பயணிகளுடன் இணைந்து மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கும் திட்டத்தை செயற்படுத்திய Kangaroo Cabs
ஒவ்வொரு ஆண்டிலும் அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதை முன்னிட்டு Kangaroo Cabs விஷேட நிகழ்ச்சித்திட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது. மேற்படி திட்டத்தின் கீழ் பயணிகள் இருக்கையின் மேல் பகுதி விஷேட QR குறியீடுடன் கூடிய இளஞ் சிவப்பு வர்ணத்திலான பட்டியொன்றினால் அலங்கரிக்கப்பட்டது. மேற்படி குறியீட்டின் மூலம் Kangaroo Cabs உத்தியோகபூர்வ இணையதளத்துக்கு பிரவேசித்து மார்பகப் புற்றுநோய் சார்ந்த முக்கிய தகவல்கள் மற்றும் மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே அறிந்து கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் குறித்த விபரங்களை வாடிக்கையாளர்களுக்கு அறிந்துக் கொள்ளக்கூடியதாக இருந்தது. இலங்கை மக்களின் நம்பிக்கையை பெரிதும் வென்ற வாடகை வாகனச் சேவை நிறுவனமான Kangaroo Cabs அன்றாடம் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குகிறது. மேற்படி நிறுவனம் விமான நிலைய பயணங்கள் தொடக்கம் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளுக்கான பிரத்தியேகப் பயணங்கள் வரை அனைத்து விதமான சேவையினையும் வழங்குகிறது. மேற்படி தனித்துவமான நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மத்தியிலும் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க முடிந்துள்ளது.
இத் திட்டத்தை பெரிதும் பாராட்டிய பயணிகள் அது தொடர்பாக சாரதிகளுடன் கருத்து பரிமாறிக்கொண்டதோடு அவர்களின் பிரதிபலிப்பு தொடர்பாக சாரதிமார் தலைமை அலுவலகத்துக்கு அறியத் தந்துள்ளனர். அதன் மூலம் இத் திட்டம் ஏற்படுத்திய சாதகமான தாக்கத்தை உணர முடிந்தது. “அன்றாட வாடகை வாகனப் பயணத்தின் மூலம் மிக முக்கிய செய்தியொன்றை மக்களிடையே கொண்டு செல்ல முடிந்தமையிமிட்டு பெருமிதம் கொள்கிறோம். இளஞ் சிவப்பு வர்ண ரிப்பன் பட்டியொன்றின் மூலம் சமூகத்துக்கு சாதகமானதொரு தாக்கத்தை ஏற்படுத்த எம்மால் முடிந்துள்ளது. சிறியதொரு செயலிலேனும் அர்த்தமிக்க ஒன்றை செய்ய முடியுமென்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.” என Kangaroo Cabs நிறுவனம் சார்பாக பேசவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்தார். Kangaroo Cabs சேவையை பெறும் ஆயிரக்கணக்கிலான பயணிகள் ஊடாக இச் செய்தியை சீராக மக்கள் மத்திக்கு கொண்டு செல்ல முடிந்துள்ளது. புற்று நோயிலிருந்து காத்திட மிகவும் பயன்மிக்க வழிமுறை முன்கூட்டியே நோயை கண்டு பிடிப்பதே என்பதை மக்களிடையே பரப்புவதன் மூலம் நல்ல பயனை அடைய முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. போக்குவரத்துச் சேவையினை வழங்குவதற்கு மேலதிகமாக சமூகப் பொறுப்புகளை குறைவின்றி நிறைவேற்றுவது Kangaroo Cabs நிறுவனத்தின் நோக்கமாகும். தொடர்ந்தும் பாதுகாப்பு மற்றும் மக்கள் நலன் கருதிய பல்வேறு திட்டங்களை செயற்படுத்துவதற்கு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. பயணிகளின் பங்களிப்பையும் பெறும் வகையில் அத்திட்டங்களை வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. www.kangaroocabs.com மூலம் மேலதிக விபரங்களை பெற முடியும்.

