February 5, 2025
இலங்கை நுரையீரல் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து, 2024ஆம் ஆண்டின் உலக நுரையீரல் தினத்தைக் கொண்டாடும் Lina Manufacturing
செய்தி

இலங்கை நுரையீரல் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து, 2024ஆம் ஆண்டின் உலக நுரையீரல் தினத்தைக் கொண்டாடும் Lina Manufacturing

Oct 28, 2024

Sunshine Holdings PLCஇன் மருந்து உற்பத்தி பிரிவான, Lina Manufacturing,அண்மையில் இலங்கை நுரையீரல் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து, உலக நுரையீரல் தினம் 2024 மற்றும் கல்லூரியின் முதல் நிறுவனர் தினத்தைத் கொண்டாடியது. செப்டம்பர் 29 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கல்லூரி சபையின் உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள், அங்கத்தினர்கள் உள்ளிட்ட 75க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆண்டின் நுரையீரல் மருத்துவக் கல்லூரியின் தொனிப்பொருளான, சுவாசிக்கும் உரிமைக்காக சுவாச ஆரோக்கியத்தில் சமத்துவம் என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த ஆண்டின் உலக நுரையீரல் தினத்தின் தொனிப்பொருள், ‘அனைவருக்கும் சுத்தமான காற்று மற்றும் ஆரோக்கியமான நுரையீரல்கள்’, காற்றின் தரம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியம் இடையே உள்ள முக்கியமான தொடர்பை வலியுறுத்துகிறது, இது Lina Manufacturing தனது புத்தாக்கமான சுவாசப் பொருட்கள் மூலம் உறுதியாக ஆதரித்து வருகிறது. சர்வதேச சுவாச சங்கங்களின் கூட்டமைப்பு (Forum of International Respiratory Societies – FIRS) நடத்தும் உலகளாவிய முயற்சியின் கீழ், இந்த ஆண்டின் பிரச்சாரம், ஆண்டுதோறும் சுமார் 7 மில்லியன் உயிர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய காற்று மாசுபாட்டின் பேரழிவு தாக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்ததுடன் இது நாள்பட்ட அடைப்பு நுரையீரல் நோய் (COPD), நுரையீரல் புற்றுநோய் மற்றும் சுவாச தொற்றுகள் போன்ற நிலைமைகளுக்கு பங்களிக்கிறது.

இந்த நிகழ்ச்சியில், இலங்கையில் சுவாச மருத்துவத்தை மேம்படுத்துவதற்காக பங்களிப்பு வழங்கிய இலங்கையின் சிரேஷ்ட நுரையீரல் ஆலோசனை மருத்துவ நிபுணர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்த அங்கீகாரமானது, சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கும், துறையில் இளம் மருத்துவ நிபுணர்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் பல தசாப்தங்களாக அர்ப்பணிப்புடன் செயல்படுவதை வெளிப்படுத்துகிறது. மேலும், பல சிரேஷ்ட மருத்துவ ஆலோசகர்கள், இலங்கையில் சுவாச மருத்துவத்தின் வரலாறு மற்றும் நாட்டின் நுரையீரல் ஆரோக்கியத்தின் எதிர்காலத்திற்கான வழிமுறைகள் குறித்து பிரதிபலிக்கும் முக்கிய உரைகளை நிகழ்த்தினர். இந்த நிகழ்ச்சியின் போது, சுவாச ஆரோக்கியத்தை பாதிக்கும் சமகால பிரச்சினைகளை, குறிப்பாக அதிகரித்து வரும் வளி மாசுபாடு நிலைமைகளின் பின்னணியில், எதிர்கொள்ளும் குழு விவாதமும் நடைபெற்றது.

Lina Manufacturingஇன் சந்தைப்படுத்தல் விரிவு, நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன், இலங்கை முழுவதும் சுவாச ஆரோக்கிய தீர்வுகளை மேம்படுத்துவதே தங்களது நோக்கம் என்பதற்கு ஏற்ப, தங்களது உறுதியான ஒத்துழைப்புகளை வழங்கினர்.

“இந்த முக்கியமான நிகழ்வில் பங்கேற்று, இலங்கை நுரையீரல் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து நுரையீரல் ஆரோக்கியத்தை ஆதரிப்பதில் பெருமை அடைகிறோம்” என Lina Manufacturingஇன் பிரதம நிறைவேற்று அதிகாரி Dr. ரி. சயந்தன் கூறினார். “Lina Manufacturing, பொது சுகாதாரத்திற்கு வளி மாசுபாட்டின் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலைத் தீர்ப்பதற்கான தீர்வுகளை வழங்குவதற்கு உறுதியளித்துள்ளது, மேலும் அனைத்து இலங்கையர்களுக்கும் சுத்தமான காற்று மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு நாங்கள் தொடர்ந்து உறுதியாக இருப்போம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close