January 2, 2025
BYD காட்சியறை மற்றும் சேவை மையத்தைத் திறக்கும் John Keels CG Auto: Plug-in Hybrid BYD SEALION 6 DM – i அறிமுகம்
செய்தி

BYD காட்சியறை மற்றும் சேவை மையத்தைத் திறக்கும் John Keels CG Auto: Plug-in Hybrid BYD SEALION 6 DM – i அறிமுகம்

Aug 17, 2024

இலங்கையில் BYD பயணிகள் வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keels CG Auto ஆனது, Plug-in Hybrid BYD SEALION 6 DM – i இன் அறிமுகத்துடன் கொழும்பில் BYD காட்சியறை மற்றும் சேவை மத்திய நிலையத்தை திறந்து வைத்துள்ளது.

கொழும்பு 02, யூனியன் பிளேஸ், இல 447 இல் அமைந்துள்ள காட்சியறையில் நடைபெற்ற இந்த பிரமாண்டமான திறப்பு நிகழ்வில், BYD Auto Industry Co. Ltd, ஆசிய – பசிபிக் ஆட்டோ விற்பனைப் பிரிவின் பொது முகாமையாளர், Liu Xueliang, John Keells குழுமத்தின் தலைவர், Krishan Balendra மற்றும் CG Corp Global இன் முகாமைத்துவப் பணிப்பாளர் Nirvana Kumar Chudhary உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய BYD Auto Industry Co. Ltd, Auto Sales பிரிவின் (ஆசிய-பசுபிக்) பொது முகாமையாளர், Liu Xueliang, இலங்கைக்கு ஒரு நிலைத்தன்மைக் கொண்ட போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்பை ஏற்றுக்கொள்ள ஆதரவளிப்பதாக உறுதியளித்தார். அவர் மேலும் கூறுகையில், “கடந்த 27 ஆண்டுகளில், பல்வேறு பிராந்தியங்களில் நிலைத்தன்மைக் கொண்ட போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் ஒவ்வொரு அம்சத்தையும் சரியானதாக மாற்ற நாங்கள் பணியாற்றி வருகிறோம். பேட்டரிகள், மின்சார மோட்டார்கள், இலத்திரனியல் கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் Automotive Grade Chips வரையிலான தொழில்நுட்பங்களில் எமக்கு காணப்படும் நிபுணத்துவம் மற்றும் அனுபவம் ஆகியன, புதிய ஆற்றல் வாகனங்களில் (New Energy Vehicles) உலகளாவிய ரீதியில் எம்மை முன்னணியில்  வைத்துள்ளது. இந்த அறிவையும் நிபுணத்துவத்தையும் இலங்கைக்கு வழங்குவதன் மூலம், ஒரு நிலைத்தன்மை கொண்ட போக்குவரத்துத் துறையை உருவாக்குவதற்கு நாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்குவதிலும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என தெரிவித்தார்.

இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாவது Plug-in Hybrid வாகனமான BYD SEALION 6 DM-i, உற்பத்தியாளரின் மேம்பட்ட மின்சார அடிப்படையிலான Dual Motor – Intelligence (DM-i) Plug-in Hybrid தொழில்நுட்பத்தைக் காட்டுகிறது. மேலதிக தேவைக்காக ஒரு இன்ஜின் ஐ கொண்டிருப்பதுடன் , BYD SEALION 6 அதன் High-power motor drive மற்றும் Large-capacity Power battery என்பனவற்றை பிரதான விநியோகமாக (Supply) கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

SEALION 6 DM – i இன் தொழில்நுட்பத் திறனில், ஒரு உயர் செயல்திறன் கொண்ட இன்ஜின் மற்றும் ஒரு மின்சார ஹைப்ரிட் அமைப்பு ஆகியவை அடங்கும், இது 30% எடை மற்றும் அளவு இரண்டையும் குறைக்கும் ஒரு ஒருங்கிணைந்த Powertrain ஐ கொண்டுள்ளது. 1092 கிலோமீட்டர் என்ற ஈர்க்கக்கூடிய வரம்புடன், SEALION 6, 15.6-Inch rotating touchscreen, ஒரு பாதுகாப்பான head-up display, Ocean Aesthetics Design Concept மற்றும் Oceanic Crystal gear lever போன்ற அதிநவீன அம்சங்களை ஒருங்கிணைக்கிறது. நாட்டில் புதிய தலைமுறை வாகனங்களுக்கு முழுமையான சேவையை வழங்குவதற்காக எமது சேவை நிலையம் எதிர்பார்க்கிறது. கொழும்பு 2, வாக்ஸ்ஹால் வீதி, 186 இல் அமைந்துள்ள இந்நிலையம் , இலங்கையில் முதல் NEV-சார்ந்த வாகனச் சேவை  நிலையத்தைக் கொண்டுள்ளது. John Keels CG Auto இல் இருந்து வாங்கப்பட்ட முழு மின்சார வாகனங்கள் மற்றும் Plug-in Hybrid வாகனங்களுக்கு சேவை செய்வதற்கு பொருத்தப்பட்ட இந்த அதிநவீன வசதிகளைக் கொண்ட நிலையம், BYD ஆல் பயிற்சி பெற்ற பொறியாளர்கள் மற்றும் நிபுணர்களை அணுகும் வாய்ப்பையும் வழங்குகிறது. மேலும், இந்த சேவை நிலையத்தில் உயர் மின்னழுத்த (HV) பழுது மற்றும் சேவைகளுக்கான சிறப்பு கருவிகள் மற்றும் உபகரணங்கள் ஆகியனவும் காணப்படுகின்றன.

