
அனைத்து இலங்கையருக்கும் Galaxy ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை வாங்கும் கனவை நனவாக்கும் Samsung Exclusive Easy Pay திட்டம் அறிமுகம்
Samsung Sri Lanka “சாம்சங் எக்லூசிவ் ஈஸி பே” (Samsung Exclusive Easy Pay) என்ற மாதாந்த தவணை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் இலங்கை மக்கள் புதிய Samsung Galaxy ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் tablets-களை எளிதாக வாங்க உதவுகிறது. John Keells Office Automation (JKOA), ஹெலியோஸ் (Helios), மற்றும் அலயன்ஸ் பைனான்ஸ் ((Alliance Finance-AFC)) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்த திட்டம், நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில், எளிதான முறையில் Samsung தயாரிப்புகளை வாங்கும் வாய்ப்பை வழங்குகிறது.
Samsung Exclusive Easy Pay திட்டம் மாதத்திற்கு ரூ. 3,530 முதல் தொடங்கும் நெகிழ்வான தவணைத் திட்டங்களை வழங்குகிறது. இது 3 முதல் 24 மாதங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்பணம் எதுவும் தேவையில்லை. உத்தரவாதம் அளிப்பவர்களோ அல்லது கடனட்டைகளோ தேவையில்லை. 0% முன்பணம் உள்ளிட்ட பல வாடிக்கையாளர் நன்மைகள் காரணமாக, இது சந்தையில் உள்ள மற்ற EMI திட்டங்களை விட மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது.
ஆரம்ப நிகழ்ச்சியில் உரையாற்றிய Samsung Sri Lanka-வின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. SangHwa Song, “Samsung Exclusive Easy Pay என்பது வெறும் ஒரு பணம் செலுத்தும் திட்டம் மட்டுமல்ல. இது புத்தாக்கத்தை அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் எமது குறிக்கோளை பிரதிபலிக்கிறது. JKOA, Helios மற்றும் Alliance Finance ஆகியவற்றுடன் இணைந்து, இன்றைய இணைக்கப்பட்ட உலகில் வெற்றி பெற தேவையான தொழில்நுட்பத்தை இலங்கை மக்கள் பெறுவதற்கு உதவும் ஒரு தீர்வை கொண்டுவந்ததில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.” என தெரிவித்தார்.
இந்த கூட்டாண்மை பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட John Keells Office Automation இன் பிரதம நிறைவேற்று அதிகாரியும், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் சிரேஷ்ட துணைத் தலைவருமான திரு. Janoda Thoradeniya, “Samsung Exclusive Easy Pay என்பது நவீன தொழில்நுட்பத்தை இலங்கை மக்களுக்கு மேலும் எளிதில் கிடைக்கச் செய்வதற்கான எமது கூட்டு அர்ப்பணிப்பை காட்டுகிறது. Samsung இன் நவீன புத்தாக்கங்கள், JKOA-வின் பரந்த சில்லறை விற்பனை வலையமைப்பு மற்றும் எமது நம்பகமான பங்காளிகளின் நிதி ஆதரவு ஆகியவற்றின் ஒன்றிணைவின் மூலம், உயர்தர சாதனங்களை சாதாரண வாடிக்கையாளருக்கு நெருக்கமாகக் கொண்டுவரும் ஒரு வலுவான தீர்வை நாங்கள் வழங்குகிறோம்.” என தெரிவித்தார்.
இந்த அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த ஹெலியோஸ் P2P நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. Nuzhi Meyen, “இந்த கூட்டாண்மை இலங்கை மக்கள் அவசியமான தொழில்நுட்பத்தை அணுகும் முறையை மாற்றியமைக்கும் ஒரு துணிச்சலான முயற்சியாகும். Samsung Exclusive Easy Pay திட்டம் போன்ற ஃபின்டெக் அடிப்படையிலான தவணை முறை தீர்வுகளை பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளைப் பெறுவதற்கு வழிவகுத்து, குறைந்த விலை, வசதி மற்றும் டிஜிட்டல் அதிகாரமளித்தலை அன்றாட வாழ்க்கையின் முன்னணிக்கு கொண்டுவருகிறோம்.” என தெரிவித்தார்.
