிறுவனம் உற்பத்தித் துறையில் அடைந்திருக்கும் உச்சத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. அதன் மூலம் புத்தாக்கம், நம்பகத்தன்மை மற்றும் உள்நாட்டு உற்பத்தித் தரத்தின் மீது நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் வெப்ப மற்றும் ஒலி தனிப்படுத்துதல் உற்பத்தி கொள்ளளவை மேம்படுத்துவதற்கும் பிராந்திய ரீதியாக பொதியிடல் தீர்வுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கும் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது. தொழில்முறை சேவைகளை எதிர்பார்த்து வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாாரர் தரப்புகளுடன் கூட்டிணைவை ஏற்படுத்திக்கொள்வதற்கும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ”இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்ற எமது சகல உற்பத்திகளையும் சர்வதேச தர நியமங்களுக்குட்பட்டு சந்தைக்கு விநியோகிப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம். இந்த விருது அதன் நிமித்தம் கிடைத்த சிறப்பானதும் பெறுமதியானதுமான ஊக்குவிப்பாகவே பார்க்கின்றோம்” என நிறுவனத்தின் உயர் முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close