குறிப்பாக, துல்லியமான பராமரிப்பை உறுதிசெய்வதற்காக இந்த சேவை நிலையம்,, வாகனத்தில் ஏற்படும் கோளாறுகளைக் கண்டறியும் அமைப்பு (VDS), ரேடார் அளவீட்டு அமைப்பு மற்றும் Battery சோதனை உபகரணங்கள் போன்ற தனித்துவமான BYD  கருவிகளைக் கொண்டுள்ளது.. மேலும் இந்த சேவை மத்திய நிலையத்தில், வாகன சார்ஜிங் மற்றும் சோதனை நோக்கங்களுக்காக 30kW வேக சார்ஜர் மற்றும் 7kW Wall charger என்பன பொருத்தப்பட்டுள்ளன.

கூடுதல் அம்சங்களாக, வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட பேட்டரி சேமிப்பு அறை (Temperature Controlled battery Storage Room), Body மற்றும் Paint பழுதுபார்க்கும் வசதிகள், வாகன detailing, Wheel Alignment, Brake Bleeding, A/C recharging மற்றும் முழுமையான Washing வசதிகள் ஆகியவை அடங்கும். மேலும், மேம்பட்ட Water Treatment Plant மற்றும் அனைத்து தொழில்துறை தரநிலைகளையும் பூர்த்தி செய்யும் கடுமையான தீ பாதுகாப்பு நெறிமுறைகளை நிறுவுவதன் மூலம் நிறுவனம் சுற்றுச்சூழல் இணக்கத்தையும் உறுதி செய்கிறது.

நிலைத்தன்மை கொண்ட போக்குவரத்தில் புதிய சகாப்தத்தின் விடியல் பற்றி கருத்து தெரிவித்த John Keells Holdings தலைவர் Krishan Balendra, “நவம்பர் 2023 இல் BYD உடனான எங்கள் கூட்டாண்மை, John Keells குழுமத்திற்கும் இலங்கையின் ஆட்டோமொபைல் துறையிற்கும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தது. சுத்தமான, மிகவும் திறமையான போக்குவரத்து தீர்வுகளை நோக்கிய ஒரு மாற்றத்தை வழங்கும் இந்த கூட்டாண்மை, நிலைத்தன்மை மற்றும் புத்தாக்கத்திற்கான எங்கள் அர்ப்பணிப்புடன் ஒத்துப்போகிறது. BYD இன் மேம்பட்ட புதிய எரிசக்தி வாகனங்களை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம், நாங்கள் எங்கள் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், நாட்டின் பரந்த சுற்றுச்சூழல் தொடர்பான இலக்குகளையும் ஆதரிக்கிறோம்.”

“புதிய சக்தி வாகனங்களுக்கான வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கும் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம், இதில் ஒரு விரிவான சார்ஜிங் உட்கட்டமைப்பை நிறுவுதல், ஒரு நவீன சேவை மத்திய நிலையத்தை உருவாக்குதல், நிலையான விநியோக சங்கிலியை உறுதி செய்தல் மற்றும் திறமையான தொழில்நுட்ப நிபுணர்களுக்கு இந்த மாற்றத்தை ஆதரிக்க வேலைவாய்ப்புகளை வழங்குதல் ஆகியவை அடங்கும். இந்த முயற்சி ஒரு பசுமையான எதிர்காலத்திற்கான வழியை வகுப்பதுடன் இலங்கையில் ஒட்டுமொத்த இயக்க அனுபவத்தையும் மேம்படுத்தும் எனவும் நாம் நம்புகிறோம்.” என தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த CG Corp Global இன் முகாமைத்துவப் பணிப்பாளர் Nirvana Kumar Chaudhary, “நிலையான வளர்ச்சியை நோக்கிய இலங்கையின் பயணத்தை ஆதரிப்பதில் CG Corp Global பெருமை கொள்கிறது. BYD இன் மேம்பட்ட NEVகளை அறிமுகப்படுத்துவது, நமது சுற்றுச்சூழல் இலக்குகளை அடைவதில் ஒரு முக்கிய பங்கை வகிக்கும். இலங்கையில் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் புத்தாக்கத்தை வளர்ப்பதற்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.” என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close