இதில் கலந்துகொண்ட Alliance Finance இன் உதவி முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. குசல் ஜயவர்தன கருத்து தெரிவிக்கையில், “நிரந்தர நிதி சேவைகளில் முன்னோடியாக, இந்த கூட்டாண்மை சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் மலிவான, குறைந்த தொகை கடன்களை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. Samsung Exclusive Easy Pay தளத்தின் மூலம், நாங்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்திற்கான அதிக அணுகலை ஆதரிப்பதோடு மட்டுமின்றி, குறைந்த செலவிலான, தவணை அடிப்படையிலான தீர்வுகளுடன் தனிநபர்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் நிதி உள்ளடக்கத்தையும் மேம்படுத்துகிறோம்.” என்று கூறினார்.
Samsung Exclusive Easy Pay திட்டத்தின் முக்கிய அம்சம் அதன் எளிமையான வாடிக்கையாளர் நட்பு செயல்முறையாகும். விண்ணப்பதாரர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைனில் கடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம். ஒப்புதல் கிடைத்தவுடன், முதல் தவணைத் தொகையை செலுத்தி தங்கள் சாதனத்தை பெற்றுக்கொள்ள ஒரே ஒரு முறை மட்டுமே விற்பனை நிலையத்திற்குச் செல்ல வேண்டும். இது அனுபவத்தை எளிமைப்படுத்தி விலைமதிப்புள்ள நேரத்தை சேமிக்கிறது.
Easy Pay திட்டத்தின் மூலம் Galaxy சாதனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு TRCSL அங்கீகரிக்கப்பட்ட உண்மையான Samsung தயாரிப்புகள் கிடைக்கின்றன. ஒவ்வொரு வாங்கலும் நிறுவன உத்தரவாதத்துடன் மற்றும் இரண்டு ஆண்டுகள் வரை இலவச திரை மாற்றீட்டு வாய்ப்புடன் வருகிறது. இந்த திட்டம் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து Samsung விற்பனையாளர்கள் மற்றும் விற்பனை நிலையங்கள் மூலம் நாடு முழுவதும் கிடைக்கிறது. இதனால் நகர மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களும் இதை எளிதாக பயன்படுத்த முடிகிறது.
Samsung மாதாந்த கட்டண முறையையும் எளிமைப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் தானியங்கி பற்று (auto debit), ஆன்லைன் வங்கி பரிமாற்றங்கள், Cargills Food City சுப்பர்மார்க்கெட்டுகள் அல்லது Alliance Finance கிளைகளில் நேரடி கட்டணங்கள் போன்ற பல வசதியான கட்டண முறைகளைத் தேர்வு செய்யலாம். இவை வாடிக்கையாளரின் அன்றாட வழக்கங்களுக்கு ஏற்ப கட்டணங்களை எளிதாக செலுத்த உதவுகின்றன.
இந்த திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சம், ஃபிளாக்ஷிப் மாதிரிகள் (flagship models) உட்பட Samsung இன் முழு Galaxy வரிசையையும் உள்ளடக்கியது. உதாரணமாக, நவீன Samsung Galaxy S25 Ultra 5G Easy Pay திட்டத்தின் கீழ் மாதத்திற்கு வெறும் ரூ. 24,923 மட்டுமே செலுத்தி பெறலாம். இன்றைய பொருளாதார நிலைமையில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில், அதிக முன்பணச் சுமை இல்லாமல் உயர்தர தொழில்நுட்பத்திற்கான முன்னெப்போதும் இல்லாத வாய்ப்பை இது வழங்குகிறது.
Samsung Exclusive Easy Pay இன் அறிமுகம் அனைவரையும் உள்ளடக்கிய புத்தாக்கத்தை வழங்குவதில் Samsung Sri Lanka-வின் அர்ப்பணிப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். நிதித் தடைகளை அகற்றி, JKOA, Helios மற்றும் Alliance Finance போன்ற நம்பகமான உள்ளூர் நிறுவனங்களுடன் இணைவதன் மூலம், Samsung நவீன மொபைல் தொழில்நுட்பத்தை இலங்கை முழுவதும் அணுகக்கூடியதாக மாற்றுகிறது. இது வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் மக்கள் தொடர்பில் இருக்க, உற்பத்தித்திறனுடன் செயல்பட மற்றும் ஈடுபாட்டுடன் இருக்க உதவுகிறது.
Samsung Exclusive Easy Pay பற்றிய மேலதிக விபரங்களுக்கு, https://heliosp2p.com/samsung/welcome என்ற இணையத்தளத்தை பார்வையிடவும் அல்லது Helios வாடிக்கையாளர் சேவை தொலைபேசி இலக்கம் 0117 110 881 ஐ அழைக்கவும்.
* விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும். செயலாக்க கட்டணங்கள் மற்றும் 25 W Travel Adaptor உள்ளடக்கப்பட்டுள்ளன.