February 22, 2025
லிண்டல் இண்டஸ்ட்ரியல் ஆய்வகங்கள் (LILL) உரம் மற்றும் எரிபொருள் பகுப்பாய்வுக்கான SLAB அங்கீகாரம் பெற்றது
செய்தி

லிண்டல் இண்டஸ்ட்ரியல் ஆய்வகங்கள் (LILL) உரம் மற்றும் எரிபொருள் பகுப்பாய்வுக்கான SLAB அங்கீகாரம் பெற்றது

Feb 18, 2025

லிண்டல் இண்டஸ்ட்ரியல் ஆய்வகங்கள் லிமிடெட் (LILL), இலங்கையின் தொழில்துறை முன்னேற்றத்தில் தனித்துவம் பெற்ற நிறுவனம், உரம் மற்றும் எரிபொருள் பகுப்பாய்விற்காக இலங்கை அங்கீகார வாரியத்தின் (SLAB) உயரிய அங்கீகாரத்தை பெற்றுள்ளது. லங்கா இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்ட்ஸ் லிமிடெட் (LINDEL) நிறுவனத்தின் முழுமையான துணை நிறுவனமாக செயல்படும் LILL, தொழில்துறையின் தரநிலைகளை உயர்த்தும் பணியில் சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இந்த அங்கீகாரம், LILL ஐ நம்பகமான, தரமான பகுப்பாய்வு சேவைகள் வழங்கும் நிறுவனமாக உறுதிப்படுத்துகிறது. LINDEL மற்றும் DFCC வங்கியின் கூட்டாண்மை மூலம், இலங்கையின் முதல் தனியார் தொழில்துறை வளாகமான LINDEL இன் வளர்ச்சிக்கு LILL வழங்கும் பங்குபற்றலை வலுப்படுத்துகிறது.

LILL இன் உரம் பகுப்பாய்வு சேவைகள், இலங்கையின் விவசாயத் துறைக்கு முக்கிய ஆதரவாக, Urea, Ammonium Sulphate, Triple Super Phosphate மற்றும் திரவக் கரைசல் உரங்கள் போன்ற இரசாயன மற்றும் இயற்கை உரங்களை ஆய்வு செய்கிறது. இந்த ஆய்வுகள், Sri Lankan Standards (SLS) விதிகளின் அடிப்படையில் நடப்பதால், விவசாயத்திற்கு தரமான உரங்களை வழங்குவதில் நிறுவனம் உறுதியாக செயல்படுகிறது. LILL, தொழில்துறையில் எரிபொருள் தரத்தையும் செயல்திறனையும் உறுதி செய்ய, Diesel, Lube Oil மற்றும் Furnace Oil போன்ற எரிபொருள்களை ஆய்வு செய்கிறது. இதில் Viscosity, Sulfur Content, Calorific Value போன்ற முக்கிய அளவுகோள்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. இந்த சேவைகள், தொழில்துறைகள் எரிபொருள் பயன்பாட்டில் தரச்சிறப்பை பேணுவதில் முக்கிய பங்காற்றுகின்றன.

இந்த சாதனை குறித்து, LILL நிறுவனத்தின் கூட்டத் தலைவர் திரு. ரவி தசநாயக்க கூறியதாவது: “இந்த அங்கீகாரம், எங்கள் நிறுவனத்தின் தர உறுதிப்பாட்டையும் நம்பகத்தன்மையையும் வெளிப்படுத்துகிறது. சர்வதேச தரங்களுடன் இணங்கும் ஆய்வுகள் மூலம், தொழில்துறை தேவைகளை பூர்த்தி செய்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் உறுதி செய்கிறோம்.”

LILL, உரம் மற்றும் எரிபொருள் பகுப்பாய்விற்கு அப்பால், குடிநீர் மற்றும் கழிவுநீர் பரிசோதனை, காற்று தர ஆய்வு, உணவு மற்றும் நுண்ணுயிரியல் (Microbiology) பகுப்பாய்வு உள்ளிட்ட பரந்த சேவைகளை வழங்குகிறது. தொழில்துறைகள், தேசிய சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு இணங்க செயல்படவும், தர நிலைகளைப் பேணவும், LILL இன் ஆதரவை பெறுகின்றன.

1997 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட LILL, தொழில்துறைக்கு ஆதரவான ஆய்வக சேவைகளை வழங்கி, தேசிய அளவில் முன்னணி பகுப்பாய்வு நிறுவனமாக உருவெடுத்துள்ளது. SLAB அங்கீகாரம் பெற்றதோடு, இலங்கை மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையிலும் (CEA) பதிவுசெய்யப்பட்டுள்ள இதன் செயல்திறன், தொழில்துறைகளின் நம்பிக்கையை பெற்றுள்ளது.

Lindel Industrial Laboratories Ltd (LILL) இலங்கையின் தொழில்துறை முன்னேற்றத்திற்காக, தரமான ஆய்வுகளை மேற்கொள்வதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தொழில்துறை திறமையை மேம்படுத்தும் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுகிறது. எரிபொருள் மற்றும் உரங்களின் தரத்தை உயர்த்தும் நோக்கில், LILL தொழில்துறைக்கு நம்பகமான துணையாக செயல்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close