October 26, 2025
Java Lounge நிறுவனத்துக்கு 04 Sri Lankan Entrepreneur of the Year விருதுகள்
செய்தி

Java Lounge நிறுவனத்துக்கு 04 Sri Lankan Entrepreneur of the Year விருதுகள்

Sep 27, 2025

இலங்கையின் முன்னணி கோப்பி உணவக வலையமைப்பான Java Lounge நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி அனுராதா மாலிமகே ஆண்டின் சிறந்த தொழில்முனைவோர் 2025 விருது விழாவில் 04 விருதுகளை வென்றுள்ளார். இலங்கை வணிக மற்றும் கைத்தொழில் சபை ஏற்பாடு செய்த மேற்படி விருது விழாவில் ஆண்டின் சிறந்த தொழில்முயற்சியாளர் (தேசிய மட்டம்), ஆண்டின் சிறந்த  தொழில்முயற்சியாளர் (மேல் மாகாணம்), தேசிய வெள்ளிப் பதக்க விருது (பாரியளவிலான பிரிவு) மற்றும் மாகாணத் தங்கப் பதக்க விருது (பாரியளவிலான பிரிவு – மேல் மாகாணம்) ஆகிய விருதுகளையே அவர் வென்றுள்ளார். 

Java Lounge நிறுவனத்தை நாடளாவிய ரீதியில் ஏராளமான கிளைகளை கொண்ட நாடடின் விசாலமானதும் மக்களின் நம்பிக்கையை பெரிதும் வென்றதுமான கோப்பி உணவக வலையமைப்பாக கட்டியெழுப்புவதற்கு அவர் அளித்த ஆகச் சிறந்த பங்ளிப்புக்காகவே இதன் போது அவர் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். தரமான கோப்பி பானமொன்றை சுவைப்பதற்கு நுகர்வோர்களுக்கு வாய்ப்பளிக்கும் பெரிஸ்டார்கள் தொடக்கம் சமையலறை, பேக்கரி மற்றும் சொக்லட் உற்பத்தி ஆகிய சகல பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல பணியாட்டொகுதி அங்கத்தவர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த பாராட்டாகவும் இதனை கருத முடியும். “எமது முகாமைத்துவப் பணிப்பாளரான திருமதி அனுராதா மாலிமாகே ஹேரத் Java Lounge பணியாட்டொகுதியுடன் ஆண்டின் சிறந்த தொழில்முனைவோர் விருது விழாவில் பாராட்டி கௌரவிக்கப்பட்டமை பெருமைக்குரிய விடயமாகும். தலைமைக்கு கிடைத்த அங்கீகாரத்தை விடவும் அர்ப்பணிப்புடன் நுகர்வோர்களுக்கு மேம்பட்டதும் தரமானதுமான சேவையினை வழங்கியமைக்காக பணியாட்டொகுதிக்கு கிடைத்த பாராட்டாகவும் இதனை பார்க்க முடியும். பெரிஸ்டார்கள் தொடக்கம் பேக்கரி, சொக்லட், தொழிற்பாடு மற்றும் இதர சகல உதவிப் பிரிவுகளிலும் பணியாற்றும் அனைவரும் இந்த விருதுகளுக்கு சொந்தக்காரர்களே.” என நிறுவனத்தின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.  .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close