September 12, 2025
2024 ஆம் ஆண்டுக்கு நிகராக 94%ஆல் தொழிற்பாட்டு செயலாற்றுகை வளர்ச்சியை பதிவு செய்துள்ள கப்ருக நிறுவனம்
செய்தி

2024 ஆம் ஆண்டுக்கு நிகராக 94%ஆல் தொழிற்பாட்டு செயலாற்றுகை வளர்ச்சியை பதிவு செய்துள்ள கப்ருக நிறுவனம்

Sep 8, 2025

கப்ருக ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனம் 30, 2025 ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலாண்டிற்கான அதன் வலுவான நிதி முடிவுகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருமானம் 14%  ஆல் அதிகரித்து LKR 448.52 மில்லியனாகவும், மொத்த இலாபம் 30% ஆல் அதிகரித்து LKR 171.19 மில்லியனாகவும் உள்ளது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுமிடத்து செயற்பாட்டு செயற்திறன் 94% ஆல் அதிகரித்துள்ளதோடு உறுதியான ஐந்தொகை மற்றும் அளவிடக்கூடிய வளர்ச்சிக்கான திறனை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் கப்ருக நிறுவனத்தின் மொத்தச் சொத்துக்களின் பெறுமதி ரூ. 1,494 மில்லியனை எட்டியுள்ளது.  அது நிறுவனத்தின் தனித்துவமான நிதிச் செயலாற்றுகை மற்றும் தொடர் வளர்ச்சிக்கான ஆற்றலை பிரதிபலிப்பதாக உள்ளது. மூலோபாய விலை நிர்ணயம், பரந்துபட்ட உற்பத்திச் செயற்பாடுகள், செலவு விடயத்தில் பேணப்பட்ட ஒழுக்கம் மற்றும் மீள் வர்த்தகநாம ஆக்கம் ஆகியவற்றால் பெற்ற நன்மைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இந்த வளர்ச்சிக்கு ஏதுவாக இருந்துள்ளன. மரபுசார்ந்த e-commerce தளத்துக்கு அப்பால் சென்று மேலான சந்தைப்படுத்தல் தளம் வரை கப்ருக நிறுவனத்தின் பயணத்தை துரிதப்படுத்திய கப்ருக Partner Central வும் இந்த வளர்ச்சிக்கு ஏதுவான பிரதான காரணியாகும். மேலும் இலங்கையின் முன்னணி வர்த்தகநாமங்களுடன் இணைந்து கூட்டு சாதனங்கள், மேலான சேவை உடன்படிக்கைகள் மற்றும் இணைந்த வழங்கல் ஊடாக தமது தொழிற்பாட்டு இயலளவை உயர்த்துவதற்கும் அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த தள மாதரி வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தெரிவுகள் மற்றும் வசதியை உறுதிப்படுத்துவதோடு கப்ருக நிறுவனத்தினதும் தொழில்முயற்சி பங்குதாரர்களினதும் அலகு பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து கிடைத்த ஐக்கிய அமெரிக்க டொலர்கள் அடிப்படையிலான கட்டளைகள், “பெட்டி பெட்டி” போன்ற மேம்படுத்தப்பட்ட சேவைகள் மற்றும் துரித விநியோகச் சேவைகள் இந்த காலாண்டுக்குரிய வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளன. “உரிய கவனம் செலுத்துதல் மற்றும் தளச் சிந்தனை மூலம் கிடைத்த பெறுபேறுகளையே நாம் இங்கு காண்கிறோம். வருமானத்தை 14% ஆலும் மொத்த இலாபத்தை 14% ஆலும் உயர்த்த முடிந்துள்ளதோடு தொழிற்பாட்டு இயலளவு 2024 ஆம் ஆண்டுக்கு நிகராக 94% ஆல் அதிகரிக்கவும் எம்மால் முடிந்துள்ளது. Partner Central மூலம் கிடைத்த நன்மைகளும் ஏராளம்” என நிறுவனத்தின் அதிபரும் தலைமை நிறைவேற்று அதிகாரியுமான திரு துலித் ஹேரத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close